நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில் ஒருத்தி மகனா யொளித்து வளரத் தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து…

அன்று இவ்வுலகம் அளந்தாய்

  அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகட முதைத்தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றுன் சேவகமே…

நெய்தற் பத்து

  நெய்தல் என்பது ஐவகைத் திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடமும்தான் நெய்தல் எனப்படும். அங்கு தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நினைந்து இரங்கியிருப்பர். இப்பகுதில்  உள்ள பத்துப் பாடல்களும் அவர்கள் இரங்கி இருக்கும் நிலையினைக் கூறுவதால் இப்பகுதி நெய்தல்…

தொண்டிப் பத்து

தொண்டி என்பது சேர நாட்டின் கடற்கரை நகரமாகும். இது தற்போது குறும்பொறை நாட்டில் ஒரு சிற்றுராய்க் காட்சியளிக்கிறது என்பர். ஒரு சிலர் மலைநாட்டில் உள்ள இந்நாளைய ஆலப்புழைதான் தொண்டி என்பர். இராமநாதபுர மாவட்டத்திலும் தொண்டிப் பட்டினம் உள்ளது. இப்பகுதியின் பத்துப் பாடல்களிலும்…
ஆண்டாள்

ஆண்டாள்

வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள் கட்டுரை தினமணி [08-01-18] இல் படித்தேன். நம்பிக்கையில்தான் ஒவ்வொருவரும் வாழ்வை நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் ஆண்டாள் கூறும் செய்தியாக நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்போம் என அவர் கட்டுரையைச் சிறப்பாகவே முடித்துள்ளார். ஆனால் இறைவனையும்…

சிறுவெண் காக்கைப் பத்து

சிறுவெண்காக்கை ஐங்குறுநூற்றில் சிறுவெண்காக்கைப் பத்து என ஒரு பகுதி உண்டு. சிறுவெண்காக்கை என்பது நீர்ப்பறவைகளில் ஒன்றாகும். இது நீர்க்கோழி போல நீர்நிலைகளில் மீன்பிடித்து உண்ணும். இதனுடல் முழுதும் காக்கைபோலக் கறுத்திருக்கும். கழுத்தின் கீழ்ப்புறம் மாத்திரம் சிறிது வெளுத்துக் காணப்படுவதால் இது சிறுவெண்காக்கை…
வெள்ளாங் குருகுப் பத்து

வெள்ளாங் குருகுப் பத்து

வெள்ளாங் குருகு என்னும் பறவையைப் பற்றிய செய்திகள் இப்பத்துப் பாடல்களிலும் பயின்று வருதலால் இப்பகுதி வெள்ளாங்குருகுப் பத்து என்று பெயர் பெற்றது. வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும், முதுகுப்புறம் சாம்பல் நிறமும் கொண்ட பறவை இது.…

நெய்தல்-ஞாழற் பத்து

ஞாழல் என்பது கொன்றை மர வகைகளில் ஒன்று. இது கடற்கரைப் பகுதிகளில்தான் காணப்படும். ‘புலிநகக்கொன்றை’ என இதைக் கூறுவார்கள். இந்தப் பத்துப் பாடல்களும் ஞாழல் தொடர்புள்ளவையாதலால் இப்பகுதி ஞாழற் பத்து எனப் பெயர் பெற்றது. ஞாழற் பத்து—1 எக்கர் ஞாழல் செருந்தியொடு…

நெய்தல்—பாணற்கு உரைத்த பத்து

பாணன்றவன் அவனுக்கு ரொம்பவும் வேண்டியவன். அவன் கூடவே எப்பவும் இருக்கறவன்; அதாலயே எல்லார்கிட்டயும் கெட்ட பேர் வாங்கறவன்; ஆனா அதைப் பத்திக் கவலைப் படாதே அவனோட ஆசைக்கெல்லாம் தொணை நிக்கறவன். கட்டினவகிட்டயும் தோழிகிட்டயும் போயி அவன் சார்பாப் பேசறவன்; ====================== பாணற்கு…

ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள்

  சங்க நூல்களான எட்டுத்தொகை நூல்களில் ‘ஐங்குறு நூறு’ தனிச் சிறப்பு பெற்றதாகும். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐவகை நிலங்களைப் பற்றி ஒவ்வொரு நிலத்திற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் கொண்ட நூல் இதுவாகும். இதில்…