author

“ இவர்கள் சாகக்கூடாதவர்கள் ”

This entry is part 23 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

-இராஜசோழன் பத்திரிகை செய்தி படித்ததும் இவன் சாக வேண்டியவன் தான் என்று தோன்றியது.முதல் பக்கத்தில் வண்ணத்தில் படம் போட்டு செய்தி போட்டிருந்தார்கள்.வாரத்திற்கு இரண்டு,மூன்று செய்திகள் இப்படி வந்து விடுகின்றன. பிற மொழிப் பத்திரிகையில் அரிதான தற்கொலை செய்திகள் மட்டும் தான் வரும்..சீன மொழிப் பத்திரிகைகளில்….. தெரியவில்லை.முன்பு தோட்டத்தில்,ஆமெங்…ஆச்சோய் எல்லாம் எத்தனை உதவியாக இருந்தார்கள்?அப்படி இதுப்போன்று செய்திகள் வராதிருந்தால்…….. ‘அட போங்கடா நீங்களும் உங்க பத்திரிகையும்’ என்று தமிழிலேயேப் பேசி என் சந்தேகம் தீர்த்திருப்பார்கள். இப்போது பட்டணத்து சீனன் […]

வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு

This entry is part 22 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வெளியீடாக வேர் அறுதலின் வலி என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 21 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்ட்ட நிகழ்வினையொட்டி யாழ் வலைத்தளம் நிகழ்த்திய போட்டிக்காக வந்து சேர்ந்த கவிதைகளை இத்தொகுப்பு ஏந்தி நிற்கிறது. வரலாற்றுப் பதிவாகவும், ஆழ் மனசில் வேரூன்றிய வலிகளின் வெளிப்பாடாகவும் இங்கு 127 பக்கங்களில 55 கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. வெளிந்துள்ள விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கே இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. […]

உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 21 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் உனக்கான பாடல் என்ற கவிதைத் தொகுதி சரா பதிப்பகத்தினூடாக கவிஞர் எஸ். ரபீக் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 60 பக்கங்களை உள்ளடக்கி அழகிய அட்டைப் படத்துடன் இத்தொகுதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலி மற்றும் பிறை எப். எம். ஆகியவற்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றும் இந்த நூலாசிரியர் ஏற்கனவே அவளில்லாத குளிர், எழுத மறந்த கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இத்தொகுதியில் காதல் கவிதைகளே முழுவதுமாய் இடம்பிடித்துள்ளன. மறைந்த […]

தார் சாலை மனசு

This entry is part 16 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

முகில் தினகரன் காலையில் தலைமை ஆசிரியரிடம் வாங்கிய திட்டுக்களின் தாக்கம் காரணமாக பத்மாவதி டீச்சரால் அன்று முழுவதும் பாடம் நடத்தவே முடியாமல் போனது. ‘ச்சை…மனுசனா அந்தாளு?…லேடீஸ்ன்னு கூடப் பார்க்காம என்னமாத் திட்டிட்டான்!….இதே திட்டுக்களைவ Pட்டுல தன் பொண்டாட்டி கிட்டக் காட்டுவானா?….பிச்சுப் போடுவா!…அதான் அங்க காட்ட முடியாததை இங்க வந்து காட்டறான்!…வெத்து வேட்டு!” ‘ம்…ஸ்டூடண்ட்ஸ்…இன்னிக்கு எனக்கு ரொம்பத் தலைவலியா இருக்கு…ஸோ…புதுப்பாடம் எதுவும் எடுக்க முடியாது!….நீங்கெல்லாம் நேத்திக்கு நான் சொல்லிக் குடுத்த பாடத்தையே மறுபடி ஒரு தரம் நல்லாப் படிச்சு…மனப்பாடம் […]

எஸ்ராவின் உறுபசி – தீராத மோகம்

This entry is part 10 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

பாஸ்கர் லக்ஷ்மன் ஜனனமும் மரணமும் நம் வாழ்வின் தொடர் நிகழ்வுகள். மரணம் பல சமயங்களில் நமக்கு ஒரு செய்தியாக மட்டும் நின்று விடுகிறது. ஆறு வயது குழந்தை இறந்த செய்திக்கு, அதன் பெற்றோரை நினைத்து வருந்துகிறோம். நாற்பது வயதில் ஒருவர் காலமான செய்தியைக் கேட்கும்போது, “கடங்காரன், அற்ப ஆயுளில் போய் விட்டானே!” என அவன் குடும்பத்தை நினைத்து ஒரு பெருமூச்சு. நன்றாக வாழ்ந்து 70 அல்லது 80 வயதில் இறந்த செய்திக்கு, கல்யாணச் சாவு என டிகிரி […]

தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது 2012 ஆம் ஆண்டு பெறுபவர் அம்ஷன் குமார்

This entry is part 2 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

  நண்பர்களே, மாற்று திரைப்பட வளர்ச்சிக்காகவும், மாற்று திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தவும் தமிழ் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட “லெனின் விருது” இந்த ஆண்டு ஆவணப்பட / திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். திரையரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில்.. அம்ஷன் குமார் அவர்களுக்கு லெனின் விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு அவரது படைப்புகள் தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படுகிறது. சென்னை, […]

அதிகார நந்தீசர் – புத்தக வெளியீட்டு விழா

This entry is part 1 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஆய்வாளர் நாமக்கல் நந்தர் (எ) தங்கம் விஸ்வநாதன் எழுதிய அதிகார நந்தீசர் என்னும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா. நாள்: ஞாயிற்றுக் கிழமை, ஆகஸ்டு 12, 2012. நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. (தேநீர்: காலை 9:45) இடம்: ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், உயர்நீதி மன்றம் எதிரில், பாரி முனை, சென்னை. நிகழ்ச்சி நிரல் கடவுள் வாழ்த்து: செல்வி க. காயத்திரி, ஜெயா டி.வி. புகழ் லிட்டில் மாஸ்டர். குத்துவிளக்கு […]

கொடுக்கப்பட பலி

This entry is part 33 of 35 in the series 29 ஜூலை 2012

சிறகுகளில் கூடுகட்டி காத்திருந்த சிலந்தி உணர்வுகளை உணவாக்கிய பொழுதொன்றில், யாருக்கும் கிடைக்காத ஓரிடம் தேடி ஒதுங்க விளைந்த மனது, நிராகரிப்பின் வலியொன்றில் மலரெடுத்து சூடி வாழ்வியலின் ஆரோகனிப்பை _அந்த நாற்றத்துள் மறைத்துக்கொண்டு இயங்கத்தொடங்கிற்று. நிபந்தனைகளையும் நிர்ப்பந்தங்களையும் சபிப்புகளையும் சம்பிரதாயங்களையும் சடங்காகவே கொண்டு, கவனிக்கப்படுதல் மீதொரு கவனம்வைத்து தன்னிலை மறந்து அவதானிக்க தொடங்கியது………………. பின் , தோற்றுப்போன பொழுதொன்றில் ஆழிசூழ் ஆழத்தில் முத்துக்களுக்கு பக்கத்தில் பேச்சடங்கி கிடந்தது கலைஞனின் குரல். ஆக்கம்:நேற்கொழு தாசன் வல்வை

தரிசனம்

This entry is part 28 of 35 in the series 29 ஜூலை 2012

  அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் மாம்பழங்கள்.   இமாம்பசந்த், பங்கனப்பள்ளி மல்கோவா, ருமேனி என ஒவ்வொன்றின் சுவையும் எப்படி வேறென மாம்பழம் சாப்பிடும் அம்மாவின் முகமே சொல்லும்.   மாயவரம் பக்கம் அம்மாவின் அண்ணன் இருந்ததால் பாதிரியை கிறிஸ்தவப் பழம் என அதிகம் கொண்டாடுவாள்.   மடியை விட்டகலாத கன்றென நார்ப்பழங்களின் சப்பின கொட்டையை தூக்கி எறிய மனதற்றிருக்கும் எங்களை ” எச்சில் கையோடு எவ்வளவு நேரம் ” ? என ஒருபோதும் வைததில்லை அம்மா.   […]

கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் 17 ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு

This entry is part 17 of 35 in the series 29 ஜூலை 2012

1996 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த பதினாறு ஆண்டுகளாக, ஆண்டுதோறும் கவிஞர் சிற்பி அறக்கட்டளை தமிழகத்தின் சிறந்த கவிஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வரிசையில் 17ஆம் ஆண்டுக்கான விருது மற்றும் பரிசுகள் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் வானம்பாடிக் கவிஞர் தேனரசன்ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர்களுள் ஒருவரும் வெள்ளைரோஜா. மண்வாசல். காலத்தோடு ஆகிய கவிதைத்தொகுதிகள் நல்கியவ்ரும் ஆன கவிஞர் தேனரசன் சிறந்த ஆய்வாளரும் கூட. கங்கை கொண்டான் கவிதைகளை […]