author

”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”

This entry is part 13 of 19 in the series 30 அக்டோபர் 2016

”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்துத் திருமாலால் எங்கும் திருவருள்பெற்[று] இன்புறுவர் எம்பாவாய்”   ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 30-ஆம் பாசுரமான இது இந்நூலின் இறுதிப்பாசுரமாகும். பகவான் வங்கக் கடல் கடைந்த விருத்தாந்தம் இங்கு சொல்லப்படுகிறது. ஆயர்குலச் சிறுமிகளைப் பார்த்துக் கண்ணன் […]

கள்வன் பத்து

This entry is part 12 of 21 in the series 16 அக்டோபர் 2016

எட்டுத் தொகை நூல்களில் மூன்றாவதாக வைத்துச் சிறப்பிக்கப்படுவதுதான் ஐங்குறு நூறு ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்கும் திணைக்கு ஒன்றாக நூறு பாடல்கள் கொண்ட நூல் இது. அந்த நூறு பாக்களும் பத்துப் பத்தாகப் பகுத்து பல்வேறு தலைப்புகளில் அடக்கப்பட்டுள்ளன. அவற்றில் மருதத்திணை மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டு நூலின் முதலில் வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் ஓரம்போகியார். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. இவர் […]

பெரியவர்க்கும் செய்தி சொல்லும் பெருமை மிகு பாடல்கள்

This entry is part 17 of 19 in the series 2 அக்டோபர் 2016

[தங்கப்பாவின் “பூம் பூம் மாட்டுக்காரன்” குழந்தைகட்கான பாடல்கள் நூலை முன்வைத்து]   குழந்தைப் பாடல்களுக்கு இன்றியமையாதவை எளிமையும், ஓசை நயமுமே ஆகும். சிறுவர் பாடல்களுக்கு இவை இரண்டோடு சற்றுக்கருத்தும் சொல்லப்பட வேண்டும். ஆனால் அக்கருத்து வலிமையாக வலியுறுத்தப்பட்டு திணிப்பதாக இருத்தல் கூடாது. ‘அதோ பாரு காக்கா’ எனத் தொடங்கும் பாடலைக் குழந்தைப் பாடலாகவும், ‘ஓடி விளையாடு பாப்பா’ என்னும் பாடலை சிறுவர் பாடலாகவும் கொள்ள இடமுண்டு. இக்கருத்துகளுடன்தாம் தங்கப்பாவின் அண்மை வெளியீடான “பூம் பூம் மாட்டுக்காரன் “ […]

ஆஸ்கர்

This entry is part 4 of 15 in the series 25 செப்டம்பர் 2016

வளவ. துரையன் உலக அளவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான ஒன்று ஆஸ்கர் விருதாகும். இது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தோன்றிய விருதாகும். தொடக்கத்தில் இதன் பெயர் “அகாடமி அவார்டு” என்பதுதான். 1929—ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் திரைத் துறையைச் சார்ந்த ஒரு சிலர் ஒன்று சேர்ந்து “தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ஸ்” எனும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். அதன் முதல் தலைவராக டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் என்பவர் இருந்தார். […]

தொல்காப்பியத்தில் மகப்பேறு

This entry is part 5 of 15 in the series 25 செப்டம்பர் 2016

பாச்சுடர் வளவ. துரையன் என் நண்பரான ஒரு நவீன இலக்கியவாதி கேட்டார் “உங்கள் தொல்காப்பியத்தில் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்கிறீர்களே? அதில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதா?” அவர் உங்கள் தொல்காப்பியமென்று கேட்டபோதே அவரைப் புரிந்து விட்டது. “இவர் போன்ற ஒரு சிலர் பண்டைய இலக்கணமோ. இலக்கியமோ அறிந்திடாமல் அதைத் தீண்டத்தகாததாய் நினைக்கிறார்கள். இவருக்குப் புரியும்படிச் சொல்லவேண்டும்” என்று நினைத்தேன். எனவே நான் அவரைக் கேட்டேன் “குடும்பக் கட்டுப்பாடு என்றால் என்ன?” அவர் நன்கு விடை சொன்னார் […]

இயற்கை விரும்பியின் இனிய பாடல்கள் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]

This entry is part 5 of 12 in the series 11 செப்டம்பர் 2016

வளவ. துரையன் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து] பேராசிரியர் திருமிகு ம.இலெ. தங்கப்பா அவர்களின் படைப்புகளின் அடிப்படைகள் அன்பு, அறம் மற்றும் இயற்கை என உறுதியாகக் கூறலாம். நான் இத்தனை உறுதியாகக் கூறக் கரணியம் யாதெனில் அப்பெருமகனாரை நான் பல்லாண்டாக அறிவேன். அவரை நெட்டப்பாக்கம் பள்ளியில் பணியாற்றும் காலந்தொட்டே வளவனூர் அர. இராசாராமன் அவர்களுடன் சென்று சந்தித்திருக்கிறேன். குறிப்பாக முதலில் நான் சென்றபோது அவர் தென்மொழியிலிருந்து விலகியிருந்த நேரம். தென்மொழியாசிரியர் எழுதிய “ஐயை” […]

வேழப் பத்து—11

This entry is part 16 of 20 in the series 4 செப்டம்பர் 2016

  வேழம்னா ரெண்டு பொருள் உண்டுங்க; ஒண்ணு யானை; இன்னொண்ணு கரும்பு. பழைய தனிப்பாடல்ல ஒண்ணு வரும்; ஒரு பாணன் போயிப் பாடிட்டுப் பரிசு வாங்கிண்டு வருவான். அவன் மனைவி, “ நீ போயி என்னா வாங்கிண்டு வந்தே”ன்னு கேப்பா; அவன் யானைதான் வாங்கினு வந்திருப்பான்; ஆனா வேழம்னு பதில் சொல்வான்; ஒடனே அவ கரும்புன்னு நெனச்சுக்கிட்டு அப்படின்னா ஒடச்சித் தின்னும்பா; ஆனா இங்க வர்ற வேழம்றது ஒருவகையான புல்லுங்க. நாணல்னு சொல்லுவோம்ல; அது போல; உரையாசிரியர்லாம் […]

அறிவோம் ஐங்குறு நூறு

This entry is part 16 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

1. அந்தக்  காலத்துல ஆம்பளைங்களுக்கு ஒரு வழக்கம் உண்டுல்ல; அதுபோல அவன் பரத்தை ஊட்டுக்குப் போயிட்டு வந்தான்; வந்தவன் சும்மா இருக்கலாம அவ தோழிக்கிட்ட போயி “நான் அங்க இருந்தப்போ நீங்க என்னா நெனச்சிக்கிட்டிருந்தீங்க?”ன்னு கேக்கறான். அந்தத் தோழி பதில் சொல்றா; ”நாட்டை ஆளற ராஜா நல்லா இருக்கணும்; நெல்லு நல்லா வெளயணும்; பொன்னு நெறய கெடைக்கணும்; காஞ்சிப்பூவும், செனையாயிருக்கற சின்ன மீனும் இருக்கற ஊர்க்காரனான நீ நல்லா இருக்கணும்; அத்தோட ஒன் தோழனும் நல்லா இருக்கணும்” […]

பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்

This entry is part 5 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

  பாச்சுடர் வளவ. துரையன் தலைவர், இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்—607 002   “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். பெறுவதற்கு அரிய அத்தகைய மனிதப் பிறவியை எடுத்தவர்கள் இவ்வுலகில் அப்பிறவியை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அதுவன்றி, “வெந்ததைத் தின்று விதி வந்தால் மடிவோம்”என்று வாழ்தல் வாழ்வாகாது. வாழவேண்டிய முறைப்படி வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்களைத் தான் “வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்” என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. வாழவேண்டிய […]

கதம்ப மாலை [எஸ். ஷங்கரநாராயணனின் ”ஆயுள் ரேகை” நாவலை முன்வைத்து]

This entry is part 5 of 12 in the series 31 ஜூலை 2016

  சிறுகதை என்றால் என்ன? நாவல் என்றால் என்ன எனும் வினாக்களுக்கு இதுவரை சரியான விடை கிடைக்க வில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரே ஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு ஒரு சில பாத்திரங்களுடன் படைப்பது சிறுகதை எனலாம். பல்வேறு சம்பவங்களின் கலவையாக நிறைய பாத்திரங்களுடன் தள வருணனைகள் மிகையாகப் பெற்று வருவதே நாவல் எனலாம். இன்னும் கூடச் சொல்லலாம். தனியாக மணம் வீசுமொரு மலரே சிறுகதை; பலமலர்கள் சேர்ந்து கதம்பமாகிப் பலவித மணங்களைத் தருவதே நாவல் […]