‘விஷ்ணுபுரம் விருது’

This entry is part 32 of 32 in the series 15 டிசம்பர் 2013

அன்புடையீர்! வணக்கம்; தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது. இந்த ஆண்டு முதல் விருதுத் தொகை ரூ.1,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 2013-ஆம் ஆண்டிற்கான விருது இலங்கை மலையகத்தைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் […]

மருமகளின் மர்மம் – 7

This entry is part 28 of 32 in the series 15 டிசம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா 7 பணியாள் சாப்பாடு எடுத்து வந்ததில் ரமேஷின் எண்ணங்கள் கலைந்தாலும், மேசையருகே உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிய உடனேயே, அவனது சிந்தனையும் அது நின்ற இடத்திலிருந்து மறுபடியும் தொடங்கிற்று. ஓர் ஆண் சொல்லும் வழக்கமான சொற்கள் லூசியின் வாயிலிருந்து உதிர்ந்ததை இன்றளவும் அவனால் வியப்புடன்தான் எதிர்கொள்ள முடிந்தது. ‘நாம மனசு விட்டுப் பேசணும், ரமேஷ்! உங்களுக்கு எப்ப சவுகரியம்?’ – இந்த அவளுடைய சொற்கள் அண்மையில்தான் கேட்டவை போன்று அவன் காதுகளில் ஒலித்தன. அன்று மாலை […]

நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்

This entry is part 25 of 32 in the series 15 டிசம்பர் 2013

டாக்டர் ஜான்சன் நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர். இது சிதம்பரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஊரைச் சுற்றிலும் நெல் வயல்கள் கொண்டது. வீராணம் ஏரி மேற்கில் இருந்தது. அதிலிருந்து இராஜன் வாய்க்கால் மூலமாக விவசாயத்துக்கு நீர் வரும். ஊரில் மாதா கோவிலும் பள்ளியும் உள்ளது. அதில்தான் நான் துவக்கக் கல்வி பயின்றேன். அதன்பின் நான் சிங்கப்பூர் சென்றுவிட்டேன். ஆதலால் எனக்கு தெரிந்த கிராமம் அதுதான். அதன்பின் பத்து வருடங்கள் கழித்து நான் மீண்டும் தமிழகம் […]

கடத்தலின் விருப்பம்

This entry is part 26 of 32 in the series 15 டிசம்பர் 2013

தமிழ் ஒவ்வொரு ஜூன் மாதத்தையும், பண்டிகை காலத்தையும் கவனமுடன் கடக்க விரும்புகிறது நடுத்தர வர்க்கம். ஒவ்வொரு நவம்பர் மாதத்தையும், பெருமழைக் காலத்தையும் கவனமுடன் கடக்க விரும்புகிறது புறநகரின் குடிசை வர்க்கம். ஒவ்வொரு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலும் சாலைகளைக் கவனமுடன் கடக்க விரும்புகிறது அரசு எந்திரம். — iamthamizh@gmail.com

பாம்பா? பழுதா?

This entry is part 30 of 32 in the series 15 டிசம்பர் 2013

வளவ. துரையன் ”வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பழமொழி சரியாய்த்தான் சொன்னார்கள் போலிருக்கிறது. இரண்டுமே எளிதாகப் பிறர் உதவியின்றி எந்தத் தடங்கலும் வராமல் செய்ய முடியாத செயல்கள்தாம். அப்பப்பா, இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் எத்தனை சோதனைகள், எவ்வளவு சிரமங்கள் எல்ல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாய் முடித்தாகி விட்டது” என்று நினைத்துக் கொண்டான் பரமு. ’பரமேஸ்வரன்’ என்ற பெயரே ’பரமேஸ்’ என்றாகி இப்போது நண்பர் வட்டாரத்துக்குள் ‘பரமு’ என்றாகி விட்டது. எப்படிப்பட்ட பெயர் […]

ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு

This entry is part 29 of 32 in the series 15 டிசம்பர் 2013

20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு வில்லி சான் என்பவர். அவர் அனுப்பிய தந்தி சானுக்கு ஒரு புதிய வாழ்க்கைக்கு திறவுகோலாக அமைந்தது. அவர் காதே நிறுவனத்தின் உதவி மேலாளராக இருந்தார். காதேயின் பழைய ஸ்டூடியோவை கோல்டன் ஹார்வெண்ட் வாங்கியிருந்ததால், இரு நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அதனால் வில்லி கோல்டன் ஹார்வெண்ட் படப்பிடிப்புகள் நடக்கும் போது அங்கே வருகை தந்த நடப்பனவற்றை பார்த்துக் கொண்டு இருப்பார். அவர் விநியோகத்திற்கான படங்களைத் தெரிவு செய்பவர் என்பதால், படம் எப்படி […]

திண்ணையின் இலக்கியத் தடம்-13

This entry is part 27 of 32 in the series 15 டிசம்பர் 2013

சத்யானந்தன் செப்டம்பர் 2,2001 இதழ்: பெரியார்?- அ.மார்க்ஸ் நூல் குறித்த எனது கருத்து- மா.ச.மதிவாணன்- பெரியார் எதிர்த் தேசியவாதி அல்லர். அதாவது தேசியத்துக்கு எதிரானவர் அல்லர். அவர் தமிழ்த் தேசியத்தை முன் வைத்தவர். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109022&edition_id=20010902&format=html ) இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- 1.மூப்பனார், 2.டர்பனில் மாநாடு,3. அகதிகள், 4.தெஹல்கா, 5.திருத்தங்கள் (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109021&edition_id=20010902&format=html ) பொருளாதரத்தின் அலை வடிவம்- ஒரு கடிதம்: டாக்டர் காஞ்சனா தாமோதரன்- அமெரிக்கா சமீபத்திய சில ஆண்டுகளில் காட்டிய வளர்ச்சி அபரிமிதமானது ஆனால் அடிப்படையான ஸ்திரத்தன்மை […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..!

This entry is part 20 of 32 in the series 15 டிசம்பர் 2013

   (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       எனதினிய உடம்பே ! மற்ற மனிதர், மாதர் விழையும், இச்சைகளை நான் வெறுப்ப தில்லை ! ஊனுடல் உறுப்புகளின் இச்சைகளைப் புறக்கணிப்ப தில்லை ! ஆத்மாவின் இச்சைகளில் ஏற்படும் வேட்கை, வெறுப்பில் நீ விழுவதை நம்பி ஏற்றுக் கொள்கிறேன் ! என் கவிதைகளில் உனக்கு உண்டாகும் விருப்பு, வெறுப்புகளை வரவேற்கிறேன். மனிதர், மாதர், சதி பதிகள், சிறுவர்கள், தாய், […]

பாதை

This entry is part 21 of 32 in the series 15 டிசம்பர் 2013

பாவண்ணன் எட்டே முக்காலுக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, ஒன்பதுமணிக்கு வில்லியனூரில் பஸ் பிடித்து, ஒன்பது இருபதுக்கு புதுச்சேரியில் வேறொரு பஸ் மாறி, ஒன்பதே முக்காலுக்கு சுற்றுக்கேணியில் இறங்கி, பெட்டிக்கடை ரங்கசாமிக்குச் சொந்தமான தோப்பில் நட்பின் அடிப்படையில் நிறுத்திவைத்திருக்கும் மிதிவண்டியில் வேகவேகமாக பத்து நிமிடம் மிதித்துச் சென்றால்தான் கடவுள் வாழ்த்து தொடங்குவதற்குள் பள்ளிக்கூடத்துக்குள் நுழையமுடியும். இந்த இணைப்புச்சங்கிலியில் ஏதாவது ஒரு கண்ணி அறுந்துபோனாலும் தலைமையாசிரியரின் வாழ்த்துப்பாட்டுக்கு தலைகுனிந்து நிற்கவேண்டும். அந்த அவமானம் நாள்முழுக்க நெஞ்சை அறுத்துக்கொண்டே இருக்கும். அதில் முன் […]

மழையெச்ச நாளொன்றில்…

This entry is part 12 of 32 in the series 15 டிசம்பர் 2013

வெயிலில் தலையுலர்த்திக் கொண்டிருந்தது நேற்றுபெய்த மழையில் தொப்பலாய் நனைந்த அந்தக் குடிசை. பெய்த மழையாய் கூரைவழி எட்டிப்பார்த்தது மேகத்தின் கண்ணீர் ஏழைகளின் வாழ்க்கையை… மெதுமெதுவாய் மேகப்போர்வையை விலக்கி சோம்பல்முறித்தெழுந்தான் தன் சுட்டெரிக்கும் ஒளிக்கதிர் பற்கள் காட்டி… குடிசைக்குள் மழைநீர் குளமாய்… மிதக்கும் பாத்திரங்கள்… கைகால்கள் நடுநடுங்க சோர்வாய் திண்ணையில் குழந்தைகள். கடலோடு வலைவீசி கயல்தேடி கரைதிரும்பாக் கணவன். கால்கடுக்க வாசலில் நின்றவாறு தெருமுனையை வெறிக்கப்பார்க்கும் அவள் புயலின் கூரிய நகங்கள் பிய்த்து எறிந்திருந்தன குடிசைகளின் கூரைகளை… ஆறுதல் […]