2023 ஆம் ஆண்டு, சித்திரை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 148) 

வானவில் 148 இடதுசாரிகளின் ஒற்றுமை காலத்தின் கட்டாய தேவை! VAANAVIL issue 148 – April 2023 has been released and is now available for download at the link below. 2023 ஆம் ஆண்டு, சித்திரை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 148) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள இணைப்பில்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 293 ஆம் இதழ் 

அன்புடையீர்,                                                                         23 ஏப்ரல் 2023  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 293 ஆம் இதழ் இன்று (23 ஏப்ரல் 2023) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/  இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:  அறிவிப்பு: முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும்  கட்டுரைகள்:   தெய்யம் — மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம் - ரகு ராமன்  அதிட்டம் - நாஞ்சில் நாடன்   ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை- மீனாக்ஷி பாலகணேஷ்  மரபுகள், பழக்கங்கள், வழக்கங்கள்  - உத்ரா  ஜோ…

அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி

வணக்கம் இத்துடன் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி - 2023 முடிவுகளை இணைத்திருக்கின்றேன். உங்கள் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி. அன்புடன் குரு அரவிந்தன். .................................................            குரு அரவிந்தன் வாசகர் வட்டம் சிறுகதைத் திறனாய்வுப் போட்டி-2023, முடிவுகள்               1ஆம்பரிசு  முகம்மது…
காணிக்கை

காணிக்கை

மீனாட்சி சுந்தரமூர்த்தி.   சுவர்க்கடிகாரம் ஆறு முறை  அடித்து ஓய்ந்தது ஒரு வழியாக  லேப்டாப்பை  மூடிவிட்டு எழுந்தவன் , கண்களில் கைநிறைய நீரை  அடித்து முகம் கழுவிக் கொண்டு வந்தான். அம்மா தந்த  காபிக் கோப்பையை  வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வந்து…
இஃப்தார்

இஃப்தார்

தமிழ் முஸ்லிம்களெல்லாம் எறும்பென்றால் அந்தப் பள்ளிவாசல்தான் கரும்பு. ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைக்கும் அதற்கு  முன் நடக்கும் இஃப்தார் என்கிற நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கும் உற்றார் உறவினர்களுடன் இந்தப் பள்ளியில் கூடுவதும் கலைவதும் என்றென்றும் நீங்காத நினைவுகள். அதற்குக் காரணம் தமிழ்முஸ்லிம்களின்…
தெரியாதது 2

தெரியாதது 2

ஆர் வத்ஸலா தெரியும் அப்போதே உனக்கு எனது அருமைகளும் அசட்டுத்தனங்களும் தெரியும் அப்போதே உனக்கு எனது வலுக்களும் வலிகளும் அப்போது தெரியாத எது தெரிந்து விட்டது இப்போது உன் விலகலுக்குக் காரணமாய்?
தெரியாதது 1

தெரியாதது 1

ஆர் வத்ஸலா கரிசனமாக விசாரிக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு மௌனமாக என் வலிகளை அனுப்பி வைக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு தொடாமல் தோள் கொடுக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு என்னை விட்டு நீ விலகினால் எனக்கு என்ன ஆகும் என்பது மட்டும் தெரியவில்லையே!
சிறு ஆசை

சிறு ஆசை

ஆர் வத்ஸலா நீ வருவாய் என தெரியும் நீ கிளம்பி போய் ஆண்டுகள் ஆகி விட்டன அதற்கு கணக்கு வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கில்லை நான் எப்போதும் போல் பணி புரிகிறேன் சமைக்கிறேன் சாப்பிடுகிறேன் தூங்குகிறேன் பெரும்பாலான இரவுகள் சில சமயம்…
ஆசை 2

ஆசை 2

ஆர் வத்ஸலா நேற்று என் தோழி இறந்து போனாள் படுக்கவில்லை தூக்கத்தில் போய்‌விட்டாள் அழுது ஓய்ந்து விட்டேன் சமாதானப் படுத்திக் கொண்டேன் படுக்காமல் போய் சேர்ந்தாள் புண்ணியவதி இல்லாவிட்டால் கஷ்டப்பட்டிருப்பாள் புருஷன் பாம்புக்கும் பழுதைக்கும் நடுவில் அவளுக்கு ஏகமாக புடவை நகை…
ஆசை 1

ஆசை 1

ஆர். வத்ஸலா என்னை உதறி விட்டு போய் விட்டாய் வெகு தூரம் அது உன் உரிமையென ஏற்றுக் கொண்டாலும் துடித்தோய ஓராண்டாயிற்று உதறிய காரணம் கூறப் படாததால் இதுவோ அல்ல அதுவோ எனக் குடைந்து குதறப்பட்ட மனப்புண் ஆற மேலும் ஆறு…