குமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு . அந்தத் தெருவின் தொடர்ந்த பாதை கிள்ளிப் பாலம் தாண்டி வளைந்து நெளிந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்கிறது. உள்ளே நுழைந்ததுமே சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நுழைந்த உணர்வு இருக்கும். மளிகைக் கடைகள் சார்ந்த வணிகப் பகுதியில் வரும்போது நாகர்கோவில் கோட்டாறு கம்போளத்தெருவுக்குள் நுழைந்த உணர்வும் ஏற்படும். மலையாளத் தமிழர்கள் ஆ.மாதவனின் […]
அவன் உணவு மேஜையில் அவனுக்கென்று தயாரிக்கப்பட்ட விஷ உணவை அவன் அடிக்கடி உண்டு தீர்க்கிறான் அவனைச் சிறைப்படுத்தும் பிரச்சனைகள் பின்னர் அவன் காலடியில் மிதிபடுகின்றன வெட்டப்பட்ட சிறகுகள் அவனுக்கு மட்டும் மீண்டும் வளர்ந்துவிடுகின்றன அவ்வப்போது துயரங்களை உள்வாங்கி அவன் சீரழித்து வாழ்கிறான் கிட்டாதனவற்றின் பட்டியலை அவன் உதறிவிட்டு நடக்கிறான் —- இதோ இன்னும்கூட விஷ உணவுகள் அவன் மேஜையில் காத்துக் கொண்டிருக்கின்றன.
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ் இன்று (10 ஜனவரி 2021) வெளியாகி இருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு – சுந்தர் வேதாந்தம் பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி – பதிப்புக் குழு பியர்: கசக்கும் உண்மைகள் – லோகமாதேவி ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா? – கடலூர் வாசு இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா? – ஏகாந்தன் தேடியபின் பறப்பது – நாச்சு – பயணக் கட்டுரை சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – ரவி நடராஜன் கற்றலொன்று பொய்க்கிலாய் – உத்ரா சூர்ய சக்தி வேதியியல் – பானுமதி ந. சூரிய ஒளியால் தோலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் மருந்துகள் – முனைவர் ராஜேந்திர பிரசாத் தேகயாத்திரை – பாஸ்டன் பாலா – திரைப்பட விமர்சனம் கவிதைகள்: வெற்று யோசனைக்கெட்டா வண்ணத்துப்பூச்சி – கு.அழகர்சாமி மார்கழி சா.கா. பாரதிராஜா கடலும் காடும் – அருணா சுப்ரமணியன் கதைகள்: ஒன்றே வேறே – ஸ்ரீரஞ்சனி சௌவாலிகா – சுஷில் குமார் வான்பார்த்தல் – முனைவர் ப. சரவணன் தவிர: 2020: அறிவியல் முன்னேற்றங்கள் – காணொளி 2020: அஞ்சலி – ஒளிப்படங்கள் இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகளை அந்தந்த படைப்புகளின் கீழேயே பதிவு செய்ய வசதி செய்திருக்கிறோம். அதல்லாது உங்கள் கருத்துகளை மின்னஞ்சல் வழியே அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதுவே முகவரி. தளத்தில் உங்கள் வரவை எதிர்பார்க்கும் சொல்வனம் பதிப்புக் குழுவினர்.
ஜெ.பாஸ்கரன் கடைத்தெரு கதைகள் (ஆ.மாதவன்) எழுத்துலகின் ‘சின்ன ஜானகிராமன்’ என்று அறியப்படும் ஆ.மாதவன் கதைகள் வித்தியாசமானவை – அவர் வாழ்ந்த கடைவீதியையே களமாகக் கொண்டு, எழுதிய கதைகளின் தொகுப்பு ‘கடைத்தெருக் கதைகள்’. (கிளாசிக் சிறுகதை வரிசை – நற்றிணைப் பதிப்பகம்). அனந்த பத்மனாபர் ஆலயத்தின் கிழக்கு முகமாக அமைந்த ஆலய வீதி, மொத்த,சில்லறை வியாபார ஸ்தலமாகத் திகழ்ந்ததனால், ‘சாலைக் கடைத்தெரு’ எனப் பெயர் பெற்றது. பின்னர், மார்த்தாண்ட வர்மாவின் அமைச்சர், ராஜா கேசவதாஸ்தான், இந்த வணிக வட்டத்திற்கு […]
ஸிந்துஜா பல பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தது. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கான முன்னுரையில் “இவைகள் கதைகளல்ல, காட்சிகள்” என்று தி.ஜா. எழுதியிருப்பார். ஒரு தலைசிறந்த கலைஞனால்தான் இத்தகைய லேசான நாணம் தலைகாட்டும் வார்த்தைகளை இரைச்சலற்று எழுத முடியும்..’அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதைப் பல கட்டுரைகளில் தனது கதைகளைப் பற்றி அவர் பேசும் போது நாம் கவனிக்க முடியும். ‘பிள்ளையார் பிடிக்கிறேன்’ என்று குரங்கைப் பிடித்து விட்டு மர்க்கட கணபதி என்று கூப்பிடும் சூழலில் இது ஒரு அதிசயித்தக்க குரல். […]
வணக்கம்எனது ஆக்கங்கள் பற்றிய திறனாய்வுப் போட்டி ஒன்றை எனது ‘வாசகர் வட்டத்தினர்’ நடத்த விரும்புகின்றார்கள். போட்டி பற்றிய விபரத்தைத் தங்கள் இணையத்தளத்திலும் வெளியிட விரும்புகின்றார்கள்.தங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. அன்புடன் குரு அரவிந்தன் ………………………………………………………. வெல்லுங்கள் 110,000 ரூபாய்கள்!எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி. இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50வது ஆண்டு நிறைவான தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை […]
அந்தக் கவிஞன் கோடுகளை முக்கியமாக நினக்கிறான். அவன் இணைகோடுகள் என எண்ணிக் கரம் கோர்த்தவை குறுக்கு வெட்டுக் கோடுகளாய் மாறியது அவனுக்கு ஒரு சோகம். மணமக்களை இணைகோடுகளாய் என்று வாழ்த்துவது என்றுமே சேர முடியாதவர்கள் என்றுதான் பொருள்படும். அப்படி வாழ்த்தப்பட்டவர்கள் இன்று வழக்கு மன்றப்படியில் நிற்கிறார்கள். தண்டவாளங்களும் மேலே தொங்கும் மின்சாரக் கம்பிகளும்தான் ஆசிரியர் இணைகோடுகள் என்று சொல்லித் தந்தார் இரண்டுமே ஆபத்தானவை. குறுக்கு வெட்டுக்கோடுகளும் வாழ்வில் முக்கியமானவை. அனுபவம் கற்றுத் தருபவை கண்டிப்புகளும் சங்கடங்களும் அனுபவம்தானே […]
மருத்துவர் அவனைக் காலையில் நடக்கச் சொல்லி விட்டார் நோயில்லை தற்காப்புதான் நடக்கும்போதும் சிந்திக்க வேண்டும் என்பது அவன் எண்ணம் அப்போது புதிய கருத்துகளும் கவிதைகளும் தோன்றும் ஆனால் சரியாக நடக்க வேண்டும் நாம் சரியாக நடந்தாலும் வாகனங்கள் மீது கவனம் தேவை. காலைநடையில்தானே இப்போதெல்லாம் வெட்டுகிறார்கள் வலப்புறம் நடப்பதுதான் சிறந்தது என்பார் ஒரு சிலர் நடை என்றால் ஒழுக்கம் என்று பொருள் கூறுவர். இங்கும் பிறரின் நடைகளே நம் நடையை வழி நடத்துகின்றன பொற்கொல்லன் வருவதை ‘விலங்கு […]
அழகியசிங்கர் என் நண்பர் ஒருவரிடம் இரவு பத்து மணிக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன். நான் பொதுவாக இரவு 11.30 மணிக்கு மேல் தான் தூங்கப் போவேன். திடீரென்று அசோகமித்திரன் சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது. இரண்டு கதைகளை அவர் குறிப்பிட்டார். ஒன்று புலிக்கலைஞன். இரண்டாவது கதை எலி . “இரண்டு கதைகளையும் சாதாரணமாகத்தான் எழுதியிருக்கிறார். அக் கதைகளை ஏன் விசேஷமாகக் குறிப்பிடுகிறார்கள்?” என்று கேட்டார். அவர் சொன்னதை நான் நம்பவில்லை. நான் அக் […]
மொழிபெயர்ப்பு : மூலம் : ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ] தமிழில் : தி.இரா.மீனா சில சமயங்களில் மழை பெய்யும்போது இளம்பருவத்தில் தனிமையிலிருக்கும் போது மனிதர்களுக்கு ஏன் ஆடை வேண்டுமென்று வியப்படைந்த தருணங்களை நினைத்து, சில சமயங்களில் மழை பெய்யும் போது எனக்குள் நான் சிரித்துக் கொள்கிறேன். எப்போது நான் பெரியவனாவேன் நாளை நான் பெரியவனாவேன்’ என்று கத்திக் கொண்டே மழையில் ஓடிய நேரங்களை சில சமயங்களில் மழை பெய்யும்போது நினைத்துக் கொள்கிறேன். […]