வீடு

விடுமுறை நாளொன்றில் வீடு சுத்தம் செய்யுகையில் விடுபட்ட இடங்களில் விரல்கள் துலாவியதில் தொலைந்துபோன பொம்மைக்காரின் ரிமோட் தீர்ந்துபோன பேட்டரிகள் மூடிகள் மூடிகளற்றப் பேனாக்கள் பொத்தான்கள் பொத்தான் குறைந்த சொக்காய்கள் ஓரிரண்டு உலர்ந்த உணவுத் துணுக்குகள் என எல்லாவற்றையும் அகற்றியும் கைப்பற்றியும் தொடர்ந்து…

அலைகளாய் உடையும் கனவுகள்

சங்கர பாலசுப்பிரமணியன் தன் சுய பிம்பத்தை நீரில் பார்த்து கொத்துகிறது பறவை ஒன்று அலைகளாய் சிதறிச் செல்லும் பிம்பங்கள் மறுபடியும் கூடுகின்றன இரவு வரை கொத்திக் கொண்டேயிருக்கும் பறவை பிம்பத்தை அழித்து விட்ட மகிழ்வில் பறந்து செல்கிறது களிப்பில் அதற்குப் புரியவில்லை…

புரட்டாசிக் காட்சிகள்

புலால் தவிர்த்துச் "சைவ"மாகிப் போன வைஷ்ணவர்களின் உதட்டிலும் நெற்றியிலும் விதவிதமான நாமங்கள். வெங்கட் ராமா கோவிந்தா எனக் கூவிவரும் பக்தர்களுக்குப் பிடியரிசிபோட வாங்கி வைத்திருக்கிறாள் அம்மா ரேஷன் கடையிலிருந்து. பக்தர்கள் வரிசைக்காக மூங்கில்கொண்டு கட்டியிருக்கிறார்கள் பெருமாள் கோவிலில் தூணையும் அதில் நிற்கும்…

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை வேண்டும் எனக்கேட்கிறது உயிர், அந்த சிலிர்ப்பை.. உடல், அந்த பறத்தலை.. மனம், அந்த புல்லரிப்பை.. நீ கேட்ட அந்த நொடி “என்னோடு வருவாயா வாழ்வு முழவதும்?” பயத்தோடு தினம் கேட்கும் கேள்வியாகிவிட்டது இப்போதெல்லாம், வழக்கமாய்ப் போய்விட்ட வாக்குவாதங்களுக்கிடையே..…

ஒருகோப்பைத்தேநீர்

கண்ணாடிப்பேழையில் உறங்கும் புத்தர் சற்று நேரத்தில்விழித்து எழக்கூடும். அதற்க்குள் தயாரிக்க வேண்டும் அவர் அருந்த ஒருகோப்பைத்தேநீர். RAVIUTHAYAN raviuthayan@gmail.com

கையாளுமை

காட்சி ஒன்று .. மறுத்து பேசும் பிள்ளைகளிடம் மன்றாடி மனு போட்டு, மாறுவேடம் தரித்து பயமுறுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு காட்சி இரண்டு .. உம்மென்றால் உம்மனாமூஞ்சிகளாகி, ஏனென்றால் எரிமலையாய் எழும் வயதான வீட்டு பெரியவர்கள் மனம் கோணாமலிருக்க கோணாங்கியாகி ..…

இரு கவிதைகள்

  அகதிக்  காகம்                                           - பத்மநாபபுரம் அரவிந்தன் -   நீண்டதோர் கடற்  பயணத்தின் மூன்றாம் நாள் அதிகாலை கண்ணில்ப் பட்டது முன்புறக் கொடிமர உச்சியில் அமர்ந்திருந்த அக்காகம் ..   சில நூறு மைல்கள் கரையே இல்லாப் பெருங் கடல் நடுவே எப்படி வந்ததோ, கண்டம் கடக்கும் பறவைகள் பலவும் ஓய்வெடுக்க வந்திருந்து மீண்டும் போகும்.. காகங்கள் பொதுவாக  இத்தனை தூரம் பார்ப்பதே இல்லை.. இக்காகம் வழி தவறிப் பெருங் காற்றில் அடித்துவரப் பட்டிருக்கலாம்..    தொலை பயணக் கப்பல்கள்  ஓவ்வொன்றாய்  அமர்ந்தமர்ந்து வந்திருக்கலாம்.. எம்பிப் பறக்க எத்தனித்து பெருங் காற்றின் வேக வீச்சில் தடுமாறித் தத்தளித்து மீண்டுமது கப்பல் தளத்தினில் வந்தமரும்   தட்டில் அரிசி, கடலை, மாமிசத் துண்டுகள்  கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவந்து தளத்தில் வைத்து தள்ளி நின்றுப் பார்த்திருந்தேன்..  …

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா யாரிந்த மாறுதல் செய்பவர் ? எவரிந்த மாறுதலைப் புரிபவர் ? இடது பக்கம் எய்த அம்பு வலது பக்கம் விழுந்தது ! மானை விரட்டிச் செல்லும் போது…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "சகோதரர்களே ! ஒருவருக் கொருவர் போதனை கூறிக் கொள்வீர். அதுவே உமக்கு பிழைகளைத் திருத்தவும், வீணான மன நோவைத் தவிர்க்கவும் வழி வகுக்கும். பலரின் அனுபவ ஞானமே…

நிலாவும் குதிரையும்

குமரி எஸ். நீலகண்டன்   பரந்த பசும் வெளியில் பாய்ந்து சென்றது ஒரு குதிரை தன்னந்தனியாய்.   ஆடுகள் மாடுகள் ஆங்காங்கு மேய்ந்திருக்க இறுமாப்புடன் வானம் நோக்கியது.   வட்ட நிலாவைக் கண்டு அழகிய இளவரசி தன்மேல் சவாரி செய்வதாய் நினைத்துக்…