தாங்கள் அறுவடை செய்த செல்வத்தை தான தருமம் செய்வதைக் காட்டிலும் தாசிக்கு தருவதனூடாக தங்கள் ஆண்மையை வெளியுலகிற்கு உறுதிபடுத்து நினைக்கிறார்கள், அவ்வளவுதான். 10. சீர்காழியிலிருந்து திரும்பிய முதல் நாள் இரவு தூக்கமின்றி கழிந்தது. உப்பரிகையின் கைப்பிடி சுவரிலமர்ந்து வானத்தை வெகு நேரம்பார்த்தாள். நட்சத்திரங்களில் இளைஞனைத் தேடினாள். விரல்கொண்டு அவளது முழங்கையையை தடவிப்பார்த்துக்கொண்டாள் இளைஞைனின் விரல் தீண்டிய இடங்களில் வெது வெதுப்பினை உணர்ந்தாள். மயிற்கால்கள் சிலிர்த்தன. ஓர் ஆணின் ஸ்பரிஸம் இதற்கும் முன்பும் சித்ராங்கிக்கு நேர்ந்துள்ளது. இவள் வயது […]
சந்துருவுக்கு பெரும் பணக்காரனாக வேண்டும் என்று ஆசை! எப்படி பணக்காரனாக ஆவது? உழைத்துச் சம்பாதிப்பதென்றால் – அது அன்றாட உணவுக்குக்கூடப் போதாது! லட்சம் லட்சமாக – கோடி கோடியாகச் சிலரிடம் பணம் இருக்கிறதே – அவர்களெல்லாம் உழைத்துத்தான் சம்பாதிக்கிறார்களா? அவனுக்கென்னவோ நம்பிக்கையில்லை! அவனுக்குத்தான் நன்றாக தெரியுமே – உழைத்து உழைத்துக் களைத்ததுதான் மிச்சம்! கோடீசுவரனாக வேண்டாம் – ஒரு நூறீசுவரனாகவாவது அவனால் ஆக முடிந்ததா? இல்லையே! பின் ஏன் உழைத்து உழைத்து ஓடாகப் போக வேண்டும்? சந்துருவின் […]
பாம்பை மணந்த பெண் ராஜக்கிருஹம் என்கிற ஊரில் தேவசர்மா என்றொரு பிராமணன் இருந்தான். அவன் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் அண்டை அயலார்களின் குழந்தைகளைப் பார்த்துவிட்டு அவள் ரொம்பவும் அழுதாள். ஒருநாள் பிராமணன் அவளைப் பார்த்து, ‘’அன்பே, கவலைவிடு. நான் குழந்தைப் பேறு பெறுவதற்காக யாகம் செய்யும்போது ஏதோ ஒரு அசரீரி, ‘பிராமணனே, மற்றெல்லா மனிதர்களைக் காட்டிலும் மிகுந்த அழகும், குணமும், பலமும் உள்ள குழந்தை உனக்குப் பிறக்கும்’ என்று தெளிவாகச் சொல்லிற்று’’ என்றான். […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் நான் போய்வந்தேன். ஆகாவென்றிருந்தது. மீண்டும் போனேன் அங்கே. இலையுதிர்காலம் கடந்தது. புனித லூக் மருத்துவப் பள்ளியில் குளிர்கால வகுப்புகள் துவங்க, நான் லண்டன் திரும்பிவந்தேன்… இப்போதெல்லாம் சனிக்கு சனி நான் அங்கே ஆஜர். அதுதான் எனது கலை மற்றும் எழுத்து உலகத்தின் சாளரம். நான் அறையில் ரொம்ப மும்முரமாய் எழுதிக் குவித்தேன், ஆனால் சனி மதியங்களில் யாரிடமும் அதைப்பற்றி மூச்சு காட்டவில்லை. இந்தக் காலகட்டத்தில் எழுதிக்கொண்டிருக்கிற பிற எழுத்தாளர்களைச் சந்திப்பதில் எனக்கு ஒரு […]
மாமேதைகள் பிறந்த கிரேக்க நாடு! அங்கே மஞ்சு சூழ் மலைப் புறத்தில் ஒரு சிற்றூர்! அங்கிருந்து கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் பேசிக் கொள்கிறார்கள். “ஆஹா! என்ன மேதா விலாசம்! வாய் திறந்தால் போதும் சத்தான சிந்தனைகளை வாரித் தெளிக்கிறார்! முத்தான கருத்துக்களை கொட்டிக் கொடுக்கிறார்!” யார் இந்தப் புகழ்ச்சிக்குரிய சிந்தனைச் சிற்பி? மக்களின் சிந்தை கவர்ந்து மிதிப்பைப் பெற்ற மாமேதை! எல்லோரும் அவரை டயாஜெனிஸ் என்று அழைக்கிறார்கள். அவர் குடியிருந்த குடிசை வீட்டிற்கே […]
சிறகு இரவிச்சந்திரன். பட்டினப்பாக்கத்திலிருந்து கோட்டூர்புரம் செல்லும் போது பேருந்தில் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலைக் பலமுறை கடந்திருக்கிறான். உள்ளே எப்படி இருக்கும் என்கிற எண்ணம் கூட அவனுக்கு வந்ததில்லை. அதெல்லாம் அவன் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவன் பெயர் தனசேகர். தான்யா என்கிற புனைப்பெயரில் ஏதாவது கவிதை எழுதுவான். ஏதாவது ஒரு சிற்றிதழ் அதை வெளியிடும். தனா பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒன்றில் குடியிருக்கிறான். அது கட்டப்படும்போது அப்போதைய ஆளுங்கட்சியின் வட்டம் ஒன்று பினாமி […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் பீரங்கித் தொழிற்சாலையை எனக்குப் பின் ஏற்றுக் கொள்ள ஒருவன் வேண்டும் ! நமக்குச் சொந்தமாக அவன் இருக்கக் கூடாது. அவனுக்கு அதிகப் படிப்பும் இருக்கக் கூடாது. அவன் வல்லவனாக இல்லா விட்டாலும், பிரச்சனை வரும் போது இடத்தை விட்டு ஓடிவிடக் கூடாது. இதுவரை நான் அவனைக் காண முடியவில்லை ! அப்படி ஒருவனை நீ சொந்தத்தில் இருக்க விரும்பினால் […]
உஷாதீபன் படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். அருகே மெயின் உறாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி இருக்கிறோம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது. குறிப்பாக அம்மாவுக்கு. அவள் தனது ஒவ்வொரு சிறு அசைவையும் கூட எடை போட்டு விடுவாள். தன் முகத்தை வைத்தே என்ன பிரச்னை? என்று கேட்டு விடுவாள். வந்து இரண்டு நாட்கள் ஆன இந்தப் பொழுதில் அவள் கேட்காமல் இருப்பதுதான் ஆச்சரியம். அப்படியானால் தன் […]
கிறிஸ்துமஸுக்கு முன்னாலேயே வீடுகளின் முன்புறத்திலேயோ அல்லது மரக்கிளைகளிலோ கட்டித் தொங்கவிடப்பட்ட நட்சத்திரக்கூண்டுகளின் கலர்ப்பேப்பர்கள் டிசம்பர் மாதத்தின் அசாத்தியப் பனிப்பொழிவில் வண்ணம் வெளுத்து உள்ளிருக்கும் முட்டை பல்பின் மஞ்சள் ஒளி அடுத்த ஆண்டின் பிறப்பிற்கு மங்கலமாய்க் காத்திருக்கும். கூராய்ச் சீவின பென்சிலை நட்டுவைத்தது போல இருக்கும் கிறிஸ்துவ தேவாலயங்களின் கோபுரத்தின் உச்சிவரை இழுத்து நான்கு புறங்களிலும் அலங்காரமாய்த் தொங்கவிடப்பட்ட சீரியல் விளக்குகளும், மின் மாயத்தினால் மறைந்து மறைந்து தோன்றும் சிலுவையும் அதைப்போன்றே அப்படி மறைந்து பின் தோன்றுவதால் இருபுறமும் […]
செண்பகத்தின் கைக்குப்பதிலாக வேறொரு கையை பிடித்திருந்தாள். அந்த வேறொரு கை பெண்ணுக்குரியதுக்கூட அல்ல ஆணுக்குரியது வெட்கமாகப் போய்விட்டது. அவனும் அப்போதுதான் உணர்ந்திருக்க வேண்டும். கையை உதறினான். 9. ஜெகதீசனை முதன் முதலாக பார்க்க நேர்ந்தது திருவிழாக் கும்பலொன்றில். உள்ளூரிலல்ல இருபது கல் தொலைவிலிருந்த சீர்காழியில். சித்ராங்கி பாவாடை சட்டையில் அந்திச்சூரியன்போல ஜொலித்த காலம். அப்போதும் செண்பகம்தான் அவளுக்குத் துணை. மீனாம்பாள், சத்த வண்டி அமர்த்த முலைப்பால் உற்சவத்திற்கு வந்திருந்தார்கள். சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்ஸவம் தொடங்கும். இதில் 2ம் […]