10 பெப்ருவரி 2019
latseriesid seriesname=10 பெப்ருவரி 2019
latseriesidfebruary10_201910 பெப்ருவரி 2019
latseriesidfebruary10_2019 seriesname=10 பெப்ருவரி 2019
latseriesidfebruary10_201910 பெப்ருவரி 2019
latseriesidfebruary10_201910 பெப்ருவரி 2019
latseriesidfebruary10_201910 பெப்ருவரி 2019
latseriesidfebruary10_201910 பெப்ருவரி 2019
latseriesidfebruary10_2019 seriesname=10 பெப்ருவரி 2019
latseriesidfebruary10_2019கவிஞர் பிறைசூடன் என்கிற திரைப்பட பாடலாசிரியரை பெரும்பாலான தமிழர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். அப்படியே அறிந்திருந்தாலும் ஃப்ராடுகளைப் போற்றிப் புகழுகிற, தலைமேல் தூக்கி வைத்து ஆடுகிற தமிழர்கள் அவருக்குரிய மரியாதையை இதுவரை அளிக்கவில்லை. இளையராஜா, எம்.எஸ்.விஸ்வனாதன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் பணியாற்றிய, பல ஹிட்டான திரைப்படப் பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். உங்களுக்கு மிகவும் பிடித்ததொரு பாடலை அவர் எழுதியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் மிக ஆச்சரியமான வகையில் அதை எழுதியவர் பிறைசூடன் என்பதனை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள் என்று உறுதியாகச் […]
லதாராமகிருஷ்ணன் க.நா.சு – [கந்தாடை சுப்ரமணியம்] [ ஜனவரி 31, 1912 –டிசம்பர் 18, 1988] ( “இலக்கிய விமரிசனத்தால் ஏதோ அளவுகோல்களை நிச்சயம் நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று நினைப்பதும் தவறு. இலக்கியத்தில் எந்தத் துறையிலுமே ஒரே ஒரு விதிதான் உண்டு. அந்த விதி என்னவென்றால், எப்படிப்பட்ட விதியும் இலக்கியாசிரியன் எவனையும் கட்டுப்படுத்தாது என்கிற விதிதான் அடிப்படையான விதி. இலக்கிய விமரிசனத்தின் முதல் நோக்கு இந்த விதியை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் எல்லோருக்கும் எடுத்துச்சொல்வதுதான் – – க.நா.சு) [இந்தச் […]
சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go] ++++++++++++++ [39] அணையாத கனல் ஏற்றி வைத்த உன் மெழுகுவர்த்தி ஒருநாள் காற்றடிப்பில் பட்டென அணைந்து விடும் ! எரியும் விளக்குகள் எல்லாமே ஒருநாள் அணைந்து போகும் ! உன் உடம்பும் ஒரு மெழுகு வர்த்தியே ! அதிலே ஆட்சி புரியும் ஆத்ம உயிரும் ஓர் தீக்கனல் சக்தியே ! ஒருநாள் அணைந்து போகும் தீக்கனல் ! என் வீட்டில் வாழ ஏற்றி வைத்த ஓர் கலங்கரை விளக்கு என் துணைவி ! அவள் நடமாடும் தீபம் ! குப்பெனப் புயலில் அணைந்து எங்கும் இருள் மயம் ! துணைவிக்கு அன்று நான் இட்ட தீ அணைந்தது, ஆனால் அதனால் எனது நெஞ்சில் பற்றிய தீ இதுவரை அணைய வில்லை ! அது அணையுமா ? அணையுமா ? என்றும் அணையுமா ? +++++++++++++++ [40] அறுந்த தொப்புள் கொடி பிறந்த சிசுவுக்கு இருப்பது ஒன்றில்லை , […]
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமாக இருந்த தட்டச்சுப் பணிகள் இன்று மறைந்துவிட்டன. தட்டச்சு வேலைகள் எப்படி மாறி இன்றைய புதிய வேலைகளாக மாறியுள்ளது? இன்றைய புதிய வாய்ப்புகள் என்னென்ன? செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ந்துவிட்டால், இன்றைய அலுவலக வேலைகள் மறைந்து விடுமா? பரவலான வேலை வாய்ப்புகள் எங்கே இருக்கக் கூடும். இந்தப் பகுதியில் இந்த முக்கிய வாழ்வாதார விஷயத்தை ஆராய்வோம்
வந்தவாசி. :. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலுக்கு, திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான விருது வழங்கப்பட்டது. திருப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பூர் பாரதி கார்டனில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா அரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்.07) அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு, திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆ.முருகநாதன் தலைமையேற்றார். தமிழ்ச் சங்க செயலாளர் ஆடிட்டர் […]
பின்னூட்டங்கள்