தமிழக எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு

This entry is part 3 of 5 in the series 29 அக்டோபர் 2023

குரு அரவிந்தன். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அழைப்பின் பெயரில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து ரொறன்ரோவிற்குச் சென்ற வாரம் வருகை தந்திருந்தார். சென்ற சனிக்கிழமை 21-10-2023 கனடா இலக்கியத் தோட்டத்தின் ஏற்பாட்டில், மார்க்கம் நகரசபை மண்டபத்தில் ‘தமிழ் இலக்கியத்தில் அறம்’ என்ற தலைப்பில் அவர் இலக்கிய ஆர்வலர்களுக்கு உரையாற்றினார். கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் எல்லாவற்றையும் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, உரையைக் கேட்கும் ஆர்வத்தில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 305ஆம் இதழ்

This entry is part 1 of 2 in the series 22 அக்டோபர் 2023

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 305ஆம் இதழ், 22 அக்டோபர். 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி : https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்  கப்பை – கதையை முன்வைத்து… – ரா.கிரிதரன் தொடர்கள் ஜகன்னாத பண்டித ராஜா -2 – மீனாக்ஷி பாலகணேஷ் அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6 – ரவி நடராஜன் ஜப்பானிய பழங்குறுநூறு 47-50 – கமலக்கண்ணன்  கதைகள் சரண் நாங்களே – ஆர்.வி படையல் – நா.சிவநேசன் நினைவில் நின்றவை – கே.எஸ்.சுதாகர் குறுநாவல் / நாவல்  சிவிங்கி – அத்தியாயம் இரண்டு – இரா.முருகன்  மிளகு   அத்தியாயம் ஐம்பத்தாறு – இரா.முருகன் உபநதிகள் – பதினேழு – அமர்நாத் அதிரியன் நினைவுகள் – 24 – தமிழில்: நா.கிருஷ்ணா   கவிதைகள்  நாஞ்சில் நாடன் கவிதைகள் மொழியும் மண்ணும் – தமிழில் […]

கனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா

This entry is part 3 of 4 in the series 15 அக்டோபர் 2023

குரு அரவிந்தன் கனடாவில் இயங்கிவரும் கலைமன்றத்தின் 19 வது பட்டமளிப்பு விழா அக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி 2023 ஆண்டு காலை 10 மணியளவில் ஆரம்பித்து ரொறன்ரோவில் உள்ள யோர்க்வூட் நூலகக் கலையரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது. கோவிட் பெரும்தொற்றுக் காரணமாகக் கலைமன்றத்தின் பட்டமளிப்பு நிகழ்வு கடந்த சில வருடங்கள் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத் தக்கது. மீண்டும்  இம்மாதம் நடந்த இந்த நிகழ்வுக்குக் கனடா தமிழர் தகவல் இதழ் முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் […]

கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டுவிழா – 2023

This entry is part 3 of 5 in the series 8 அக்டோபர் 2023

குரு அரவிந்தன் – சென்ற சனிக்கிழமை 23-9-2023 அன்று கனடா, ரொறன்ரோவில் உள்ள தொல்காப்பிய மன்றத்தினர் நடத்திய 8வது தொல்காப்பிய ஆண்டுவிழா – 2023 தமிழிசைக் கலாமன்றத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றல், கனடிய தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, தொல்காப்பிய மன்றப்பாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின் அங்கீகாரம் வாசிக்கப்பட்டது. அடுத்து தொல்காப்பிய மன்றத் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமை உரை இடம் […]

கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா – 2023

This entry is part 4 of 5 in the series 8 அக்டோபர் 2023

கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா – 2023 குரு அரவிந்தன் 35 வது வருட நிறைவைக் கொண்டாடும் கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 24-9-2023 ரொறன்ரோ சீனக்கலாச்சார மண்டபத்தில் குறிப்பிட்ட நேரப்படி மாலை 5:05 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக நடந்தேறியது. திரு. பஞ்சன் பழனிநாதனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றது. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இலங்கையில் இருந்து வருகை […]

கவிதை நந்தவனமாகிய நந்தனம் – கவிதை நூல் வெளியீட்டு விழா   

This entry is part 7 of 8 in the series 24 செப்டம்பர் 2023

               கவிதை நந்தவனமாகிய நந்தனம்                                 செங்கற்பட்டைச் சேர்ந்த கவிஞர் ஆ.கிருட்டிணன் எழுதிய ‘மண்தொடும் விழிகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தனம்தாமரைக் குடியிருப்பிலுள்ள பொதுவுடமை கட்சியின் மூத்த தோழர்இரா.நல்லகண்ணு அவர்களின் இல்லத்தில் எளிய இலக்கிய நிகழ்வாக கடந்த செப்டம்பர் 10 அன்று நடைபெற்றது. அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கவிஞர்ஆ.கிருட்டிணன், […]

இரா.முருகன் படைப்புகள் கலந்துரையாடல் 24 செப்டம்பர் 2023

This entry is part 3 of 8 in the series 24 செப்டம்பர் 2023

நண்பர்களுக்கு வணக்கம் அடுத்த நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் படைப்புகள் குறித்த நேரடி அமர்வாக வரும் வார இறுதியில் நிகழவுள்ளது 24-09-2023 ஞாயிறு மதியம் 03:00 மணி முதல் 08:00 மணி வரை கவிக்கோ அரங்கம், CIT colony, மைலாப்பூர், சென்னை வரவேற்புரை:-எழுத்தாளர்:- ஜா.ராஜகோபாலன் வாழ்த்துரை:-எழுத்தாளர்.:- ரகுநாதன் ஜெயராமன் அமர்வுகள்:- அ) அரசூர் நாவல்கள்1.சுரேஷ்பாபு ( நற்றுணை ) 2. காளிப்ரஸாத் ( நற்றுணை ) ஆ) பிற நாவல்கள் 1. மூன்றுவிரல் – யோகேஸ்வரன் […]

பிரம்ம சாமுண்டீஸ்வரி சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

This entry is part 2 of 2 in the series 17 செப்டம்பர் 2023

சுலோச்சனா அருண் சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், பரிசளிப்பு விழாவும் சென்னை காந்தி மண்டபச் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் யூலை 27 ஆம் திகதி 2023 மாலை 6:00 மணிக்கு, முனைவர் வவேசு அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும், மற்றும் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலரும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 2022 யூலை தொடக்கம் 2023 யூன் மாதம் வரை சர்வதேசத் தமிழ் […]

தேசிய புத்தகநாள் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

This entry is part 2 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023

சுலோச்சனா அருண் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 2023 தேசிய புத்தகவிரும்பிகள் தினத்தை ((National Book Lover’s Day)முன்னிட்டுக் கனடாவில் உள்ள ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ சர்வதேச ரீதியாகப் புத்தகம் வாசிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். புத்தகம் வாசிக்கும் தினத்தை முன்னிட்டு நிகழ்வில் பங்குபற்றிய அதன் அங்கத்தவர்கள் புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். தமிழ்நாடு, இலங்கை, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற இடங்களில் உள்ள வாசகர் வட்டத்தினரிடம் இந்த வாசிப்பு நிகழ்வு பரீட்சார்த்தமாக […]

துயர் பகிர்வோம்:  ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன்

This entry is part 7 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

குரு அரவிந்தன் கலைஞரும், ஒலிபரப்பாளருமான இலங்கைத் தமிழரான விமல் சொக்கநாதன் லண்டன் நகருக்குப் புலம் பெயர்ந்திருந்தார். கொக்குவில் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கே நடந்த மின்சாரத் தொடர்வண்டி விபத்தொன்றில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி லண்டனில் காலமாகிவிட்டார். இலங்கை வானொலியிலும் அதன்பின் பிபிசி தமிழோசை வானொலியிலும் அறிவிப்பாளராககக் கடமையாற்றியவர், அதன்பின் ஐபிசி வானொலியிலும் பணியாற்றினார். நண்பர் விமல் சொக்கநாதனும் அவரது மனைவியும் இலங்கையில் சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு அறிமுகமாகியிருந்தனர். நான் பட்டயக்கணக்காளருக்குப் படிக்கும் போது […]