மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1

This entry is part 1 of 38 in the series 20 நவம்பர் 2011

நாகரத்தினம் கிருஷ்ணா ——— வணக்கம் நண்பர்களே இரண்டுவருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நண்பரொருவர் புதுச்சேரியைச் சேர்ந்த திராவிடப்பேரவை பொதுசெயலாளர் திரு. நந்திவர்மன் என்ற நண்பரை அறிமுகப்படுத்தினார். இச்சந்திப்பின்போது எனது நீலக்கடல் நாவலை அவருக்கு அளித்தேன். அவர், தாம் ‘The New Indian Express’ க்கென எழுதிய கட்டுரைகளின் தொகுப்பொன்றை ( Tamil Civilization ) எனக்கு அளித்தார். பிரான்சுக்குத் திருப்பியதும் அக்கட்டுரைகளை படித்துக்கொண்டிருந்தபொழுது அவற்றுள் The Grandeur of Senji port என்ற கட்டுரை எனது கவனத்தை பெற்றது. […]

அப்பா

This entry is part 5 of 38 in the series 20 நவம்பர் 2011

திரும்பிப் பார்க்கிறேன். என் ஐந்து வயது முதல் இதோ இதைச் சொல்லும் இந்த நாள்வரை. எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கிறேன். ஐந்து வயது. கலரான பாட்டிலில் எது இருந்தாலும் அதைக் குடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அடுக்களையின் மூலையில் இருந்த அந்த பச்சை நிற பாட்டிலை எடுத்து இரண்டு முடக்கு குடித்துவிட்டேன். ‘என்னாங்க’ என்று அலறிக்கொண்டு அம்மா ஓடிவந்தார். மேல் சட்டை இல்லாமல் அப்பாவும் ஓடி வந்தார். நிலைமையைப் புரிந்து கொண்டேன். நான் குடித்தது மண்ணெண்ணெய். அப்பா ஒரு துண்டைப் […]

தலைமை தகிக்கும்…

This entry is part 8 of 38 in the series 20 நவம்பர் 2011

_____________ சூரியனை சூழ்ந்த கோளங்கள் சுற்றி திரிகின்றன தனி சுதந்திரத்தோடு தன்னை வட்டமடிக்கிற நிலா பெண்களோடு.. தலைமை பதவியின் தனிமையால் கலகலப்பாய் பழக ஆளில்லாமல் தனித்த தலைமை தகிக்க சூரியனின் பெருமூச்சும் உஷ்ணமாய் பூமியை நேருக்கு நேர் நிறுத்தி கேள்வி கேட்டால், நிலா வருந்தி, கறுத்து விடுகிறாள் கிரகண நோய் தாக்கி. ! பூமியை பின்னுக்கு தள்ளி நிலாவை நேரே சந்தித்து காதலை சொல்ல நினைக்கையில் – சூரியனுக்கே கிரகணம் பிடித்து விடுகிறது.. மற்ற பால் வெளியில் […]

குறுங்கவிதைகள்

This entry is part 10 of 38 in the series 20 நவம்பர் 2011

பேருந்தின் இரைச்சல் ஓசையில் பேச்சு வராத தமையனைப் பற்றி ஓயாமல் பேசிக்கொண்டு வந்தாள் ஒருத்தி. எனக்கென்னவோ அவளே அவனுக்கும் சேர்த்து பேசிக்கொண்டிருப்பது போல் இருந்தது. 0 ஒன்றே போல்தான் உன் குழந்தை கைகளின் ஸ்பரிசமும். O கண்கள் சொருகும் அதிகாலைப் பொழுதில் உதட்டுச் சாயத்தை ஒத்தி ஒத்தி எடுத்து உதடுகளால் சப்பிக் கொண்டிருந்த ஒருத்தியைக் காண ஒரு மாதிரி சந்தோசமாய்தான் இருந்தது. O பின்னிருக்கையில் அமர்ந்தபடி பயணம் போக நேர்ந்த வண்டியோட்டியின் ஆச்சர்யம் வழியெங்கும் காணும் இத்தனையும் […]

அந்த நொடி

This entry is part 12 of 38 in the series 20 நவம்பர் 2011

அந்த நொடி எப்போதும் நிரப்பபடாமலே உள்ளது அந்த நொடி எதை கொண்டு நிரப்ப அதை நிரம்பிவழியும் எனது நினைவுகளைகொண்டு அதன் முனையை கூட நிரப்ப முடிவதில்லை கதைகளையும் கவிதைகளையும் ,வார்தைஜாலங்கலையும் கொண்டு நிர்ப்பிவிடலமா? மழையையும் வண்ணத்தையும் கொண்டாவது! பதற்றமான பல பொழுதுகளில் உன்னை நிரப்பும் அந்த நொடியை நினைத்தே மலைத்து போகிறேன் தேடிய பொழுதுகள் உன்னை நிரப்ப போவதில்லை தேடாத பொழுதுகலால் உன்னை நிரப்பும் சாத்தியமும் இல்லை களவாடவும் முடியாது போனதால் எப்போதும் என்னை பின்தொடர்கின்றது அந்த […]

முள் எடுக்கும் முள்

This entry is part 13 of 38 in the series 20 நவம்பர் 2011

கோதையாறு நீர்த் தேக்கத்துக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கிராமம். இது குமரி மாவட்டத்தில் கேரள நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ளது. அங்கு, சின்னச்சாமி ஒரு பெரிய புள்ளி! நிறைய ரப்பர் எஸ்டேட்! வயது அறுபதுக்கு மேல் ஆனாலும் உடம்பில் ஒரு மினுமினுப்பு! சம்சாரம் தவறிப்போய் நாலைந்து வருஷமிருக்கும்! ஒரே மகன். டாக்டருக்குப் படித்துவிட்டு உள்ளுரிலேயே வேலை பார்க்கிறான். சின்னச்சாமியின் ரப்பர் எஸ்டேட்டுக்குப் பக்கத்தில் ஒரு காணி நிலம். அதில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள்! அத்துடன் சின்ன […]

ரவுடிச் சாமியும் ரங்கமன்னாரும்

This entry is part 2 of 38 in the series 20 நவம்பர் 2011

சீக்கிரம் இருட்டிவிடுகிறது இப்போதெல்லாம். இரவு போர்த்திக்கொள்ளும் அளவுக்குக் குளிர்கிறது. வெயில் சாய்ந்தபின் நிறைய விதமான பூச்சிகள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் மொய்த்தெடுக்கின்றன. பல வண்ணங்களிலும் அளவுகளிலும் பறந்தோ ஊர்ந்தோ வந்துவிடுகின்றன. சில புழு போல தவழ்ந்து போகிறதே என்று நினைக்கும்போதே அவை சட்டெனத் தாவிப் பறக்கும். இவற்றை விரட்டுவதும் கஷ்டம். கால் கைகளில் உட்கார்ந்தால் கூடப் பரவாயில்லை. முதுகில்போய் உட்கார்ந்து கடிக்கும். அடிக்கும்போது விட்டலாச்சார்யா படம்போல மாயமாய் எங்கோ போய்விடும். எப்போதாவது தவறி சரியாக அடித்துவிட்டால், சாவதற்குமுன் சுள்ளென்று […]

அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..

This entry is part 4 of 38 in the series 20 நவம்பர் 2011

நல்லா குண்டாயிட்டே நீ என தோழிகள் கலாய்க்கிறாங்களா.. எந்தக் கடையில அரிசி வாங்குறேன்னு யாரோ ரெண்டு பேர் எதுத்தாப்புல பேசிக்கிட்டே போறாங்களா.. விளம்பரத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் சிக் சிக்னு சிக்கன் மாதிரி சுத்துறாங்களா… சே இந்த ஹிந்தி ஹீரோயின் எல்லாம் எப்பிடி இப்படி ஸ்லிம்மா இருக்காங்கன்னு வயித்தெரிச்சலா இருக்கா.. கொஞ்சம் தண்ணீரை குடிச்சு வயித்தெரிச்சலை அணைச்சிட்டு நம்ம தென்னக ரயில்வேயில ஒரு டிக்கெட் ரெண்டு ராத்திரிக்கு புக் பண்ணுங்க போதும்.. என்ன விஷேஷம்னு கேக்குறீங்களா .. […]

பா. சத்தியமோகன் கவிதைகள்

This entry is part 7 of 38 in the series 20 நவம்பர் 2011

பா. சத்தியமோகன் கவிதைகள் அதாகப்பட்டது..! என்னிடம் ஒரு பேனா உள்ளது உள் சட்டைப் பையில் வைக்கிறேன் வெளியில் வைத்தால் வரவு செலவு கணக்கு எழுதவே கேட்கிறார்கள் அதுவோ காவியம் எழுதும் காப்பியம் பழகும் அன்பு பேசும் என்னிடம் அழகிய மாலைப்பொழுது உள்ளது அங்கு எப்போதும் குயில்களின் கீச்சு கேட்கும் சங்கீதக் குருவிகள் குளிர் பேசும் அதன் முகவரியை பொழுதுபோக்காகவே கேட்கிறார்கள் உள் சட்டையில் துடிக்கும் இதயம் போல தினம் தினம் பூத்து ஒளிர சந்தனச் சூரியன் உண்டு […]

நானும் அசோகமித்திரனும்

This entry is part 9 of 38 in the series 20 நவம்பர் 2011

. கி.பி. 2000த்துக்கு முன்னால் என் இலக்கிய வாசிப்பு தினத்தந்தி, சிகப்பு நாடா, இந்துநேசன் என்கிற செய்தித் தாள்களிலும், பி.டி. சாமி, சாண்டில்யன் என்கிற நாவல் வாசிப்பிலும் தான் இருந்தது.. இவைகளை இலக்கிய வாசிப்பு என்று யாரேனும் ஒப்புக் கொண்டால்.. அடிப்படையில் நான் ஒரு வணிக இதழ் வாசகன். எனக்குத் தெரிந்ததெல்லாம் குமுதம், ஆனந்த விகடன், பின்னாளில் சாவி, குங்குமம் எனலாம். சுஜாதாவை நான் அவ்வண்ணமே அடையாளம் கண்டு கொண்டேன். ஆரம்பத்தில் அவரது எழுத்து கூட எனக்கு […]