தாகூரின் கீதப் பாமாலை – 69 பிரிவில் புரியும் ஐக்கியம் .. !

This entry is part 14 of 23 in the series 16 ஜூன் 2013

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     பிரியும் வேளை வந்து விட்டால் பிறகு விட்டுச் செல் எனக்கு  இறுதியில் உனது மன நிறைவுப் பூர்த்தியை ! காலங் காலமாய் நான் காலவெளியில் மிதக்க விடுவேன் வெகு தூரத்தில் எனக்குரிய கனவுக் கீதங்களாய் ! பலகணி வழி நீ பார்க்க வருகிறாய்   சில சமயம் நானங்கே இல்லாத போது !   எனைக் காண முடியாத […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 11

This entry is part 13 of 23 in the series 16 ஜூன் 2013

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை, மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 11. சிந்த​னையால் உலக மக்க​ளை எழுச்சி​கொள்ளச் ​செய்த ஏ​ழை “என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடி​மையின் ​மோகம்” அட​டே என்னங்க பாட்​டெல்லாம் பிரமாதமா இருக்கு. ​ரொம்​ரொம்ப மகிழ்ச்சியா இருக்கீங்க ​போலருக்கு. என்ன ஏதாவது சிறப்புச் ​செய்தி இருக்கா? இல்​லையா? அப்பறம்….ஓ…ஓ…ஓ….யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா? […]

அந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘நிலைக் கண்ணாடி நிமிடங்கள்‘ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா உரை

This entry is part 12 of 23 in the series 16 ஜூன் 2013

(ஐ சி எஸ் ஏ மையம் சென்னை எழும்பூர் – ஜுன் 16, 2013.)   அறிவிற் சிறந்த இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன். சற்று கூச்சத்துடனும் மேலான தயக்கத்துடனும் தான் நான் இங்கே உங்கள்முன் நிற்கிறேன். கவிதைகளின் நல்ல ரசிகனாக என்னை நான் சொல்லிக்கொள்ள இயலவில்லை. கவிஞர்கள் மீது எனக்கு பொறாமை உண்டு. நான் கவிஞன் அல்ல, என்கிற முடிவுக்கு நான் எப்போதோ வந்துவிட்டேன். வாசிக்க என என் முதல்கட்டத் தேர்வு கவிதைகள் அல்ல. எழுதவும் […]

மூன்று சைன விண்வெளி விமானிகள் பூமியைச் சுற்றிவரும் சைன அண்டவெளிச் சிமிழுக்குள் நுழைந்தார்.

This entry is part 11 of 23 in the series 16 ஜூன் 2013

    (கட்டுரை:  3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     விண்வெளிச் சுற்றுச் சிமிழுடன் சைனாவின் அண்டவெளிக் கப்பலை இணைத்து மூவர் நுழைந்தார் முதன்முறை வெற்றி கரமாய். பெண் விமானி ஒருத்தி மூவரில் ! விண்சிமிழ் இணைப்பாகிச் சோதனை செய்தார். புது விண்வெளி நிலையம் 2020 இல் பூமியைச் சுற்றிவரும் விண் வெளியில் நீந்தி மண் மீது கால் வைத்தார் முதலில் முன்னொரு சைனத் தீரர் ! அமெரிக்க விண்வெளி வீரர் போல் […]

ஒரு நாள், இன்னொரு நாள்

This entry is part 10 of 23 in the series 16 ஜூன் 2013

  நள்ளிரவைக் கடந்ததுமே விழிப்பு வந்துவிட்டது கொள்ளிவாய்ப் பிசாசாய். கால்கள் சென்றன தம்போக்கில் கணினியை நோக்கி. திரை யொளிரத் தொடங்குவதற்காய் காத்திருக்கும் நேரம் கரை மீறும் ஆத்திரம். பின், சுரங்கெட்ட பியானோ வாசிப்பாய் விசைப்பலகை மீது தட்டத்தொடங்கும் விரல்கள் சில. திறந்துகொள்ளும் இணைய இதழில் எழுதியுள்ளோர் பெயர்களைத் துருவியாராய்ந்து தயாரித்துக்கொள்ளப்படும் ‘ஹிட்-லிஸ்ட்’. இவர் ஃபர்ஸ்ட், அவர் நெக்ஸ்ட்…. கதையோ கவிதையோ கட்டுரையோ-அட, உள்ளடக்கமோ சாரமோ – ஒரு பொருட்டில்லை யெப்போதும்   _ விருப்பம்போல் கருப்பொருளைத் திரிக்கத் தெரிந்தால் […]

மருத்துவக் கட்டுரை துரித உணவும் ஒவ்வாமையும்

This entry is part 9 of 23 in the series 16 ஜூன் 2013

  டாக்டர் ஜி.ஜான்சன். இன்று துரித உணவு ( fast food ) உண்ணுவது பரவலாக உலகெங்கும் வழக்கில் உள்ளது. இதனால் ஒவ்வாமை உண்டாகலாம் என்பது ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பழக்கம் சிறு பிள்ளைகளிடையே அதிகமாகக் காணப்படுகின்றது. பல வேளைகளில் சிறு பிள்ளைகளின் தோலில் சிவந்த நிறத்தில் பொறி பொறியாக தோன்றி அரிப்பை உண்டுபண்ணும். அல்லது அடிக்கடி சளி பிடிக்கும். கண்கள்கூட சிவந்து வீங்கி வலிக்கும். மருத்துவர் இதை ஒவ்வாமை ( allergy ) என்று சொல்லி […]

மனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)

This entry is part 8 of 23 in the series 16 ஜூன் 2013

(ஒரு வாசிப்பனுபவம்)     வாசிப்புப் பழக்கமுள்ளவர்கள் புதிது புதிதாகத் தேடித் தேடிப் படித்துக் கொண்டேயிருப்பார்கள். வெவ்வேறு எழுத்தாளர்களின் படைப்புக்கள் எப்படியிருக்கின்றன என்று உற்றுக் கவனித்துப் படிப்பார்கள். உண்மையிலேயே எழுத்தை இவர்கள் ஆள்கிறார்களா அல்லது வெறுமே  வரி கடந்து செல்லும் எழுத்தா என்று நோட்டமிடுவார்கள். எழுத்தை நேசிப்பவர்களுக்கு கதைகள் மட்டுமே என்றோ, நாவல்கள் மட்டுமே என்றோ, கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் என்றோ பிரித்துத் தனித்து நின்று ஒன்றிலேயே பயணித்தால் கதையாகாது. எல்லாவற்றையும்தான் படித்தாக வேண்டும். அனைத்தையும்தான் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14

This entry is part 7 of 23 in the series 16 ஜூன் 2013

‘காலேஜ்ல இன்னிக்கு என்ன விசேஷம்’ எனும் கேள்வியை அதற்கு முன்னால் தீனதயாளன் ராதிகாவிடம் கேட்டதே இல்லை.  கேட்டிருந்திருப்பின், இப்போது கேட்ட கேள்வியைச் சாதாரணமாக அவளால் எடுத்துக் கொண்டிருந்திருக்க முடியும்.  அப்படி இல்லாததால், தான் அன்று கல்லூரிக்குப் போகவில்லை என்பது அவருக்கு எப்படியோ தெரிந்து போய்விட்டது என்பதை அவள் புரிந்துகொண்டாள். ‘அப்பாவுக்கு அது எப்படித் தெரிந்திருக்க முடியும்?  அவர்தான் காலையில் தம் அலுவலகத்திலிருந்து அந்தச் சிறுக்கியின் வீட்டுக்குப் போய்விட்டாரே?  … ஒரு வேளை தம் காரைப் பின்தொடர்ந்து பைக்கில் […]

செங்குருவி

This entry is part 6 of 23 in the series 16 ஜூன் 2013

    மான்கள் துள்ளும் அவ் வனத்தில் செங்குருவிக்கென இருந்ததோர் மரம் தனித்த மீன்கொத்தியொன்று அமரும் கிளைக்கு நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம் செங்குருவிக்குப் பிடித்தமானது   அல்லிப்பூக்களுக்குச் சிறகு முளைத்து பறந்து திளைக்கும் கனவுகளையெல்லாம் சொட்டு நீருஞ்சி வரும் கணங்களில் குளத்தில் விட்டு வரும் செங்குருவி கிளையில் அமர்ந்திருக்கும்   தன் ஒற்றைக் கண்ணால் பார்க்கும் உதிர்ந்த மயிலிறகு சொன்ன கதைகளையெல்லாம் கேட்டுக் கேட்டுச் சலித்திருக்கும் செங்குருவி வானவில் விம்பம் காட்டும் தெளிந்த தடாகத்தைத் தன் பச்சை […]

தூக்கு

This entry is part 5 of 23 in the series 16 ஜூன் 2013

                   டாக்டர் ஜி.ஜான்சன்   சிங்கப்பூர் தன்னாட்சி பெற்றபோது மக்கள் கொண்டாடினர். அதன் முதன் முதல் அமைச்சர் டேவிட் மார்ஷல் .அவர் ஒரு யூதர். பிரபலமான குற்றவியல் வழக்கறிஞர். ஆனால் அவர் நீண்ட நாட்கள் பதவியில் இல்லை. ஆங்கிலேயர்களிடமிருந்து முழு சுதந்திரம் பெற்றுத் தருவதாக சொல்லி லண்டன் சென்றவர் அதில் தோல்வியுற்றதால் பதவியை இராஜினாமா செய்துவிட்டார். அவரைத் தொடர்ந்து லிம் இயூ ஹாக் முதல் அமைச்சர் ஆனார். அப்போது தொழித் சங்கங்களில் பலம் அதிகமிருந்தது. இவை கம்யூனிஸ்டுகளின் […]