முற்றத்தில் நிஜம்

அந்த குழந்தை கையில் பையுடன்  ஓடியாடி விளையாடியது. முற்றத்து தண்ணீரில்  நிலவை பிடித்தது வானத்து நட்சத்திரங்களையும்தான் ! மேகத்தில் வெள்ளிமலையோ, பீமரதமோ  எல்லாம் அந்த பைக்குகள் போட்டது. மீண்டும் சிரித்துக்கொண்டே முற்றத்தில் ஓடியது. அப்பா வாடிய முகத்துடன்  திண்ணையில கொட்டாவிவிட்டார்.  நாளை…
முன்னொரு காலத்துல…

முன்னொரு காலத்துல…

ஜெயானந்தன் முன்பெல்லாம் சாப்பாட்டு நேரம் ஆனந்தமாய் இருந்தது. அம்மா ,அவித்தசோறு சட்டியை ஆவிபறக்க, பெரிய கூடத்தில்  வாழைத்தண்டு சாம்பாரும், கத்திரிக்காய் கூட்டோடு  கூப்பாடு போடுவாள்.  காக்கை கூட்டம்போல்,  நானும்,அண்ணாவும், அக்காவும் தம்பியுமாய்,  அத்தை பிள்ளைகளோடு,  பதினான்கு உருப்படிகள், தட்டில்தாளமிட,  பாட்டி அன்போடு…
<strong>நாடகம் – ஸ்தீரி பருவம்-   அ. மங்கை.</strong>

நாடகம் – ஸ்தீரி பருவம்-   அ. மங்கை.

ஜெயானந்தன். அ.மங்கையின் புதிய நாடகப் படைப்பாக “ ஸ்தீரி பருவம், மலர்ந்துள்ளது. போரின் கொடூரத்தையும், பேரழிவையும் பெண்களின் பார்வையில் பார்க்கப் படுகின்றது. மகாபாரத்தின், ஸ்தீரி பருவத்தின் காட்சிகளை மேடையின் பின்புறத்தில் டிரஸ்கி மருதுவின் கைவண்ணத்தில் ஓவியங்களாக அமைத்து, நாடக நடிகர்கள் உடைகள் வெண்மையில் கொடுத்துள்ளனர். அமைதிக்கான…

அதே பாதை

_________________ எத்தனை நாள்தான்  ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறைதான்- தலை முடியை மாற்றி, மாற்றி, தாடிமீசையை மாற்றி, மாற்றி  ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறை பார்த்தாலும்  அதே மூஞ்சி, அதே கண்ணாடிதான். எத்தனை முறை நடந்தாலும்…

பிரபஞ்சன் என்னும் பிரபஞ்சம்

  வானம்பாடி இயக்கியத்தின் மூலம், பிரபஞ்சன் , என்னும் இலக்கிய வானம்பாடி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப்    பறந்து, அதன் பயணத்தை முடித்துள்ளது .பிரபஞ்சன் , புதுமைப்பித்தனை பொய்யாக்கிவிட்டார். எழுத்தை நம்பி யாரும் வாழ்வை நடத்தமுடியாது என்ற நினைப்பை, அவர் கடந்து…

ஈரானியக் கவிதை. வாடகை வீடு.

அலிசா அபீஸ். வாடகை வீட்டில் உனது கோட்டை கழட்டி துருபிடித்த ஸ்டாண்டில் தொங்கவிடு. அலுத்துப் போன காலனிகளை இங்கொன்றும் அங்கொன்றாய் வீசு. உடலை சாய்க்க மர நாற்காலியை தேடும் கண்களில் தெரிவது குவிந்து போன துணிகளின் கூட்டம். கவிதை எழுத எந்த…
விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்

விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்

  கடைசியாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான்  ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசியது, என் நினைவில், மறக்கமுடியாத நிகழ்வாகத்தான் கருதுகின்றேன். அன்றே அவருக்கு அவரது உடலே…

கல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)

சமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற சில மூத்த - இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை, மொழிப்பெயர்ப்பு துறையை, மொழிப்பெயர்ப்பாளர்கள் குறித்தும்குறித்து பேசினார்கள். வெளி ரெங்கராஜன் "விளக்கு" அமைப்பையும்,அதன் நோங்கங்களையும்  பற்றி கூறினார். அரசு நிறுவனங்கள், தமிழின்…

புனித ஜார்ஜ் கோட்டையும், மன்னார்குடி மங்காத்தாவும்.

புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று சிறப்புமிக்க இடம். பல புனிதர்கள் அங்கிருந்து, நம்மை ஆண்டுள்ளனர். பல நேர்மையான,சிறந்த,அரசியல் அறிவும், நாவன்மையும் கொண்ட பல தலைவர்கள் நாம் பார்த்துள்ளோம்.  ஓமந்தூரர்  முதல், ஜெயலலிதா வரை பல முதன் மந்திரிகள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.…
நாற்காலிக்காரர்கள்

நாற்காலிக்காரர்கள்

இந்திய திருநாடே, தமிழகத்து அரசியல் கோமாளிகளையும், ஏமாளி மக்களையும் பார்த்து சிரிக்கின்றனர். பொறுமையின் உருவம், பன்னீர், அம்மாவின் சமாதியில் தியானம் செய்துகொண்டு, பொங்கி எழுந்தார். உண்மைகளை போட்டுடைத்தார். போயஸ் தோட்டத்து உண்மைகளை, நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார். இதுவரை, அந்த கூட்டத்துட ன் அங்கமாக…