இந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் ஒர் வலைப்பூ

This entry is part 12 of 42 in the series 25 மார்ச் 2012

அன்புடையீர் இந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் வகையில் ஒர் வலைப்பூவை கூடிய விரைவில் எளிய வகையில் அறிமுகப்படுத்த உள்ளோம். உங்களுக்கு எங்கள் முயற்சியில் ஆர்வமும், பிரெஞ்சிந்திய மொழிகளில் ஞானமும், பிரதிபலன்களை எதிர்பார்க்காது உதவ முடியுமென்ற நம்பிக்கையுமிருப்பின் தங்கள் ஆதரவும் பங்களிப்பும் அவசியமாகின்றன ஏப்ரலில் தொடங்கவிருக்கும் இவ்வலைத்தளம் குறித்து நண்பர்களுக்கு உரியகாலத்தில் தெரிவிப்பேன். நா.கிருஷ்ணா nakrish2003@yahoo.fr ———————————————————– Chers amis, Afin de faire connaître la littérature Indienne auprès des Français, […]

நிழல்-பதியம் இணைந்து குறும்படப் பட்டறை

This entry is part 11 of 42 in the series 25 மார்ச் 2012

அன்புடையர் வணக்கம், கீழே கண்ட செய்தியை தங்கள் இதழில் வெளியிடும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். வெள்ளி விழா குறும்பட பட்டறை. நிழல்-பதியம் இணைந்து தமிழகத்தின் 24 மாவட்டங்களில் குறும்படப் பட்டறையினை நடத்தியுள்ளது.இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் 3400 பேர் திரைதொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டு பயனடைந்துள்ளனர்.இன்று திரைப்படம்,தொலைக்காட்சி மற்றும் உள்ள ஊடகங்களில் பணியாற்றி வருகின்றனர்.25vathu குறும்பட பயிற்சி பட்டறையினை மே மாதம் இரண்டாவது வாரம் ஈரோட்டில் நடத்த இருக்கின்றனர். /கல்லூரிகளில் மட்டுமே கற்றுத் தரப்படும் திரைப்படக் கல்வியை கிராமப்புற […]

ஜீன்கள்

This entry is part 10 of 42 in the series 25 மார்ச் 2012

காலையிலிருந்தே டாக்டர் இளமாறனிடமிருந்து நாலைந்து போன் கால்கள் வந்துவிட்டன.. .அவருடைய வயசுக்கு அந்தகாலங்களில் சுப்பிரமணி,முருகன்,முனுசாமி,வேணு,அல்லதுமுரளீதரன்,முகுந்தன், ஸ்ரீநிவாசன், இப்படித்தான் பெயர் வெச்சிருக்கணும். வித்தியாசமாய் டாக்டர்.இளமாறன்.?. அவங்கப்பா தமிழ் வாத்தியா இருந்திருக்கணும்..இளமாறன் தான் .. டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜெனெட்டிக் ரிசர்ச் அண்டு அனலைஸஸ் என்கிற எங்கள் துறையின் தலைவர்.. .நிறைய மூளை,நிறைய படிப்ஸ்.—மாலிக்யூலர் பயாலஜியில் போஸ்ட் கிராஜுவேட், ப்ளஸ் கலிஃபோர்னியா ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி கல்வி நிலையத்தில், ஜீன் ம்யூட்டேஷனில் நான்கு வருட ஆராய்ச்சி டாக்டரேட். அதைவிட நிறைய முன்கோபம், கொஞ்சம் […]

பழமொழிகளில் அளவுகள்

This entry is part 9 of 42 in the series 25 மார்ச் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பழந்தமிழகத்தில் பல்வேறுவிதமான அளவுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. நீட்டலளவை, நிறுத்தல் அளவை, முகத்தலளவை உள்ளிட்ட அளவுகளுக்குப் பல்வேறுவிதமான பெயர்கள் வழக்கத்திலிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தனிப் பெயர்களால் வழங்கப்பட்டு வந்தது. இவ்வளவுப் பெயர்கள் நம் முன்னோர்களின் கணக்கியலறிவிற்குச் சான்றாக அமைந்துள்ளன. இவ்வாறு வழங்கி வந்த அளவுப் பெயர்களைப் பழமொழிகளில் அமைத்து நமது வாழ்விற்குரிய பண்பாட்டு நெறிகளை நமது முன்னோர்கள் எடுத்துரைத்துள்ளனர். அளத்தல் நமது முன்னோர்கள் ஒவ்வொரு […]

‘பெற்ற’ மனங்கள்…..

This entry is part 8 of 42 in the series 25 மார்ச் 2012

வாணி ஜெயம்,பாகான் வாசலில் இருந்த அழகிய இரு இணைக் காலணிகள் அவனுக்கு ஆச்சரிய கலந்த ஆனந்ததைத் தந்தன. நிச்சயம் பொன்னி அக்காவந்திருக்க வேண்டும்.அவன் விருட்டென்று வீட்டினுள் நுழைந்து கூடத்திற்கு பக்கத்தில் இருந்த அறையை எட்டி பார்க்கையில் அவனது கணிப்பு பொய்த்துவிட வில்லை. பொன்னி அக்கா ஒருகழித்து எதிர்புற சுவரை பார்த்த வண்ணம் படுத்திருந்தாள்.அவன் மெல்ல நெருங்கி அக்காவின் தோளைத் தொட்டு, “பொன்னிக்கா” என்றழைத்தான். பொன்னி அக்கா திடுக்கிட்டு விழித்தாள்.விழிகளில் ஆச்சரியம் விரிய மெல்ல நிதானமாக எழுந்து அமர்ந்தாள். […]

என் சுவாசத்தில் என்னை வரைந்து

This entry is part 7 of 42 in the series 25 மார்ச் 2012

என் அறையில் நான். நாற்காலி அதன் சித்திரத்தை வரைந்திருக்கும். மேஜை அதன் சித்திரத்தை வரைந்திருக்கும். நிலைக் கண்ணாடி தனக்குள் தன் சித்திரத்தை வரைந்திருக்கும். வெளிச்சித்திரங்களை உள்ளே கூட்டி வந்திருக்கும் ஆகாயம். என் சித்திரத்தையும் வரைய ஆரம்பித்தேன். மாறிக் கொண்டேயிருக்கும் என்னை எப்படி வரைவது? மேகங்களை மைக்குப்பியில் ஊற்றிக் கொள்ளமுடியுமா? அறைக்குள்ளிருக்கும் ஆகாயத்தை மைக்குப்பியில் கவிழ்த்தேன். என் சுவாசத்தில் மறுபடியும் மறுபடியும் என்னை வரைந்து கொண்டேயிருப்பேன். எப்போது முடியும்? ”முடியும் போது” முடியும். ’முடியும் போது’ யார் உயிர் […]

முள்வெளி- அத்தியாயம் -1

This entry is part 6 of 42 in the series 25 மார்ச் 2012

குளத்தின் வடக்குப் பக்கம் பிரதான சாலை வாகனச் சந்தடியும் நல்ல வெளிச்சமாயிருந்தன. பிற கரைகளில் அதிக வெளிச்சமில்லை. மேற்குப் பக்கம் சிறிய கோபுரம் ஒன்றின் மீது விளக்கு எரிந்து கொண்டிருந்தது. குளத்திலிருந்து தவளைகள் தொணப்பிக் கொண்டிருந்தன. கோவிலை விட்டு வெளியே ஓடி வந்த இரு சிறுவர்கள் கோவிலை ஒட்டி இருந்த வீட்டினுள் தடதடவென ஓடினார்கள். “அம்மா, செல்வாவுக்கு காலுல அடி பட்டு ரத்தம் வருது” என்றான் உயரமானவன். “அடப் பாவி, எங்கேடா?” என்று அவர்களின் தாய் ஓடி […]

சங்க கால சோழநாட்டு ஊர்கள்

This entry is part 5 of 42 in the series 25 மார்ச் 2012

ப.செந்தில்குமாரி முனைவர்ப் பட்ட ஆய்வாளர், அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம்   சங்க காலத்தமிழகம் அரசியலால் சேர, சோழ, பாண்டிய vஎன மூவேந்தர்களின் பெருநாடுகளாகவும், சிறு குறுநிலங்களாகவும், பிளவுண்டு கிடந்தது. ஆனால் மொழியாலும், பண்பாட்டாலும் தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தனர். இந்த மூன்று பெருநாடுகளிலும் வாழ்ந்த புலவர்கள், மூவேந்தர்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்ததை சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.   சங்க இலக்கியம் பாடியவர்களில் பெயர் தெரிந்த புலவர்களாக 473 பேர் காணப்படுகின்றனர். இவர்களுடன் சேர, சோழ, பாண்டிய, […]

இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் குடும்பத்தலைவி சித்திரிப்பு

This entry is part 4 of 42 in the series 25 மார்ச் 2012

சி. இளஞ்சேரன் முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம் சிறுகதைகள், கவிதைகள், நாவல் போன்ற படைப்புகளை அளித்து வரும் தஞ்சை மண் சார்ந்த படைப்பாளி ஆவார். இவரின் படைப்புகளில் குடும்பம் சார்ந்து அமைகின்ற குடும்பத்தலைவி சித்திரிப்பு முறை கவனிக்கத்தக்கதாக உள்ளது. இவரின் சிறுகதைகளில் இடம் பெறும் குடும்பத்தலைவியர் இயல்பான,குறும்பு இழையோடுகிற பாத்திரங்களாகப் படைக்கப் பெற்றுள்ளனர். திருமணமான பெண் ஒரு குடும்பத்தின் தலைவியாக அமைந்து அக்குடும்பத்தை நிர்வாகம் செய்யக் […]

சித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி

This entry is part 3 of 42 in the series 25 மார்ச் 2012

சென்னை மண்ணுக்கென்று ஏதோ விசேஷம் இருக்கிறது போலும். சென்னை மாநகரமாக அது உருவெடுக்கும் முன்பே இந்த விசேஷம் ஏற்பட்டு அதன் பிறகும் நீடித்து வந்திருக்கிறது. எங்கெங்கோ பிறந்து எவ்வாறெல்லாமோ அலைந்து திரிந்தானபின் சென்னையில் வந்து அடங்கிய சித்தர்கள் பலர். சென்னை தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்று வடசென்னையின் ஒரு பகுதியாகவே கருதப்படும் திருவொற்றியூர் கடற்கரையில் சமாதி கொண்ட பட்டினத்தார், காவிரிப்பூம் பட்டினத்துக்காரர்தான். அவர் கையில் இருந்த பேய்க் கரும்பின் கசப்பு திருவொற்றியூர் என்கிற இன்றைய சென்னையின் […]