சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி வளையல் அணிந்த சனிக் கோளில் தனித்துச் சுற்றி வரும் ஆறுகர வேலி அலைமுகில் வடிவத்தைக் கண்டது வட துருவத்தில் ! அதற்குள் சுருண்டெழும் ஒரு சூறாவளி காணும் இப்போது ! வாயு முகில் கோலமா ? வடிவக் கணித ஓவியமா ? சீரான ஆறு கோணத் தோரணமா ? அங்கே எப்படித் தோன்றியது ? பூமியின் விட்டம் போல் […]
இந்தத் தொடர் தொடங்கும்போது விஸ்வரூபம் விமர்சனங்களை முன்வைத்து தமிழில் எழுதப் படும் சினிமா விமர்சனங்களின் ஒரு தொகுப்புப் பார்வையாய் முன்வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். யமுனா ராஜேந்திரனின் விமர்சனம் அந்த விதத்தில் ஒரு சரியான உதாரணம் என்று எண்ணுகிறேன். யமுனா ராஜேந்திரனின் “அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோஷம்” (உயிர்மை) யமுனா ராஜேந்திரன் நிறையப் படிக்கிறார் நிறைய படங்களைப் பார்க்கிறார். நிறைய எழுதுகிறார் அவர் எழுத்துக்கும் அவர் தொட்டிருக்கும் விஷயங்களுக்கும் விமர்சனத்திற்கும் ஏதும் பொருத்தம் இருக்கிறதா என்பது […]
– சிறகு இரவிச்சந்திரன் நந்தன வருட தொடக்கம், போரூர் பகுதி வாழ் மக்களுக்கு, ஒரு ஆன்மீக ஆரம்பமாக தொடங்கியிருக்கிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைதூதன் சீரடி சாயிபாபாவின் ஆலயம் ஒன்று மதனந்தபுரம் பகுதியில் ஏப்ரல் 14ம் நாள் தொடங்கப்பட்டது. இத்தனை வருடங்களில் இல்லாத ஒரு முயற்சி, நந்தன வருட ஆரம்பத்தில் நடந்தேறியது பாபாவின் கருணையினால் அல்லாமல் வேறென்ன. ஒரு கோயில் உருவாக பல ஆண்டுகள் முயல வேண்டும் என்பது கற்றவர்கள் ஒப்புக் கொள்ளும் உண்மை. இந்த இடத்திற்கான ஒப்புதல் […]
மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் காலனி […]
கொஞ்சங்கூட நினைத்தே பார்த்திராத அதிர்ச்சியால் தாக்கப்பட்டு, கிட்டத்தட்ட உணர்விழந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த ராதிகாவுக்குத் தான் எப்படித்தான் சுருண்டு கீழே விழாமல் சமாளித்துத் தெருவில் நடந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாளோ என்று வியப்பாக இருந்தது. அவள் வந்து சேர்ந்த நேரத்தில் தனலட்சுமி வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டுக் கோவிலுக்குப் போயிருந்தாள். அவ்விட்டுச் சிறுமி அவளுக்காக காத்திருந்து சாவியை அவளிடம் கொடுத்துவிட்டுப் போனதும் கதவு திறந்துகொண்டு உள்ளே போன அவள் தன்னறைக்குள் நுழைந்ததும், கட்டிலில் கைப்பையையும் புத்தகங்களையும் […]
”ஏம்மா.. வீட்டில யாரும்மா. எங்கம்மா உன் புருசன்? பணம் வாங்கறப்ப தேடி வந்து மணிக்கணக்கா குந்திக்கிட்டிருந்து வாங்கத் தெரியுது. வட்டி கூட நேரத்துக்கு ஒழுங்கா வந்து கட்ட முடியல.. ஏம்மா எல்லாரும் சோத்துக்கு உப்பு போட்டுத்தானே திங்கறீங்க. எத்தனை வாட்டி நடக்குறது? எங்களுக்கெல்லாம் வேற பொழப்பே கிடையாதா?” “ஐயா, அவுரு கடைவீதிக்கு போயிருக்காருங்க. வந்தவுடனே வரச்சொல்றேங்க. சத்தம் போடாதீங்க ஐயா, அக்கம் பக்கத்துல மானம் போவுது.” “ஓ.. மானமா அப்படி ஒன்னு இருக்குதா […]
‘முடிவா நீ என்ன சொல்ல வர்ற….’ சுந்தர், ஹரிப்பிரியாவைக் கண்களால் நேருக்கு நேர் பார்த்துக் கேட்டான், அவன் பேச்சில், முகபாவத்தில், கண்களில் எரிச்சல் இழையோடியதை அவன் சொன்ன விதம் உணர்த்தியது. இருவரும் மூன்றடி இடைவெளியில் அந்தக் கடற்கரையில் அமர்ந்திருந்தார்கள். அவள் கடலைப் பார்த்து அமர்ந்திருந்த விதமும்… கன்னங்களில் வழிந்தோடிய சுருள் முடியை எடுத்து பின்புறம் தள்ளிய லாவகமும்… கேசத்திலிருந்து வீசும் மல்லிகைப் பூவின் வாசமும்… காற்றில் இடைச்சேலை விலக பளிச்சென்று தெரிந்த இடைப்பிரதேசமும்… அவன் கை பரபரக்கத்தான் […]
சமீப நாட்களில் நான் தேடிப் படிக்கும் நாவல்கள் எல்லாம் மனதிற்குள் விசுவலைஸ் ஆகி திரைப்படங்களாகவே எனக்குள் விரிந்து கொண்டிருக்கிறது. க.நா.சு.வின் “அவரவர் பாடு“ நாவல் படித்தபோதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று என்.ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” படித்து முடித்தபோதும் மனதிற்குள் படம்தான் ஓடியது. நாவலைப் படித்து முடித்துக் கண்களை மூடிக்கொண்டு ஒரு சுழற்சியில் மொத்த நாவலையும் படிப்படியாய், அடுத்தடுத்த காட்சிகளாய் நினைத்துப் பார்த்தபோது, முதலில் மனதிற்குள் படர்ந்தது அட்டைப் படத்துடன் […]
புரையோடிய புண்ணையும் புன்னகையால் கழுவி களிம்பிட்டுக் கட்டுவார் ஆறேழு நாளில் ஆறிவிடு மென்று நம்பிக்கை விதைப்பார் நலம் கூட்டுவார் அந்த மருத்துவ மனையில் புண்ணாற்றும் பிரிவில் இது பதினேழாம் ஆண்டு அந்தத் தாதிக்கு ஒரு நாள் அவர் குடும்பம் பற்றிக் கேட்டேன் ‘பல்கலையில் மகனாம் உயர்நிலையில் மகளாம் அப்பா முகமே அறியாராம் அவர் எங்கேயோ யாரோடோ’ என்றார் ‘இரண்டு சிறகுகள் இயற்கையம்மா இணைந்து வாழுங்கள்’ என்றேன் அவர் […]
தில்லியில் ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் வன்முறை இந்தியாவை மட்டு மல்ல, உலகத்தையே உலுக்கியது எனலாம். அந்த ஃபிஸியோதெரபி மாணவி யின் அக புற வலியை எண்ணியெண்ணி அலைக்கழிந்தது மனம். அவளைக் காப்பாற்றவியலாத கையறுநிலையில் அவளுடைய தோழனின் மனம் எப்படி யெல்லாம் தவித்திருக்கும். இப்போது, ஐந்து வயதுச் சிறுமி தில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். இத்தகைய சமூகச் சீர்கேடுகளை எதிர்த்து பொதுமக்கள் அணிதிரண்டு போராட முன்வருவது நல்ல அறிகுறி. ஆனால், வட […]