சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை

This entry is part 10 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  பேராசிரியர் சேதுபதி மேலச் சிவபுரியில் கல்வி கற்றவர். கவிதை நாடகமும் எழுதியுள்ளார். பாரதியார் , ஜெயகாந்தன் எழுத்துக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ” சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் :என்ற இத்தொகுப்பில் 54 கவிதைகள் உள்ளன..புதிய சிந்தனைகள் , எளிமை , படிமம் ஆகியன இவரது கவிதை இயல்புகள் ஆகும். புத்தகத் தலைப்புக் கவிதை ஏழ்மையைச் சொற்கோலம் போட்டுக் காட்டும் யதார்த்தக் கவிதை ! குருணை பொங்கிக் கஞ்சி வடிச்சாச்சு திட்டு வாங்கி அண்ணாச்சி கடையில் […]

கடைசிக் கனவு

This entry is part 11 of 28 in the series 12 ஏப்ரல் 2015

சோழகக்கொண்டல் இலக்கின்றி எல்லையுமின்றி மிதந்து மிதந்தேறி மெல்லப் பறக்கிறேன் சூரியன் சென்று மறைந்த பாதையில்   காத்திருக்கும் பொறுமையற்ற மனம் காற்றில் சருகாய் அலைகிறது விடியல் கூடாத திசைகளில்   நான் ஏங்கியலைந்த பூக்களெல்லாம் பழுத்துக் கிடக்கின்றன தூங்காது கிடந்து துரத்திய இலக்குகள் காலாவதியாகிவிட்டன   ஏற்றிவந்த இறகுகளையும் எண்ணி எண்ணி உதிர்க்கிறேன்   கற்று வந்த எதையும் கசந்து காற்றில் கரைக்கிறேன்   தூரத்து திசைகள் எங்கிலும் துளி நீலமும் எஞ்சவில்லை   இருண்டு சூழ்கிறது […]

விதிவிலக்கு

This entry is part 12 of 28 in the series 12 ஏப்ரல் 2015

    பாலம் நெடுக நெருங்கி நின்றன வாகனங்கள் முடிவின்றி நீண்ட போக்குவரத்து நெரிசல்   பாதிக்கப் பட்ட பயணிகள் திருச்சி ஸ்ரீரங்கம் எனப் பிரித்து இரு ஊர்களைத் தனித்தனியாய்க் குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்   பாலம் இடைவழி மட்டுமோ? இரண்டற்றதாக்காதோ?   எந்த அன்புப் பாலமும் அப்படி இருக்காது இக்கரை அக்கரை பாலம் எல்லாம் ஒன்றாயிருக்கும்   நான் மாறினாலும் மாறிடுவேன் மூன்று வார்த்தையில் அவள் துண்டித்துக் கொண்டு போனது விதிவிலக்கு

நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்

This entry is part 21 of 28 in the series 12 ஏப்ரல் 2015

முருகபூபதி (தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் –திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட துறைகள் குறித்து ஏற்கனவே ஏராளமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன. அவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட ருஷ்ய மற்றும் […]

பயணங்கள் முடிவதில்லை

This entry is part 13 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  மனிதர்களுக்கென்ன  ரயிலேறிப் போய்விடுகிறார்கள்    கசிந்த கண்ணீருக்கும்  குலுக்கிய கைகளுக்கும்  மென்தழுவலுக்கும்  மௌன சாட்சியாய்க் கிடக்கும்  நடைமேடையையும்  உயரத் தூண்களையும்  கழிப்பறை வாடை கருதாமல்  பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி  நிற்கும்  பெயர் தெரியா இம்மரத்தையும்  என்ன செய்வது….. -உமாமோகன்

அப்பா எங்க மாமா

This entry is part 14 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  தமிழரசனை முதன்முதல் அந்தத் திருமண விருந்தில்தான் சந்தித்தேன். நானும் என் மனைவியும் அமர்ந்திருந்த மேசையை அப்போதுதான் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘இங்க யாரும் வர்றாங்களா சார்?’ என்று கேட்டபடி நின்றார் அவர். அந்த மரியாதை எனக்குப் பிடித்திருந்தது. இல்லையென்றதும் அமர்ந்துகொண்டு அடுத்த நாற்காலியையும் சரிசெய்தார். அவர் மனைவி வரவேண்டும் என்று ஊகித்தேன். தூரத்தில் ஒரு பெண் 2 வயதுப் பையனைத் தூக்கிக்கொண்டு நெருங்கிக் கொண்டிருந்தார். அந்தப் பிஞ்சின் கையில் ஒரு கார் பொம்மை கார் படம்போட்ட அட்டைப் […]

ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்

This entry is part 26 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  ஜெயகாந்தன்! தமிழ் இலக்கிய உலகில் பளீரென்று தோன்றிய விடிவெள்ளி! இவரின் அனைத்துப் படைப்புகளையும் படித்ததில்லை. இவ்வாறு சொல்ல நேர்ந்ததில் வெட்கம்தான். ஆனாலும் உண்மை. கவிதா பதிப்பகம் இவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது. அதைச் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியது உண்மையானாலும், முழுவதுமாய்ப் படிக்க முடியவில்லை. படைப்பு வேலைகள் குறுக்கிட்டன. எனினும் படித்தவரையில் இவருக்கு ஈடானவர் மிகச் சிலரே என்று தோன்றியது. நல்ல வேளை! சூடாமணி அவர்களைப் புறக்கணித்தது போல் சாகித்திய அகாதெமி இவரைப் புறக்கணிக்கவில்லை. ‘சில […]

மூன்றாவது விழி

This entry is part 15 of 28 in the series 12 ஏப்ரல் 2015

    உன் துணையோடுதான் இவ்வளவுத்தூரம் கடந்துவந்திருக்கிறேன்   களைப்பின்றி கவலையின்றி என்பயணம் நிகழ வழித்துணை நீதான்   இன்பபென்று எதையும் தேடவேயில்லை இன்பமில்லை என்ற எண்ணமேயில்லை துன்பமும் அப்படியே துளியும் உணர்ந்ததில்லை   புயல் வந்துபோனதற்குப்பின் அமைதியாய் நானிருக்க அரவணைத்தது நீதான்   உனக்கும் எனக்குமுள்ள உறவு உள்ள உறவு   அது உண்மையான உறவு உலகைப்பேசவைத்த உறவு   தலைவலிக்குத் தைலம்போல் உதவினாய் மனவலி நீங்க மருந்தானாய்   காலம்கரைய காரணி நீதான் கதலைத் […]

தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்

This entry is part 16 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  நேர்முகத் தேர்வின் இரண்டாம் நாள். காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டுவிட்டேன். சரியாக காலை ஏழரை மணிக்கு உணவுக் கூடத்தில் ஒன்று கூடினோம். என்னைப் போன்றே மற்ற மாணவர்களும் உற்சாகமாகவே காணப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் மருத்துவம் பயில இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை என்னைப்போல்தானே இருந்திருக்கும்? நான் அது கண்டு அஞ்சவில்லை. என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதோடு என்னை ஒரு பெரிய சக்தி இயக்கிக் கொண்டிருப்பதும் தெரிந்தது. இதுவரை நாத்திகனாக வளர்ந்து விட்ட எனக்கு […]

பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்

This entry is part 17 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  தலைவர், இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் 607002 [டாக்டர் குமார. சிவா எழுதிய “திரிகூடராசப்பக் கவிராயர்—ஓர் இலக்கியப் போக்கு” எனும் நூலை முன் வைத்து] சிற்றிலக்கியங்கள் எனப்படுபவை பேரிலக்கியங்களுக்கு நிகரான யாப்பமைதியும், இலக்கிய வளமும், கருத்தாழமும் கொண்டவை. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை சமயச் சார்பு நோக்கில் கடவுளர் பற்றி எழுதப்பட்டுள்ளன என்றாலும் அவற்றில் காழ்ப்புணர்ச்சி இல்லை எனலாம். இன்னும் கூடத் துணிந்து சொல்ல வேண்டுமாயின் சில சிற்றிலக்கியங்கள் அப்போது ஆண்ட குறுநில மன்னர்களைப் புகழ்வதற்காகத் தோன்றியவையாகக் […]