(லதா ராமகிருஷ்ணன்) உருப்பெருக்கிக்கருவி, காந்தக்கல், ஒரு கணத்தில் உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒன்றாக்கிவிடும் புதுரக ஒட்டுபசை, அதிமதுர சகோதரத்துவ இசை வேண்டும்போதெல்லாம் பெருகச்செய்யமுடிந்த அன்புவெள்ளம் ஆங்காரப் புழுதிப்புயல் – இன்னும் ஏராளமானவற்றோடு வெற்றியாளர்களை வலைவீசித் தேடித்தேடிக் கண்டெடுத்துக் கொண்டவாறு சிலபலர்….. பெற்றெடுத்த பிள்ளையாய் தத்தெடுத்து முத்தம் கொடுக்க அல்லது குற்றேவல்காரராய் பாவித்து எத்தித் தள்ள. இவர்களுடைய குரல்வளைகளிலிருந்தெல்லாம் இடையறாது துருத்திக்கொண்டு வெளிக்கிளம்பும் கால்களின் வளைநகங்கள் கத்தியைக் காட்டிலும் கூர்மையானதும், […]
(லதா ராமகிருஷ்ணன்) ”கண்டிப்பாகப் போய்ப் பார்த்துவிடு – இல்லையென்றால் உன்னை எழுத்தாளரென்றே யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றாள் லாலல்லல்லா……… ராகம்போட்டுப் பாடிக்கொண்டே வந்த தோழி நீலா அல்லது லீலா. நானே ஒப்புக்கொள்வதில்லையே என்று நகைத்த என்னைப் பகையாளிபோல் பார்த்தபடி “பார்த்தே தீரவேண்டும்; நேர்த்திக்கடன் செலுத்தாதிருப்பது தெய்வக்குத்தம்- உய்ய வழி தேடிக்கொள். அவ்வளவுதான் சொல்வேன்” என்றாள். பல வருடங்களுக்குப் பிறகு பார்த்த தெனாலியில் கிளப் டான்ஸர்(?) […]
அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – இந்திய வம்சாவளிப் பெண் இயக்குனரான திருமதி சமீம் ஷரீஃப், இங்கிலாந்தில் வாழும் பெண்மணி. அவர் இயக்கிய இந்த இரண்டு பிரபல காதல் படங்களுமே, உலகின் பலரால் பேசப்பட்ட படங்கள் ஆகும். சமீம் ஷரீஃப்பின் இந்த இரண்டு படங்களிலுமே, இந்திய வம்சாவளிப் பெண்களே லெஸ்பியன் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். ‘The World Unseen’ என்ற ஒரு திரைப்படம், 1950-இல் தென்னாப்பிக்காவில் நடந்த, வெள்ளையர்களின் இனவெறியை களமாகக் கொண்ட இந்தியக் காதல் கதை […]
இரட்ணேஸ்வரன் சுயாந்தன் தமிழில் நவீன கவிதையின் தற்கால முகத்தை எழுத்து என்ற சிற்றிதழ் மூலம் அழுத்தமாக உருவாக்கியவர்கள் கா.நா.சு மற்றும் சி.சு.செல்லப்பா ஆகிய இருவரும்தான். பிரமிள், நகுலன், பசுவையா (சுரா), கா.நா.சு முதலியவர்கள் எழுதிய கவிதைகளே இன்றைய நவீன கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் முன்னோடியாகவும் இருந்துள்ளது. இருந்து வருகிறது. ‘புத்தியால் எழுதப்படுபவைதான் புதுக்கவிதை’ என்று ஜெயகாந்தனும் ‘புத்தியாலும் எழுதப்படுபவையே புதுக்கவிதை’ என ஜெயமோகனும் ஒரு இடத்தில் கூறியிருந்தனர். ஜெயகாந்தன் அறிவார்ந்த தன்மையே நவீன கவிதைக்குப் போதும் என முன்வைக்க […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ 1. https://youtu.be/j91XTV_p9pc 2. https://youtu.be/ltllF60VvKI 3. https://youtu.be/YcJEdzkAoJs 4. https://youtu.be/0tqgWuSIZUg 5. https://youtu.be/6lbJrvtxWNE 6. https://youtu.be/gc-ZJKayhWo ++++++++++++++++ நீர்க்கோளின் மகத்தான நிலவுக் காட்சி ++++++++++++++++++ நிலவு பூமியை விட்டு அப்பால் நகரும்போது, பனித்தள வழுக்கி காலணியில் சுற்றும் மாது, மெதுவாகும் சமயம் கைகளை நீட்டுவதுபோல், பூமியின் சுழற்சியும் தளர்ந்து குன்றுகிறது. எங்களது குறிக்கோளில் ஒன்று : வானியல் காலநோக்கு [Astro-Chronology] முறையில் […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++ கவர்ச்சி மேனகா ! என்ன காரியம் செய்தாய் ? முட்டாள் ஆக்கினாய் ஒவ்வோர் ஆணையும் ! முட்டாள் ஆக்கினாய் ! கவர்ச்சி ஊர்வசி ! என்ன காரிய செய்தாய் ? எல்லா விதிகளை மீறினாய் ! விதிகளை மிதிப்பதை அனைவ ருக்கும் காட்டினாய் ! கவர்ச்சி மேனகா ! என்ன காரியம் செய்தாய் ? எல்லா விதிகளை முறித்தாய் […]
கூகல்பர்க் நினைவு சுழற்கிண்ண கைப்பந்துப் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. அதை வெற்றிகரமாக நடத்திய எனக்கு ஊழியர்களின் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டானது. தலைமை மருத்துவ அதிகாரிக்கு ஆதராவாக இருந்த பலரின் ஆதரவும்கூட எனக்குக் கிடைத்தது. நண்பர்கள் பாலராஜ், கிறிஸ்டோபர் இருவருடன் மாலையில் சமாதானபுரம் தாண்டிய காட்டு மேட்டுக்குச் சென்றேன். அங்கு சாய்ந்து கிடந்த மரங்களின்மேல் அமர்ந்து கொண்டோம். அப்போது பால்ராஜ் ஆலய தேர்தல் […]
நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில் காலதாமதமும் சிரமமும் ஏற்படலாம். அதோடு கால் நரம்புகளும் பாதிக்கப்படுவதால் காலில் உணர்ச்சி குன்றிப்போவதால் காலில் காயம் உண்டாவது தெரியாமல் போகலாம். வலி தெரியாத காரணத்தால் புண் பெரிதாகலாம். கால்களில் வெடிப்பு, வீக்கம், புண், சதைக்குள் புகுந்த நகம். கால் […]