.. சாமக்கோடாங்கி ரவி என்ற பெயரில்25 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்100 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக பல சாதனைகள் புரிந்தவர். 0 மூத்த வழக்கறிஞர் திரு ரவி அவர்கள் 27/11/24 எதிர்பாராத விதமாக உடற்பயிற்சி மையத்தில் கீழே விழுந்ததனால் ஏற்பட்ட. தலைக்காயத்தின் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் காலமாகிவிட்டார் எனும் துயர செய்தியை அறிந்து வேதனையுறுகின்றோம் . 00 திருப்பூர் இலக்கிய விருதுக்காக வந்த நூல்கள் அவர் முகவரியில் இருந்ததை சென்ற வாரம் […]
சுப்ரபாரதிமணியன் இன்றைய கவிதை உலகம் சூரியனுக்கு கீழ் உள்ள சகலத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இன்றைக்கு இருக்கிற சாதி அதிகாரம், தொழில்நுட்ப அதிகாரம் பற்றியும் கவிதை உலகம் விமர்சிக்கிறது.. வார்த்தைகளின் கூட்டமாக பல கவிதைகள் உற்பத்தியாகி வருகின்றன. ஆனால் கவிதை பற்றிய அரசியலும் அதன் தளங்களும் கொண்டு இயங்குகிற கவிதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன.. நையாண்டி தனம் என்பது இன்றைய கவிதையின் முக்கியமான விஷயமாக எனக்கு படுகிறது படைப்பாளன் வாசகன் இரண்டு பேர் இணையும் விஷயங்கள் தான் வெற்றி பெற்ற கவிதைகள் ஆகின்றன. . கவிதைகளில் பலம் தினசரி வாழ்க்கையின் அனுபவங்களை, அதிர்வு கொண்ட விஷயத்தை இணைப்பதுதான்.. கிராமங்களும் அதன் சுற்றுச்சூழல் சார்ந்த […]
சுப்ரபாரதிமணியன் பாலஸ்தீனத்து பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் நடமாட்டம்….. அவர்களின் கைகளில் இருக்கும் துப்பாக்கிகளையும் பார்வையையும் கண்டு பயந்து மக்கள் ஒளிந்து கொள்கிறார்கள். வீட்டுக் கோழிகள் கூட அங்கிருக்கும் ஆலிவ் மரங்களில் ஏறி கை தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றன. ஆலீவ்மரத்து கிளை துணுக்கு ஒன்றை ஒரு சிறுவன் ஒரு இஸ்ரேல் ராணுவ வீரனுக்கு பரிசு போல் தருகிறான். தூரமிருந்து பயத்துடன் வேடிக்கை பார்க்கும் அவன் அம்மாவின் கையில் வெங்காயம் இருக்கிறது. ஏதாவது கண்ணீர் புகை வீச்சு இருந்தால் உடனடியாக […]
“ கருப்புக் கண் “ என்று அந்த போலீஸ்காரர் தியாகராஜனைப் பார்த்துச் சொன்னார் .அவர் வழக்கமான சீருடை அணிந்து இருக்கவில்லை .நன்கு சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் நீல பூக்கள் இருந்தன .அவரின் தலை கேசம் காவல் துறை சார்ந்த மனிதரின் அலங்காரமாக இல்லாமல் புதிதாக இருந்தது. இன்றைய கல்லூரி மாணவர்கள் போட்டுக்கொள்ளும் தலைக்கேச வேஷம் போல் இருந்தது. அந்த அறைக்கு வந்து செல்பவர்களில் பாதிப்பேர் இப்படித்தான் காவல்துறை உடுப்பு இல்லாமல் இருந்தார்கள். பலர் வெள்ளை சட்டையில் இருந்தார்கள். அவனை அடித்தவர்கள் யாரென்று அடையாளம் காண முடியாதபடி பலர் வந்து […]
கண்களிலிருந்து நீர் வழிந்தது ஜெயலட்சுமிக்கு . தலையில் ஊற்றிய நீர் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது .கண்ணீரும் குளியல் நீரும் கலந்து உடம்பு முழுக்க ப் பரவியது. குளியல் அறைக்கு வந்து விட்டால் ஜெயலட்சுமிக்கு எல்லா கவலைகளும் வந்துவிடும். அழுது த்தீர்ர்ப்பாள். கண்களிலிருந்து நீர் வழிய வழிய மனதின் கவலைகளை இறக்கி வைப்பாள் . இந்தச் சுற்றுலாப் பயணத்தில் கூட அவளுக்கு விருப்பமில்லை .மூட்டு வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது ..சரியாக நடக்க முடியவில்லை .அதுவும் இப்படியான இடத்தில் வந்து செங்குத்தான இடத்தில் ஏறுவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது .. ஆகவே உணவு விடுதிக்குச் செல்லாமல் மகளே உணவைக்கொண்டு வந்தாள் .. அவளும் சிரமப்பட்டு உணவை எடுத்து வரவேண்டியிருந்தது. வெளியில் போகும் […]
” பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் […]
சுப்ரபாரதிமணியன் காசு வேலாயுதன்பத்திரிக்கையாளர் என்ற முறையில் பலம் வாய்ந்தவர். பத்திரிகையாளர் என்பவர் படைப்பிலக்கியம் பொறுத்த அளவில் பலவீனமானவர். பத்திரிகை பாணியும் எழுத்துமுறையும் படைப்பிலக்கியத்தில் மரியாதை பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் பத்திரிகையாளர் என்ற முறையில் தான் பெற்ற அனுபவங்களை ஒரு அருமையான நாவலாக கொடுத்த வகையில் அவர் ஒரு பலமான பத்திரிக்கையாளராக விளங்கியதை இந்த நாவல் நிருபித்திருக்கிறது. “ பொழுது கால் மின்னல்” என்ற ஒரு கொங்கு நாட்டு பாத்திரங்களை மையமாகக் கொண்ட ஒரு நாவலை எழுதி சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னால் அவர் இந்த இரண்டாவது […]
கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும் (இடம் மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் ) இதில் கொங்குபகுதியைச் சார்ந்த சிற்றிதழ் ஆசிரியர்களின் முக ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஓவியர் தூரிகை சின்னராஜ் வரைந்தவை அவை. இரு முறை சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கோவை புவியரசு, கோவை ஞானி, பொள்ளாச்சி அம்சப்ரியா, பொள்ளாச்சி வாமனன், திருப்பூர் சுப்ரபாரதிமணியன் ., திருப்பூர் சி. சுப்ரமணியம் உடப்ட 20 ஓவியங்கள் […]
சுப்ரபாரதிமணியன் பெண்கள் வேலைக்குப் போவதாக இருந்தாலும் பொருளாதார நிலையில் அவர்கள் மேற்பட்டிருந்தாலும் அவர்களுடைய நிலைமை இப்படித்தான் இருக்கிறது. . இந்தியாவில் பாலின சமத்துவம் அடைவதற்காக இன்னும் 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் நல ஆணையத்தின் சமீபத்திய ஆய்வு என்று தெரிவித்திருக்கிறது.. இது கூட ஒரு வகையில் வன்முறையாக மாறிவிடுகிறது.. ஏடிஎம்மை பெண் பயன்படுத்த ஆண்கள் வைக்கும் தடை அல்லது அது என்னிடமே இருக்கட்டும் என்று சொல்வது இதெல்லாம் ஒரு வகை பாலின சமத்துவ […]