ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் வணிகத்தைப் பாருங்கள். பீரங்கி, வெடிமருந்து தயாரிக்கிறேன். விற்ற பணத்தை நான் தர்மத்துக்கு அர்ப்பணம் செய்கிறேன். இதில் எனக்கில்லை குற்ற உணர்வு. பணம் பணம்தான் ! அது விஸ்கி விற்று வந்தால் என்ன ? வெடி மருந்து விற்று வந்தால் என்ன ? பணத்தின் நதி மூலத்தைப் பார்த்தால் பலர் சாவடியில் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான் ! […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஒரு வழியாக இந்தப் பள்ளிக்காலமும் முடிவுக்கு வந்தது. பிளாக்ஸ்டேபிள் நிலையத்தில் இறங்கும் போதே மனம் சிறகடித்துப் பறக்கிறது.¢ இக்கிணி உசரங் கொடுத்திருந்தேன் இப்போது. தெர்கன்பரியில் நீல செர்ஜ் புது சூட் தைத்திருந்தேன். புது டை தனியே வாங்கி வைத்திருக்கிறேன். ரெண்டும் அணிந்து டக் டக்கென்று நடந்து போகப் பிரியப்பட்டேன். சரக்குவண்டியில் என் பெட்டி தனியே வந்தது. சரியான நேரத்திற்கு அது என் பெட்டியைக் கெண்டு சேர்த்துவிடும். வந்து தேநீர் சட்டுப்புட்டென்று குடித்த ஜோரில் […]
இந்த ப்ளாட்டுக்கு வந்தது முதல் இதுவரை எந்த பிரச்சனையும் வந்த்தேயில்லை என்கிற சந்தோச பலூனின் சின்னதாய் ஓட்டை. * 1. லிப்டிலிருந்த என்னைக் கையைப்பிடித்து இழுக்காதாவாறு இழுத்து தனது இல்லத்தை நோக்கி இழுத்து சென்றார் நாயர். நாயர் உயரம். பின்னாலிருந்து தள்ளாத குறை. “ தும் ஆக்கே காலி தோக்கோ “ [ நீ வெறுமன வந்து பாரு ] நான் ஏன் அவர் வீட்டுக்கு போய் ஏன் வெறுமனே பார்க்க வேண்டும். அதுவும் அலுவல அவசரத்தில். […]
சமுத்திரமும் நீர்க்குருவியும் பெரிய சமுத்திரம் ஒன்று இருந்தது. அதில் மீன், முதலை, ஆமை, சுறாமீன், திமிங்கிலம், நத்தை, முத்துச்சிப்பி, கிளிஞ்சல் முதலான இன்னும் எத்தனையோ ஜந்துக்கள் நிறைய இருந்தன. அதன் கரையோரத்தில் ஒரு நீர்க்குருவியும் அதன் மனைவியும் இருந்து வந்தன. ஆண் குருவிக்கு உத்தான பாதன் என்று பெயர். பெண் குருவிக்குப் பதிவிரதை என்று பெயர். ருது அடைந்ததின் பலனைப் பெற்று அந்தப் பெண் குருவி முட்டையிடும் தருணத்தில் இருந்தது. அது தன் கணவனைப் பார்த்து, […]
திரும்பிப் பார்க்கிறேன். என் ஐந்து வயது முதல் இதோ இதைச் சொல்லும் இந்த நாள்வரை. எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கிறேன். ஐந்து வயது. கலரான பாட்டிலில் எது இருந்தாலும் அதைக் குடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அடுக்களையின் மூலையில் இருந்த அந்த பச்சை நிற பாட்டிலை எடுத்து இரண்டு முடக்கு குடித்துவிட்டேன். ‘என்னாங்க’ என்று அலறிக்கொண்டு அம்மா ஓடிவந்தார். மேல் சட்டை இல்லாமல் அப்பாவும் ஓடி வந்தார். நிலைமையைப் புரிந்து கொண்டேன். நான் குடித்தது மண்ணெண்ணெய். அப்பா ஒரு துண்டைப் […]
கோதையாறு நீர்த் தேக்கத்துக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கிராமம். இது குமரி மாவட்டத்தில் கேரள நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ளது. அங்கு, சின்னச்சாமி ஒரு பெரிய புள்ளி! நிறைய ரப்பர் எஸ்டேட்! வயது அறுபதுக்கு மேல் ஆனாலும் உடம்பில் ஒரு மினுமினுப்பு! சம்சாரம் தவறிப்போய் நாலைந்து வருஷமிருக்கும்! ஒரே மகன். டாக்டருக்குப் படித்துவிட்டு உள்ளுரிலேயே வேலை பார்க்கிறான். சின்னச்சாமியின் ரப்பர் எஸ்டேட்டுக்குப் பக்கத்தில் ஒரு காணி நிலம். அதில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள்! அத்துடன் சின்ன […]
சீக்கிரம் இருட்டிவிடுகிறது இப்போதெல்லாம். இரவு போர்த்திக்கொள்ளும் அளவுக்குக் குளிர்கிறது. வெயில் சாய்ந்தபின் நிறைய விதமான பூச்சிகள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் மொய்த்தெடுக்கின்றன. பல வண்ணங்களிலும் அளவுகளிலும் பறந்தோ ஊர்ந்தோ வந்துவிடுகின்றன. சில புழு போல தவழ்ந்து போகிறதே என்று நினைக்கும்போதே அவை சட்டெனத் தாவிப் பறக்கும். இவற்றை விரட்டுவதும் கஷ்டம். கால் கைகளில் உட்கார்ந்தால் கூடப் பரவாயில்லை. முதுகில்போய் உட்கார்ந்து கடிக்கும். அடிக்கும்போது விட்டலாச்சார்யா படம்போல மாயமாய் எங்கோ போய்விடும். எப்போதாவது தவறி சரியாக அடித்துவிட்டால், சாவதற்குமுன் சுள்ளென்று […]
ரமணி நேற்று மென் தூறலில் நனைந்துகொண்டே வண்டியில் போனதில் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிட்டது. உடனே ஒரு ரெய்ன்கோட் வாங்கிவிட உத்தரவு வந்ததில் இந்தியப்பொருளாதரம் இன்னொரு இயக்கத்தைச் சந்தித்தது. ஆனால், மழையில் ரெய்ன்கோட்டை உபயோகிக்க வாய்ப்பு வரவில்லை இன்னும். இருந்தாலும் திபாவளிக்குப் புது ட்ரெஸ் போட்டுக்கொள்வது மாதிரி மஞ்சள் குங்குமம் எல்லாம் தடவி டி.வி யில் நாதஸ்வரம் ஒலிக்கப் போட்டுக்கொண்டு கழற்றிவைத்துவிட்டோம் . இந்த ஸீஸனுக்கான மழை ,கோடை மழைபோல இருக்காது. இது ட்ராவிட் ஆட்டமென்றால், […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “எனது போராட்டம் இப்போது நம்மோடுள்ள பிசாசுகளைத் துரத்துவது அல்ல. பாட்ஜர் விஸ்கி தரும் பணத்தை வாங்காமல் தவிர்ப்பதே ! அடுத்து நீங்கள் வெடிமருந்து விற்பனைப் பணத்தை இருகை நீட்டி வாங்க வழி வைத்தீர் ! இது எனக்கு அறவே பிடிக்க வில்லை ! நமது சல்வேசன் சாவடியை விஸ்கி மதுவுக்கும், வெடி மருந்துக்கும் அடிமைக் கூடமாய் ஆக்கி விட்டீர்.” ஜார்ஜ் […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ”நேராச்சி… நான் கிளம்பணும்” என்றார் கியுரேட். என் பக்கமாய்த் திரும்பினார். ”நாம ஒண்ணா நடந்துறலாமா. எனக்கு எதுவும் வாசிக்கத் தர்றிங்களா திரிஃபீல்ட்?” திரிஃபீல்ட் அறைமூலை மேசைமேல் குவிந்துகிடந்த புதிய புத்தகங்களின் குவியலைக் காட்டினார். ”பாத்து எடுத்துக்கலாம்.” ”என்ன அற்புதம், இத்தனை புத்தகமா?” என அவற்றை ஆசையாய்ப் பார்த்தார் கல்லோவே. ”ச். எல்லாம் குப்பை. திறனாய்வுக்குன்னு அனுப்பிருக்காங்க.” ”இதை வெச்சிக்கிட்டு நீங்க என்ன செய்விங்க?” ”எல்லாத்தையும் தெர்கன்பரி எடுத்திட்டுப்போயி எடைக்குப் போட்டால் நாலு காசு […]