ரவி அல்லது வறண்டு போனதைக்காட்டிவாஞ்சையைப் பற்றிசொல்லிக் கொண்டிருக்கிறேன்.சொட்டுச் சொட்டாகவிழும்கருணையைநிரப்பிஎப்பொழுதுகடலெனக்காட்டுவது. -ரவி அல்லது.ravialladhu@gmail.com
ரவி அல்லது இதழில்தேடிக் கொண்டே இருந்தேன்என்னை.வீடெங்கும்புத்தகங்கள். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
ஆர் வத்ஸலா மூன்று ஆண்டுகள் கழித்து முன்னறிவிப்பின்றி என்னருகில் மண்டியிட்டு வந்ததமர்ந்து கேட்டாய் “அடையாளம் தெரில்ல இல்லெ” “பாவி மகனே, இருபது வருசமானாலும் மறக்க முடியுமாடா ஒம்மொகத்தெ” என திட்ட நினைத்தேன் மூன்று ஆண்டுகள் உன்னை கண்ட உடன் கொட்டுவதற்காக சேமித்து வைத்த அத்தனை திட்டுகளுடன் அதுவும் ஆவியாக நான் பேச்சற்றுப் போனேன் கண் பார்வை மங்கியதற்கு கண்புரையை காரணம் காட்டிக் கொண்டு நிதானமாக பழையபடி பாசம் நிறைந்த சொற்களை சிந்தி விட்டு நீ விடைபெற்றுப் போன […]
“ஒன்றுமில்லை “, தெரிந்த பிறகும் ஒன்றை பற்றிக்கொண்டு வாழ்தல், ஒன்றைத்தான். அது எது என்ற தேடுதல் கடவுளைச்சுற்றியோ, இஸங்களை சுற்றியோ, இலக்கியத்தை சுற்றியோ, இசையை சுற்றியோ, வனங்களை சுற்றியோ, போர்களை சுற்றியோ எது எது என அறிதலின் பொருட்டு வாழ்க்கை நகரும் மெல்ல நத்தையென எது பொருட்டும் கவலை இல்லாமல் நடப்பது வேதாந்திகள் வேலை. எதையோ ஒன்றை பற்றி, சுற்றி ஊர்வலம் வருவது சுயம்பிகளின் வாழ்க்கை. ஆணைச்சுற்றி பெண்ணும், பெண்ணைச்சுற்றி ஆணும் ஆடிப்பாடி வருவது ஆனந்தக்கூத்தன் சொன்னது. […]
புரண்டு புரண்டு படுத்தார் தர்மகர்த்தா. தூக்கம் வரவில்லை, துக்கம் தொண்டையை அடைத்தது. யாரிடம் சொல்லி அழுவது. மனிதர்களிடமா. .., பிரயோசனமில்லை. அந்த அனந்த பூரிஸ்வரிடமா? அவரை தான் நேற்றே தூக்கியாச்சே!! இனி யாரிடம் சொல்லி அழ. காலையில் ஓதுவார் வந்தார் தொங்கிப்போன முகத்துடன் மீளா துக்கம் கண்ணில் புரண்டது. “சிவன் சொத்து குலநாசம் “, தேம்பி தேம்பி அழுதார் தர்மகர்த்தா ! தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்வர்க்கும் இறைவா போற்றி! பாடினார் ஓதுவார். கண்ணில் வழிந்தோடியது தோற்றப்பிழையா? […]
விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள். ——–‐——————————— தர்மராஜா கோவில் மைதானத்தின் வடக்கு ஒரத்தில் கூத்துக்கொட்டகை எப்போதும் நிற்கும், சித்திரை மாதத்தில். மணி மாமா திரெளபதி ஆட, வர்ண புடவைகளை வெய்யிலில் உலர்த்துவார் வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு பிஸ்மில்லா பிரியாணி வாழை இலையோடு காத்திருக்கும். காளி மார்க் கோலி சோடா பெட்டியில் நிற்கும் வரிசையாக. வாலை ஆட்டும் பேட்டை நாய்கள் எப்போதும் நிற்கும் அவரோடு. குத்தாலம் நல்லக்கண்ணு ஆர்மோனியத்தை ஸ்ருதி பார்ப்பார். மிருதங்கம் சோமு […]
ரவி அல்லது குப்பைகள் ஒதுக்கி கொய்த. உற்சாகத்தை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது கொத்தித் தின்கிறது புறம். மீய்ந்த சொர்க்கத்தில்தான் மிதக்கிறது வாழ்வு பூரித்தலாக எப்பொழுதும். *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com
ரவி அல்லது காணாத முக வாடலுக்கு கைவரப்பெற்ற எதுவும் உதவவில்லை. பார்த்த பிறகு தான் புரிந்தது. பட்டாலும் பறந்தாலும் பார்ப்பதைத் தவிர பாரினில் பரிதவிப்பை போக்கும் உபாயம் ஒன்றுமில்லையென. *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com ***
வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது உனக்கும் உள்ளது அறம் குறித்தோ அவகாசமில்லை சிறு நாவாய் அசைந்து போகிறது நீர்ப்பாலை விரிந்து கிடக்க கரை தொடும் ஏக்கம் கொடுங்காற்றாய் வீசுகிறது காற்றில் கண்ணீர் வாசம் இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகளின் ரத்தக்கவிச்சியில் நனைந்தபாடல் கடந்து செல்ல… மிதந்து செல்கின்றன வார்த்தைகள் கனிந்து உதிரப்போகிறது வாழ்க்கை உயிர்காற்றே என்னோடு சற்று பேசிவிடு நீந்திப் போகிறேன் […]
ஜெயானந்தன் நடைப்பயணத்தில் எதிர் திசையில் மழலை ஒன்று கையசைத்து மழலை பள்ளிக்கு தவழ்ந்தது. திரும்பிப்பார்க்கையில் ரோஜா மொட்டவிழ்த்து புன்னகை பூத்தது. முதல் மாடியில் சாருகேசி வீணை வருடினாள். மூன்றாம் மாடியில் மாலி புல்லாங்குழல் தவழ்ந்தது. நேற்று சென்ற அதே பூங்காவிற்கு சென்றேன். கொஞ்சம் பட்டாம்பூச்சிகளும் புறாக்களும் பறந்தன. சில பூக்கள் எனக்காக பூத்திருந்தன. சிலர் அமர்ந்திருந்தார்கள் யாரும் யாரோடும் பேசவில்லை. நான் என் கவிதை பிரசவத்திற்கு தவம் கிடந்தேன். -ஜெயானந்தன்.