முதிர்ந்து விட்டால்..!

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

தென்றலின் வீதி  உலா  மணத்தைத் தொலைத்தது மல்லிகை ..! கம கமத்தது மரம் வெட்டுப் பட்டது சந்தனம்…! கொடியை உயர்த்திப் பிடித்ததும் வெற்றுக் கொடியானது வெற்றிலை..! தோகை முதிர்வை அறிவித்ததும் ஆலையில் சிக்குண்டது கரும்பு..! கர்ப்பகிரஹத்துள் அநீதி வெளிநடப்பு செய்தது தெய்வம்..! காற்றால் நகர்ந்தது புயலால் புரண்டது பாய்மரம் …! வெப்பத்தால் பறந்தது கனத்தால் விழுந்தது மழை..! மௌனத்தில் பேசியே தவம் கலைத்தது மேகங்கள்…! அலைந்து அலைந்து வாசம் தேடியது தென்றல்..! உயர்ந்து நின்றாலும் என்ன பயன்? […]

அன்றொருநாள்…இதே நிலவில்…..

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  (சரோஜ்நீடின்பன்)   முன்குறிப்பு: (தலைப்பைப்படித்துவிட்டு,இதுகதைஎன்றுநினைத்துஉள்ளேநுழைந்துவிட்டீர்களா? தவறுஎன்னுடையதல்ல. பரவாயில்லை. மேலேபடியுங்கள்.   இது 2060ல்சமர்ப்பிக்கப்பட்டஒருஆராய்ச்சிக்கட்டுரையின் சுருக்கம்.  ஐம்பதுஆண்டுகளுக்குமுன்தமிழகம்என்றுஅழைக்கப்பட்டு வந்தபகுதியில்வாழ்ந்திருந்ததமிழர்களின்கலாச்சாரத்தைப்பற்றி  வெளிநாட்டில் வாழும்ஒருபிஎச்டிமாணவன்எழுதியது.  சமர்ப்பிக்கப்பட்டவிஷயங்களுக்குநான்பொறுப்பல்ல. இதைப்  படித்துவிட்டுத்தன்னைப்பற்றிஎழுதியதுஎன்றுயாரும்என்னிடம்சண்டைக்குவரவேண்டாம்).   ஐம்பதுவருடங்களுக்கு முன் ஒரு பகுதியில்  மனிதர்கள் எப்படிவாழ்ந்தார்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றித்  தெரிந்து கொள்வதற்குப்பலமுறைகள்கையாளப்படுகின்றன. அந்தகாலக்கட்டத்தில்வெளியானபத்திரிக்கைகள், புத்தகங்கள், நடந்தநிகழ்ச்சிகளின்  தொகுப்புக்கள்,  ஆவணப்படங்கள்,புகைப்படங்கள், தலைவர்கள்பேசியபேச்சுக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றிலிருந்துக்  குறிப்பெடுத்துஅறியலாம். அந்தமுறையில் 2003 முதல் 2013 வரைவெளியானஆயிரத்திற்கும்அதிகமானதமிழ்த்திரைப்படப்பாடல்களில்ரேண்டம் முறையில் தேர்ந்தெடுத்த, புகழ் பெற்ற, பலராலும் விரும்பப்பட்ட பதினோரு பாடல்களின் […]

 வால்ட் விட்மன் வசனக் கவிதை – 76 சொட்டும் இரத்தத் துளிகள்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Trickle Drops) சொட்டும் இரத்தத் துளிகள் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       சொட்டும் இரத்தத் துளிகள் ! விட்டுச் செல்லும் நீல இரத்தக் குழல்கள் ! சொட்டுகள் எனது ! துளிகளாய்ச் சொட்டின மெதுவாய் ! தெளிவாய்ச் சிந்தின, துளிகள் ! சிறைப் பட்ட போது உன்னை விடுக்கச் செய்து உண்டான காயத்தில் கசிந்திடும் இந்த […]

இலங்கை

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  (1)   என்ன ஆனான் அவர்களிடம் அவன்?   காணவில்லை அவன்.   ’காணாமல் போய் விட்டானெ’ன்று ஏதோ தெரியாததைத் தெரிவிப்பது போல் தெரிந்ததே தெரிவிக்கப்படும்.   கரைந்த கனவா அவன்?   பொய்த்தவர் முதலில் தம்மிடம் தோற்றுப் போனவரென்று அவர்களுக்குத் தெரியவில்லை.   எப்படி அவர்கள் கொலை நிழலை மண்ணில் குழி தோண்டிப் புதைத்து விட முடியுமென்று நம்புகிறார்கள் ?   மண்ணிலிருந்து மீட்டெழும் அவன் எலும்புக் கூடு மானுடத்தின் சாட்சியாய்.   அது […]

மாயன்  மணிவண்ணன்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  வளவ. துரையன் நாயகனாய்நின்றநந்தகோப[ன்]னுடைய கோயில்காப்பானேகொடித்தோன்றும்தோரண வாசல்காப்பானேமணிக்கதவம்தாள்திறவாய் ஆயர்சிறுமியரோமுக்கறைபறை மாயன்மணிவண்ணன்நென்னலேவாய்நேர்ந்தான் தூயோமாய்வந்தோம்துயிலெழப்பாடுவான் வாயால்முன்னமுன்னம்மாற்றாதேயம்மாநீ நேசநிலைக்கதவம்நீக்கேலோரெம்பாவாய் இதுதிருப்பாவையின்பதினாறாம்பாசுரமாகும். இதற்குமுன்உள்ளபத்துப்பாசுரங்களிலும்தங்கள்இல்லத்தின்உள்ளேஉறங்கிக்கொண்டிருக்கும்பத்துப்பெண்களைஎழுப்பியதாகக்கூறப்பட்டுள்ளது. இதன்மூலம்ஆயர்பாடிச்சிறுமிகள்அனைவரையும்எழுப்பியதாகக்கொள்ளலாம். இதுஆச்சார்யசம்பந்தத்தைஉண்டாக்கபுருஷகாரமாய்இருப்பவர்களைஉணர்த்தும்பாசுரம். இதுமுதற்கொண்டு 7 பாசுரங்களில்எல்லாப்பெண்களும்வந்துவாசல்காக்கும்முதலிகளையும், நந்தகோபர், யசோதை, பலராமன், நப்பின்னைப்பிராட்டி, முதலியவர்களைமுன்னிட்டுக்கொண்டுகண்ணபெருமானைஎழுப்புகிறார்கள். முதலிலேயேஇவர்கள் ’செய்யாதனசெய்யோம்’ என்றுகூறியிருக்கிறபடியால்இப்போதுபாகவதர்களைக்கொண்டுபகவானைப்பற்றநினைக்கிறார்கள். ”வேதம்வல்லார்களைக்கொண்டுவிண்ணோர்பாதம்பணிந்து” என்றுநம்மாழ்வார்அருளிச்செய்திருப்பதுஇங்குநினைக்கத்தக்கது. பாஞ்சராத்ரசாஸ்திரத்திலும்பெருமாளின்திருக்கோயிலுக்குச்சேவிக்கச்செல்லும்போதுஅச்சன்னதியின்திருவாசல்காவல்புரியும்முதலிகளிடம்அனுமதிபெற்றுத்தான்செல்லவேண்டும்என்றுகூறப்பட்டிருக்கிறது. ஆயர்குடிச்சிறுமிகள்அதைஅறியார்களானாலும்ஸ்ரீவைஷ்ணவகுடியிலேவந்தவர்களாதலின்இந்தஅனுஷ்டானம்அவர்களிடம்இயற்கையாகவேகுடிகொண்டுள்ளதுஎன்றுகொள்ளலாம். மேலும்பகவத்சம்பந்தத்தால்உண்டானபிறப்பு, முக்திக்குக்காரணமானகல்வி, பகவத்கைங்கர்யமானகர்மம்ஆகியபெருமைகள்யாரிடம்காணப்படுகிறதோஅவர்கள்அனைவரும்சேவிக்கத்தக்கவர்கள்ஆவர். இந்தஆய்பாடிப்பெண்கள்செய்வதெல்லாமேஅனுஷ்டானமாகிறது. ‘ரஸவாதம்கைப்பட்டவன்இருந்தஇடமெல்லாம்பொன்னாமாப்போலேபகவானிடம்ப்ரேமைகொண்டவர்கள்சொல்லும்எல்லாமேவார்த்தையாம்’என்றுநஞ்சீயர்நம்பிள்ளைக்குஅருளியதுஇங்குநினைவுகூறத்தக்கது. சூர்ப்பனகைபாகவதர்களைப்பற்றாமல்நேரேபகவானைப்பற்றமுயன்றதால்படாதபாடுபட்டாள். விபீஷணன்நேராகஸ்ரீராமனிடம்செல்லாமல் ”நான்வந்திருப்பதைஎம்பெருமானுக்குத்தெரிவியுங்கள்” என்றுகூறிச்சென்றதைநினைவுகூறவேண்டும். ‘வில்லிபுதுவைவிட்டுசித்தர்தங்கள்தேவரைவல்லபரிசுவருவிப்பரேல்அதுகாண்டுமே” என்றுஅருளியபெரியாழ்வாரின்திருமகளன்றோஆண்டாள்நாச்சியார். அடுத்துஇவர்கள்நாயகன்என்றுகுறிப்பிடுகிறார்கள். உலகுக்கோர்தனிநாயகனாய்ஏழுலகும்தனிக்கோல்செல்லஆற்றல்மிக்கபெருமான்கண்ணன். மேலும்அவன்நாயகனாய்நின்றுசலித்துப்போய்இங்குஎளிமையாய்வந்துள்ளான். ஆனால்இங்குநாயகன்என்றவிளிநந்தகோபனைக்குறிப்பிடுகிறது. நந்தகோபன்எப்படிநாயகன்ஆவான்? நந்தகோபன்மிகவும்பெருமைஉடையவன். என்னபெருமைஎன்றால்பகவானையேபிள்ளையாகப்பெற்றவன். எல்லாஉலகத்தையும்ஆளும்எம்பெருமான்அவன்முன்கைகட்டிநிற்பாரன்றோ? மேலும்கண்ணனுக்கும்நாயகனன்றோஅவர்.       கிருஷ்ணனுக்கும்நாயகன்நந்தகோபன்தானே! மேலும்நந்தகோபனைமிகச்சிறந்தஆச்சாரியனாகஇச்சிறுமிகள்எண்ணுகிறார்கள். ஆச்சாரியசம்பந்தத்தோடுதான்பகவானைஅணுகவேண்டும். பெருமாளையேநமக்குஉபதேசிக்கும்ஆச்சாரியன்குருவாகிறார். அவர்பகவானைக்காட்டிலும்பெரியவர்தானே? […]

டிஷ்யூ பேப்பர்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

    ஆழ்ந்த பரிமாற்றம் நிகழவில்லை ஒரு தலைப் பட்சமாகக் கொட்டித் தீர்த்தாள்   சிறகுகளின் பெருஞ் சுமை வலியை அவளிடம் பகிர முடியவில்லை   நுண்ணுணர்வில்லாதவன் நீ காகிதங்கள் மட்டுமே பூக்கும் கருவேல மரம் நீ   தழும்புகளைக் காயங்களாக்கவா என்னைத் தேடி வந்தாய்?   இதழைத் தாண்டவில்லை உஷ்ணமான எதிர்வினை   இன்னும் அடங்கவில்லை சாணைக் கல்வெட்டு தீப்பொறிகள்   உறங்காத கண்களில் கனன்ற விரகம்   மெல்லிய தழுவல் எழுப்பிய பெருந்தீ   […]

மக்களாட்சி

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

    வாக்கு வெள்ளத்தில் முறிந்து வீழ்ந்தன சில நூற்றாண்டு மரங்கள் இடிந்துவிட்டன சில கொத்தளங்கள்   வெள்ளமும் வெயிலும் சுழற்சி மையத்தண்டாக மக்களாட்சி   ஆட்காட்டி விரல்களால் மாறியிருக்கிறது ஆட்சித் தோட்டத்தின் அதிகாரங்கள்   சில புதிய மரங்கள் சேர்க்கப்படலாம் சில பழைய மரங்கள் கழிக்கப்படலாம் அதற்குமுன்   ஆணிவேரைத் தோண்டிய பெருச்சாளிகளை விரட்டுங்கள் இல்லையேல் அசாதாரண வெற்றிக்கும் அற்ப ஆயுளே   இந்தியாவின் இமயம் மக்களாட்சி இமயம் இருக்கும்வரை இந்தியா பேசப்படும்   அமீதாம்மாள்

திண்ணையின் இலக்கியத் தடம் – 36

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

ஜுலை 7 2005 இதழ்: விடிகின்ற பொழுதாய் கவிதை- திலகபாமா என் மனைவி எனை மட்டுமே விரும்புகின்றாள் அவள் ஆடுதன் செட்டுக்கு ஜோக்கர் கிடைக்காதவரை அவள் பத்தினியாயிருப்பாள் <a href=”http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60507071&edition_id=20050707&format=htmi”>இணைப்பு</a> ஜூலை 15, 2005 இதழ்: புதிய அடிமைச் சங்கிலிகள் – சூழலியல் ஏகாதிபத்தியம்- 01- ஏ.எம்.றியாஸ் அஹமது- காலனியப்பட்ட நாடுகள் தம் பாரம்பரிய சுழற்சி முறைப் பயிர்ச் செய்கைகளிலிருந்து தடுக்கப் பட்டு, காலனித்துவ நாடுகளுக்குப் பொருளாதார வளஞ்சேர்க்கும் பணப் பயிர்ச் செய்கைகளை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள […]

இன்னொரு யுத்தம் (ஓர் உரைச்சித்திரம்)

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

எஸ்.எம்.ஏ.ராம் (பழைய இதிகாசங்களைப் புதிய வெளிச்சத்தில் மீள்வாசிப்பு செய்தல்) (விராட ராஜனின் அரண்மனை. அக்ஞாத வாசம் முடித்துப் பாண்டவர்கள் யுத்த நிமித்தம் மந்திராலோசனைக்காகக் கூடியிருக்கிறார்கள்.) யுதிஷ்டிரன்: கிருஷ்ணா, துரியோதனிடம் தூது போன அந்தணர் தோல்வியோடு திரும்பி வந்து விட்டார். இனி ஆவதென்ன? யுத்தம் தானா? தருமன் தன் பங்குக்காக சுற்றத்தையே அழித்துக் குவித்தான் என்ற அவப்பெயர் எனக்கு ஏற்பட வேண்டுமா? வேண்டாம். துரியோதனனைச் சந்திக்கிற மனோபலமும் புத்திபலமும் அற்ற ஓர் ஏழைப் பிராமணன் தூது போனதாலேயே இந்த […]