author

கனவு இலக்கிய வட்டம் ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்

This entry is part 12 of 13 in the series 20 ஜூன் 2016

கனவு இலக்கிய வட்டத்தின் ஜீன் மாதக் கூட்டம் 16/6/16 அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் ) தலைமை வகித்தார். ” தி தமிழ் ஸ்டோரி “ ( The Tamil story ) என்ற ஆங்கில நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நூலில் வவேசு அய்யர், புதுமைப்பித்தன், பாரதி முதற்கொண்டு 88 தமிழ்ச்சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு […]

மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்

This entry is part 12 of 14 in the series 29 மே 2016

  * மாயாறு பொங்கி வழிகிறது. மாயாறு பொங்கி பெருக்கெடுக்கிறபோதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது. வெள்ளத்தைப் பார்க்க முடிகிற சந்தோசம். நீயும் பொங்கிப் பாரேன் என்று அது நிகழ்த்திக் காட்டும் ஓரங்க நாடகம். பொங்கி வருக..   * வேலியின் கிளுவைப்படல் யாராலும் நகர்த்தப்படலாம். யாராலும் நசுக்கப்படலாம். மிக மெல்லியதுதான் என் வைராக்யம் என்னும் கோட்டை எந்தக் கொம்பனாலும் நகர்த்தமுடியாது. கற்பு வெறும் கோட்டிலா இருக்கிறது.   * தீ காட்டில் தொடர்ச்சியாகப் பரவிவிடக்கூடாது என்பதற்காய் பையர் லையன் […]

தற்காலிகமாய் நிறுத்தப்படும் ஆட்டம்

This entry is part 11 of 11 in the series 15 மே 2016

“ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “ “ஏன் அப்பிடி சொல்றீங்க .” “ முடியாதுன்னு தோணுது. மனசு பலவீனமாயிருச்சு.” அவரின் எதிரில் இருந்த குதிரைகளும் ராஜாக்களும் படைவீரர்களும் செயலிழந்தது போல் சதுரங்க அட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.இது இனி அவசியமில்லாதது என்பதாய் பார்த்தார்.அவளும் சட்டென திகில் அடைந்தவள் போல் பார்த்தாள்.அவர் தீர்மானத்தைச் சாதாரணமாய் சொல்லி விட்டது போலிருந்தது. நிலை கொள்ளாதவர்கள் மாதிரி இருவரும் முகம் பார்ப்பதைத் தவிர்த்து சுவர்களின் வெண்மையைப் பார்த்து ஆராய்ச்சி செய்து […]

ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 10 ஏப்ரல் 2016

சுப்ரபாரதிமணியன் ஷாநவாஷின் சிறுகதையொன்றில் “ கறிவேப்பிலை “ கடைக்காரர் கறிவேப்பிலைக் கொத்தை சடக்கென்று ஒடித்து கொசுறு போடும்போது “ வேண்டாம் எங்கள் வீட்டில் கருவேப்பிலை கன்று இருக்கிறது “ என்று அம்மா சிரித்தபடி சொல்லும் வார்த்தைகள் இன்னும் வாடாமல் அப்படியே இருக்கிறது என்று ஆரம்பித்திருப்பார்.. நவாஸிடம் இந்த கொசுறு கறுவேப்பிலை வேலையெல்லாம் இல்லை. முழு கருவேப்பிலைக் கன்றையே கையில் எடுத்துத் தந்து விடுவது போலத்தான் அவரின் விஸ்தாரணமான பேச்சு இருக்கு. பரோட்டா, கறி என்று ஓரிரு வார்த்தைகளை […]

நூலின் முன்னுரை: பறந்து மறையும் கடல் நாகம் : ஜெயந்தி சங்கர் நூல்

This entry is part 7 of 13 in the series 28 பெப்ருவரி 2016

    ========================================================== நான் வெகு சமீபத்தில்  பார்த்த ஒரு சீன ஆவணப்படத்தை இங்கு நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். சீனாவில் தற்போதைய  மக்கள் தொகையில் 32 மில்லியன் பையன்கள் பெண்களைவிட அதிகமாக  ( இருபது வயதிற்குட்பட்டவர்களில்)  அதிர்ச்சியைத் தருகிறது.இந்த விகிதம் இந்தியாவிலும் காணப்படுவதிப்பற்ரிய்ச் செய்திகள் சமீபத்தில் அதிகரித்திருக்கின்றன. கருச்சிதைவும், குழந்தைகளின் வளர்ப்புச் சிரமங்களும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. திருமண வயதையொட்டிய ஆண்களின் பெண் தேடலில் இது சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. பெண் குழந்தைகளை வீட்டில் […]

அ. கல்யாண சுந்தரம் என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஆவணப்படம்

This entry is part 3 of 19 in the series 7 பெப்ருவரி 2016

                      கோவையில்  நடைபெற்ற பஞ்சாலைத் தொழிலாளர் மத்தியிலான ஒரு கூட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பேசுவதற்கு முன்னால் “ மக்கள் கவிஞன் வாழ்க”  என்று முழக்கமிடுகையில் பேச முடியாமல்   நெகிழ்வடைந்து விடுகிறார். அவரின் 29 ம் வயதில் அக்கூட்டம் கோவை பீளமேட்டில் நடைபெற்றது. அது முதலேதான் அவர் மக்கள் கவிஞர் ஆனார்.” காலம் தெரிந்து கூவும் குயிலாய் “ இருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை ஜனத்திரள் அங்கீகரித்து பட்டம் வழங்கிய அதே […]

ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்

This entry is part 11 of 12 in the series 10 ஜனவரி 2016

உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் . அப்போதும் ஏற்பட்டது. இன்னும் கொஞ்சம் விபரீதத்துடனே. மைதிலி என்று வாய் விட்டுதான் அலறியதாக அவனுக்குத் தோன்றியது.ஆனால் அலறல் சப்தம் கேட்டு நடந்து கொண்டிருந்தவர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த வாகனங்கள் எதுவும் நின்று விடவில்லை. புகைக் காற்று அதன் திசையை மாற்றிக் கொண்டு அலறவில்லை. அப்படியானால் குரல் சரியாக எழும்பி அடையாளம் காட்டவில்லையா. அப்படியெல்லாம் நிகழ […]

பொள்ளாச்சி வாமனன் சிறுகதைகள்- வாமன அவதாரம்

This entry is part 8 of 18 in the series 3 ஜனவரி 2016

கலை அழகியல் பெரும்சக்தியாக எழுத்தாளனுள்ளும் அவனின் படைப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வாசகனையும் வாழ்க்கை பற்றிய பார்வையை விரித்துக் கொண்டே போகிறது என்று சொல்லலாம்.இது கேலி விளையாட்டாகவும் புத்திசாலித்தனமாகவும், அனுபவத்திரட்சியாகவும் கதைகளிலும் கிடைக்கிறது.அனுபவத் திரட்சிக்குள் வரும் வாழ்க்கையில் தென்படுபவற்றையும் மனதில் தங்கி விடுபவை பற்றியும் சரியான பார்வை கொண்டவர் வாமனன் என்பதை இக்கதைகளில் தென்படும் அனுபவங்களைக் கொண்டே சொல்லிவிடலாம். வெகுஜன இதழ்களில் தென்படும் கதைகளின் அனுபவங்கள், செய்திகள் போலில்லாமல் தினசரி வாழ்க்கையில் கூர்ந்து பார்க்கும் அவதானிப்புகளாக இக்கதைகளை எடுத்துக் […]

டூடூவும், பாறுக்கழுகுகளும்

This entry is part 4 of 23 in the series 20 டிசம்பர் 2015

சுப்ரபாரதிமணியன் இறந்ததைத் தின்று இருப்பதைக் காக்கும் பாறுக்கழுகுகளை பாதுகாக்கிற விழிப்புணர்வு பேரணியை திருப்பூரில் ஆரம்பித்து வைக்கிற போது டூடூ பறவை பற்றியும் நினைத்துக்க் கொண்டேன். என் உரையில் டூ டூ பற்றியும் குறிப்பிட்டேன். அந்த இரு சக்கர வாகனப்பேரணியை அருளகம் அமைப்பும் ( இயறகி பாதுகாப்பு அமைவனம்) , திருப்பூர் தகவல் தொழில்நுட்பக்கழக இளைஞர்களும் இணைந்து நடத்தினார்கள். திருப்பூரில் தொடங்கி மேட்டுப்பாளையம் கோத்தகிரி, கூடலூர், முத்தங்கா, குண்டல்பேட்டை., தாளவாடி, ஆசனூர் சக்தி வழியாக 400 கி மீ […]

பத்திரம்

This entry is part 15 of 17 in the series 6 டிசம்பர் 2015

  செல்லம்மாளுக்கு இரை கிடைத்து விட்ட மாதிரித்தான் தோன்றியது. முகத்தில் ஒரு வார தாடியுடன் தலையைக் குனிந்த படியே அவன் வாசலில் நுழைய முற்பட்டான். கையில் ஒரு பிரபலத் துணிக்டையின் இலவசப் பை இருந்தது. அதில் துருத்திக் கொண்டு சட்டையொன்று தெரிந்தது. “ என்ன பாசஞ்சரா.. டிக்கெட்டைகாம்பிச்சுட்டு இங்க பதிவு பண்ணிக்குங்க “ அவன் முகத்து தாடியை வறக் வறக்கென்று சொறிந்தபடி செல்லம்மாளைப் பார்த்தான். ஒருவகையில் அவளின் இரண்டாம் மகன் பக்தவச்சலம் சாயல் அவனிடம் இருந்தது. குடிகாரப் […]