author

செங்கமல மாளிகையார் ஊசல் ஆடுக

This entry is part 11 of 14 in the series 29 மே 2016

  பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் பாடியருளிய சீரங்க நாயகியார் ஊசல் என்னும் நூலின் இரண்டாம் பாடல் சீரங்க நாயகியார் ஆடி அருளும் ஊசலின் அழகை வர்ணிக்கிறது. ”அந்த ஊஞ்சல் ஒரு மலர்ப்பந்தலின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஊசலைத் தாங்க பதுமராக மணிகளாலான தூண்கள் உள்ளன. விட்டமானது வைர மணிகளால் ஆக்கப்பட்டது.  அதிலிருந்து தொங்கும் சங்கிலிகள் எல்லாம் தந்தத்திலாலானவை. ஊசலில் அமைக்கப்பட்டுள்ள தட்டோ   மாணிக்கத்தால் செய்யப்பட்டது” என்று கோனேரியப்பனையங்கார் பாடுகிறார். ” துங்கமலர்ப் பந்தரின்கீழ் பதும ராகத் […]

அடியில் உறங்கும் அறச்சீற்றம் [சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவலை முன்வைத்து]

This entry is part 6 of 10 in the series 8 மே 2016

”மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்பது ஒரு சான்றோர் பாடியது. ஆனால் காலம் காலமாக மாதர்தம் நிலயை எண்ணிப் பார்த்தால், அதாவது ஆண்கள் அவர்களை இச்சமுதாயத்தில் நடத்தும் விதத்தைப் பார்த்தால், [சமுதாயத்தில் மட்டுமன்று வீட்டில் கூடத்தான்] அஃதொன்றும் மாதவம் செய்து பிறக்க வேண்டிய பிறப்பு என்று சொல்ல முடியவில்லை. சகோதரர் மனைவியைத் துகிலுரிந்த கதை, மனைவியின் மேல் சந்தேகப்பட்டுத் தீக்குளிக்க வைத்த கதை, காட்டிலே குழந்தைகளுடன் தவிக்க விட்டுச் சென்ற கதை எல்லாம்தான் நமக்கு […]

இயந்திரப் பொம்மை

This entry is part 4 of 16 in the series 21 பெப்ருவரி 2016

  பாட்டி இடித்த வெத்தல உரலும் பதுங்கி ஆடிய நெல்லுக் குதிரும் வேட்டை என்று ஓணான் அடித்ததும் வேகமாய் ஏரியில் குதித்து மகிழ்ந்ததும் மதிய வெயிலில் அஞ்சி டாமல் மரத்தில் ஏறித் தேனை எடுத்ததும் குதித்தக் குரங்கைக் கல்லால் அடித்ததும் குபீரெனச் சீற ஓடிச் சிரித்ததும் விடிய விடிய கூத்துப் பார்த்து விரலில் பள்ளியில் அடி வாங்கியதும் அடுத்த வீட்டுக் கோழி முட்டையை அறியாமல் போய் எடுத்து வந்ததும் கண்ணா மூச்சி ஆடி மகிழ்ந்ததும் கபடி ஆடிக் […]

இனிய மணம் வீசும் இருவாட்சி மலர்

This entry is part 18 of 19 in the series 7 பெப்ருவரி 2016

  ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டுப் பொங்கல் மலராக உதயகண்ணன் இலக்கிய மலர் வெளியிட்டு வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இதை ஒரு தவமாகச் செய்து வருகிறார். இந்த ஆண்டும் வெளிவந்திருக்கிறது இருவாட்சி. மொத்தம் 32 படைப்பாளிகளின் பல்வகையான படைப்புகள் கொண்ட இம்மலரை எஸ். சங்கர நாராயணன் தொகுத்தளித்துள்ளார். முதலில் கதைகளைப் பார்ப்போம். பாரதி கூறுவார். ”ஏடுகளில் இலக்கியத்தில் வீதியில், தெருவில், நாட்டில் காதலென்றார் களிக்கின்றார். ஆனால் வீட்டில் என்றால் வெறுக்கின்றார்”. [சொற்கள் மாறியிருக்கலாம்] இதை […]

திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் – மாலே மணிவண்ணா

This entry is part 8 of 19 in the series 31 ஜனவரி 2016

    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்                   மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்                   ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய்   இது திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் ஆகும். இப்பாசுரத்திற்குப் பூர்வாச்சாரியார்கள் மிகச்சிறப்பான அவதாரிகை அருளியிருக்கிறார்கள். கண்ணன் இச்சிறுமிகளிடம் பேசுகிறானாம். ”சிறுமிகளே! வியாசர் ’சாரீரகமீமாம்ஸை’ என்று பெரிய […]

மரணத்தின் கோரம்

This entry is part 10 of 22 in the series 24 ஜனவரி 2016

  இரு நண்பர்கள் பிரியாமல் இருப்பதைக் காட்ட ஒரு திரைப் படத்தில் விசு இப்படி வசனம் எழுதுவார். ”அவர்கள் இருவரும் நகமும் சதையும் போல” கேட்டவர் உடனே கூறுவார். “ஆமாமாம்; நகச்சுத்தி வந்தா நகம் சதையைத் திட்டும்; சதை நகத்தைத் திட்டும்” பிரச்சனை என்ப்து வளர்ந்துவிட்ட பிறகு நட்பு பிளவுண்டு இரு கூறுகளாகி விடுவது இயல்பாகி விடுகிறது. கூடிப்பழகிய காலமெல்லாம் பறந்து போய் ஒருவருக்கொருவர் கூற்றுவனாக நினைக்கத் தொடங்குகிறார்கள். அடுத்தடுத்த வீடுகளைச் சேர்ந்தவர்கள் சிறுவயது முதல் ஒன்றாய் […]

முறையான செயலா?

This entry is part 10 of 12 in the series 10 ஜனவரி 2016

காலை இளவெயில் சூடாக ஒத்தடம் கொடுக்கச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தேன். சுற்றுப்புறச் சுவர் மீது ஒரு காக்கை “உள்ளே வரலாமா?” என்று கேட்பது போல் உட்கார்ந்திருந்தது. மணல் ஏற்றிய ‘டயர்’ வண்டிகள் சென்று கொண்டிருந்தன. கட்ட வண்டிகள் எனப்படும் மரச் சக்கர வண்டிகளின் காலம் முடிந்து விட்டது. காய்கறி வியாபாரி தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு போனார். அவிழ்த்து விடப்பட்ட ஆடுகள் யார் வீட்டில் மேயலாம் என்று வேவு பார்த்துக் கொண்டு சென்றன. திடீரென ஒரு பத்துப் […]

பாம்பா? பழுதா?

This entry is part 15 of 18 in the series 3 ஜனவரி 2016

    ”வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பழமொழி சரியாய்த்தான் சொன்னார்கள் போலிருக்கிறது. இரண்டுமே எளிதாகப் பிறர் உதவியின்றி எந்தத் தடங்கலும் வராமல் செய்ய முடியாத செயல்கள்தாம். அப்பப்பா, இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் எத்தனை சோதனைகள், எவ்வளவு சிரமங்கள் எல்ல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாய் முடித்தாகி விட்டது” என்று நினைத்துக் கொண்டான் பரமு. ’பரமேஸ்வரன்’ என்ற பெயரே ’பரமேஸ்’ என்றாகி இப்போது நண்பர் வட்டாரத்துக்குள் ‘பரமு’ என்றாகி விட்டது. எப்படிப்பட்ட பெயர் […]

வாரிசு

This entry is part 17 of 23 in the series 20 டிசம்பர் 2015

வளவ. துரையன் அந்த வனாந்தரமே மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. கருங்காலி மரங்களும், தேவதாரு மரங்களும் வீசிய மெல்லிய காற்றில் கிளைகளை ஆட்டி ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தன. செடிகளும், கொடிகளும் தத்தம் பூக்களைச் சொரிந்து மண்ணை மறைத்து மலர்ப்படுக்கை அமைக்க முயன்று கொண்டிருந்தன. நீர்நிலைகளில் இருந்த முதலைகள் கரையேறி யாருக்காகவோ காத்திருப்பதுபோல் காட்சியளித்தன. தடாகத்தின் மீன்கள் தங்களைப்போன்று முதல் அவதாரம் எடுத்தவன் வரும்போது பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் துள்ளிக் குதித்தன. காய்ந்த தேக்குமர இலைகள் மெதுவாகச் சத்தமிடும் வண்ணம் அவற்றின் […]

காடு சொல்லும் கதைகள்

This entry is part 9 of 17 in the series 6 டிசம்பர் 2015

  ஆதிகால மாந்தன் இயற்கையைக் கண்டுதான் முதலில் அச்சப்பட்டான். அதனால்தான் அதைத் தெய்வமாக வணங்கத் தலைப்பட்டான். இறைவன்தான் இயற்கையின் வடிவாய் இருக்கின்றான் என்று பல சமயச் சான்றோர்கள் கருதியதால்தான் “வானாகி, மண்ணாகி, வளியாகி ஒளியாகி” என்று பாடினர். நிலம், நீர், தீ, காற்று, மண் என்று எல்லாமே நமக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம்தான் அவற்றை முழுக்கச் சுரண்டும் பணியை மெதுவாகச் செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாகக் காடு நமக்கு இயற்கை அளித்த […]