உன்னிடம் அடிமை என்று பத்திரம் நீட்டுகிறாய்,

Bala S ( tssbala) உன்னிடம் அடிமை என்று பத்திரம் நீட்டுகிறாய், அலைக்கழித்து ஏமாற்றுகிறாய் , பல ஊரில் பல உருவில், தள்ளிச் சென்றேன் துரத்தி பிடித்தாய், பிடிக்க முயன்றேன் உரு மாறிவிட்டாய் விளக்க முயன்றேன் வெறும் வார்த்தை என்றாய், அழகே…

ஓய்வும் பயணமும்.

நடைப்பாதைப் பயணத்தில் வெள்ளையடிக்கப்பட்ட மதகடியில் ஓய்ந்தமர்ந்தேன். கரண்டுக் கம்பங்களில் காக்கையும் மதகடி நீரில் கொக்கும் வயல் வரப்புக்களில் நாரையும் நெத்திலிகள் நெளிந்தோட குட்டிச் சோலையாய் விளைந்து கிடந்தது வாய்க்கால். தேன்சிட்டும் மைனாவும் ரெட்டை வால் குருவியும் குயிலோடு போட்டியிட்டு தட்டாரப்பூச்சிகளும் வண்ணாத்திப்…

தகுதியுள்ளது..

எங்கோ ஒரு சிறுமி மறைமுக பாலியல் துன்பியலில் பயந்து நடுங்கிக் கிடக்கிறாள். நெடுஞ்சாலை ஓர குத்துப் புதருக்குள் காதலனை சந்திக்க சென்றவளின் பிணம். மிதவாதியா அல்லவா பிரிக்கத் தெரியாமல் சூலுற்றவளுக்கு சிறையில் பிரசவம். காதுகள் மடக்கியும் கண்மூடி மூக்கைப் பிடித்தும் கலங்கும்…

விவாகரத்தின் பின்னர்

உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண் அவளது இரு புறமும் சிறு குழந்தைகளிரண்டு கீழே முற்புதர்கள் கற்சிதறல்கள் நாகம், விரியன், மலைப்பாம்புகள் நிறைந்திருக்கும் பாதாளம் அகன்ற வாயைத் திறந்துகொண்டு அவளது தலைக்கு மேலே இரவின் கனத்த…

சுடர் மறந்த அகல்

மாரியாத்தா.... சந்திகால வேளையில், ஓடி சென்று நெய்வேத்யத்தை கொரித்துக் கொண்டே சிவனிடம் அன்று நடந்தவைகளை பகிர தோன்றியது இல்லையோ ? மகிசாசுரன்களை வதம் செய்கையில், அசதியாக சாய சிவன் தோளை காணாது துவண்டது இல்லையோ ? பக்தர்கள் வரம் நிறைவேறி ஆனந்திக்கையில்…

சொல்லி விடாதீர்கள்

பேன்ட் சட்டை அணிந்த அனைவருமே அவன் கண்களுக்கு கோடீஸ்வரர்கள் தான் நானும் அப்படித்தான் தெரிந்திருக்கக் கூடும்! நான் அவனைக் கடந்துபோன அந்த சில நொடிகளில்... நடைபாதையில் அமர்ந்திருந்தான் அவன் கைகளை நீட்டி என்னிடம் எதையோ எதிர்பார்த்தபடி... நிச்சயமாய் என்னிடம் அவன் பணத்தையோ…

அவசரமாய் ஒரு காதலி தேவை

சிலந்தி வலையில் ஆடை நெய்து உன்னை உடுத்தச் சொல்லி நான் மட்டுமே இரசிக்கவேண்டும் ஒட்டடை அடித்துக்கொண்டே... சுபாஷ் சரோன் ஜீவித் நூல் வெளியீடு : அவசரமாய் ஒரு காதலி தேவை!

வீட்டுக்குள்ளும் வானம்

முட்டை உடைத்து வந்த குஞ்சுக்கு உவமையாக நான். வீட்டுக்குள் வானமும் வானங்களும் சூரியனும் நிலவும் நட்சத்திரங்களும் மழையும் வெயிலும் மேகங்களும் பறவைகளும் இருப்பது தெரியாமல் வெளியில் வானம் பார்க்க வந்த வெகுளிப் பறவை நான். இரும்புப் பறவைகளும் ராக்கட்டுகளும் காத்தாடிகளும் இரைச்சல்களும்…

விருந்து

ஒரு நன்கொடைத் திரட்டுக்காக அந்த இரவு விருந்தாம் பத்துப் பேர் மேசைக்கு இரண்டாயிரம் வெள்ளி பொரித்த முழு குருவா மீன் எராலுடன் கனவாய் தந்தூரிக் கோழியுடன் முந்திரி வருவல் வறுத்த சேமியா பொரித்த சோறுடன் புரோகோலி சூப் விருந்து நிறைந்தது வீட்டுக்கு…

மிம்பர்படியில் தோழர்

ஹெச்.ஜி.ரசூல் கட்சித்தலைவர்களும் தொண்டர்களும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக் கூட்ட அரங்கில் ஸப்புகளில் வரிசையாய் அணிவகுக்க இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஹாமீம் ஆலிம்சா இமாமாக நின்று நேற்றைய தொழுகையை நடத்திக் கொண்டிருந்தார் அலைமோதிய மனம் பதைப்புக் கொள்ளத் துவங்கியபோது ஜும்மாமசூதியின் கடைசிவரிசையில்…