உ(ரு)ண்டை பூமியை நோக்கி

அண்டத் தொகுதியின் எந்த ஒரு கோளின் கோடியிலிருந்தோ ஓர் அதீத ஜீவி கண்ணிமைக்கும் மின்னல் இயக்கத்தில் கட்டமைத்த விண்கலத்தில் உ(ரு)ண்டை பூமியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்.   எத்தனை சூரியரோ? சூரிய வெளிச்சக் கீற்றுகளின் சூக்குமப் படிக்கட்டுகளில் சும்மா மாறி மாறித்தாவி…

இரயில் நின்ற இடம்

  இரயில் எதற்கோ நிற்க ’இரயில் நின்ற இடமாகும்’ பெயர் தெரியாத ஒரு பொட்டல்வெளி.   இரயில் விரித்த புத்தகம் போல் வெளியின் இரு பக்கங்களிலும் விரிந்து காணும் காட்சிகள்.   பாதி பிரபஞ்ச ஆரஞ்சுப் பழமாய் ஆகாயம் கவிழ்ந்து கிடக்கும்.…

இன்னொரு எலி

எப்படி எலியைப் பிடிக்கும் எனக்கு?   எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கடித்துக் குதறியிருக்கும்.   சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருக்கும்   புத்தகங்களின் தராதரம் தெரியவில்லை அதற்கு.   எழுதப் படிக்கத் தெரியாத அற்பம் அது.   சினந்து கவிதை எழுதி சபித்து…

பாலச்சந்திரன்

  கண்களில் கூடக் கபடில்லையே.   மிரளும் பார்வையில் மிருகமும் இரங்குமே.   என்ன செய்தான் பாலகன்?   என்ன செய்யமுடியும் சிறகுகள் பிணிக்கப்பட்ட சின்னப் பறவை?   தொடும் தூரத்தில் நிறுத்தி துப்பாக்கி ரவைகளால் துளைத்து விட்டான்களே ‘தேவதத்தன்கள்’.  …

சற்று நின்று சுழலும் பூமி

  பூமி மேல் தன் முதலடியை எடுத்து வைக்க முயலும்.   உயிர்ப் பந்தாய் மெல்ல எழுந்து நிற்கும்.   பூமிப் பந்தைப் பிஞ்சுக் கால்களால் உருட்டி விடப் பார்க்கும்.   பிஞ்சுக் கால்களின் கிளுகிளுப்பில் சுழலும் பூமியின் களிப்பு கொஞ்சம்…

’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை

’ஒரு தூக்கு’ - ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை (‘A Hanging’- An Essay by George Orwell) (1) ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் பர்மாவில் மழையில் முழுதும் நனைந்த ஒரு காலை வேளை. மஞ்சள் தகர மென்தகடு(tinfoil) போன்று நலிந்த வெளிச்சம்…

ஐந்து கவிதைகள்

(1) கனவின் மேல் கல் விழாமல் வெயிலையும் வெட்டவெளியையும் சுருட்டிக் கொண்டு ஒரு மூலையில் படுத்துக் கிடக்கும் நாய் உறங்கித் தீர்க்கும் தன் பிற்பகல் தனிமையை. நாயின் கனவைச் சுடாமல் எப்படி மெல்லச் சூரியன் சாய்ந்து கொண்டிருக்கிறான்! உன் கனவு போலத்…

இருள் தின்னும் வெளவால்கள்

  காலத்தின் கண்ணியில் இன்னொரு இரவு கூடியிருக்கும்.   மழையின் இடைவிடா மோகத்தில் மையிருள் இன்னும் குழைந்திருக்கும்.   மின்னல் வெட்டி மழை கொளுவி நிலம் எரிவதாய்த் தோன்றும்.   சரமென இடி இடித்து கடித்துக் குதறும்   குகையை யார்…
இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்

இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்

43-வயதான முகம்மது அப்ஜல் குரு(Mohammad Afzal Guru) தூக்கிலிடப்பட்டுள்ளான். 2001-ல் பாராளுமன்றத்தின் மேல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சதிப் பின்ணணியில் முக்கிய பங்கு வகித்த குற்றத்திற்காக  உச்ச நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட பின் அப்ஜல்…

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்

காடு இடுங்கியதாய் எறும்புகள் கூடியிருக்கும். கலங்கி அது விசும்புவதாய்ப் புட்கள் கீச்சிடும். காட்டின் எந்த மரத்திலிருந்தும் உதிரா ஒரு ’வண்ணப்பூ’ உதிர்ந்திருக்கும். பறந்து பறந்து சென்ற அதன் பின்னால் காடு பலகாலம் திரிந்து திரிந்து போயிருக்கும். இனி காட்டின் அழகை வெளியின்…