This entry is part 15 of 17 in the series 27 செப்டம்பர் 2020
ஸிந்துஜா கோபால் வாசலுக்கு வந்து இருபுறமும் திரும்பிப் பார்த்தான். உள்ளிருந்து வந்து கொண்டிருந்த வாலாம்பா “என்ன தேடறேள்?” என்று கேட்டாள். “அப்பாவை எங்க காணம்?” “அவர் அவசரமாக புஜ்ஜிக்கு கலர்பென்சில் வாங்க மளிகை கடைக்கு போயிருக்கார்” என்றாள். கோபால் மனைவியை உற்றுப் பார்த்தான். அவள் செய்வது சரியில்லை என்பது போல். “நான் என்ன பண்ணறது? ஒரு போன் போட்டுச் சொன்னா சுப்பிரமணியா ஸ்டார்ஸ்லேந்து பறந்துண்டு வந்து கொடுத்துட்டுப் போவான்னு அடிச்சிண்டேன். கேட்டாத்தானே? லேட்டாகும்னு விறு விறுன்னு ஓடிப் போயிருக்கார்” என்றாள். “என் மாமனாரை நீ […]
முகில்கள் மறைத்த பாதி நிலா உன் கவச முகம் இடைவெளி தேவையாம் பறவையின் சிறகுகளாய் நாம் இனி அவர்கள் பார்ப்பது உடல் உஷ்ணம் காதல் உஷ்ணம் பார்த்திருந்தால் தெறித்திருக்கும் வெப்பமானி தூறலும் வானவில்லும் தனித்தனி அல்லவே ஒன்றும் ஒன்றும் இரண்டு சிலருக்கு பதினொன்று சிலருக்கு பெருக்கல் நமக்கு நாவலாகக் கிடைத்தாய் அட்டைப் படத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் எப்போது பிரிப்பது எப்போது படிப்பது வண்ணங்களும் தூரிகைகளும் தயார் இனிமேல்தான் உன்னைக் கண்டெடுக்க வேண்டும் இரவுக்காக காத்திருக்கிறேன் ஓர் ஆந்தையாக […]
பரகாலநாயகி ஒருநாள் தோழியுடன் பூக்கொய்யப் புறப்பட்டாள். இதையறிந்த பெருமான் வேட்டை யாடுபவர் போல அங்கு வந்தார். மைவண்ண நறுங்குஞ்சிக் குழல் பின்தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கியாட எய்வண்ண வெஞ்சிலையே துணையாக [திருநெடுந்தாண்டகம் 21] 2072 பரகாலநாயகி முன் நின்றார் கை வண்ணம் தாமரை; வாய் கமலம், கண்ணிணையும் அரவிந்தம்; அடியும் அஃதே! அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டு மயங்குகிறாள். பரகால நாயகி. தோழி, குறிப்பறிந்து […]
எஸ் பி பி மூன்றெழுத்தா? முத்தமிழா? ஆயிரம் நிலாக்களை அழைத்து வந்தாய் அத்தனைக்கும் எப்படி அமாவாசை? பொத்தி வச்ச மல்லிகை மொட்டு கருகியது நியாயமோ? என் மின்னல் எங்கே? தேடுகிறது இடி என் வானவில் எங்கே? தேடுகிறது தூவானம் ஒரு தாலாட்டு நின்றது உலகெங்கும் அழுகின்றன குழந்தைகள் குயில்களுக்கு குரல் தந்துவிட்டு துயில் கொண்டது நியாயமோ? ஒரு கடல் எப்படி கண்ணாடிக்குள்? உன் நாவில் மட்டும் எப்படி நவரசங்களின் நடனம்? நிசப்தமாய் நந்தவனம் காதல் பறவைகள் ஊமையாகிவிட்டனவா? […]
மதுராந்தகன் 1. கரவொலி பெறுவதற்காகவே கத்திப் பேசினார் பேச்சாளர். எனக்குள் இருக்கும் சொற்களை வார்த்தையாகினால் உறவுகள் கூட மதிக்காது தலைவலி என்று மருத்துவமனை சென்று நீண்ட பரிசோதனைக்குப் பின் இது மூளை வளர்ச்சி உடனடியாக ஆபரேஷன் பண்ணுங்கள் இல்லையென்றால் மிகவும் துன்பப்படுவாய் என்றார் மருத்துவர். நீ எல்லாம் மனுஷனா என்றாள் மனைவி. “ ஏண்டி உனக்கு இந்தச் சந்தேகம் “ பக்கத்து வீட்டுக்காரன் செய்யற வேலையிலெ பாதியாவது நீ செய்யறையா என்றாள் மனைவி . 2. ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி […]
இந்துமதத்தில், பலராமன் கிருஷ்ணரின் அண்ணன்ஆவார்.இவர் பலதேவன் , பலபத்திரன், கலாயுதன் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமன் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதிசேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவருக்கு சங்கர்ஷனர் என்ற பெயரும் உண்டு. இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவி என்ற அவரின் முதல் மனைவிக்கும் பிறந்தவர். இவரது மனைவியின் பெயர் ரேவதி, இவரின் தங்கையின் பெயர் சுபத்திரை ஆவாள். ஆழ்வார்கள் தம் அருளிச்செயல்களில் ஒரு சில இடங்களில் பலராம அவதாரத்தைப் போற்றுகின்றனர். பெரியாழ்வார் பலராமனை “வெள்ளிப் பெருமலைக் குட்டன்” என்று குறிப்பிடுவார். திருமங்கையாழ்வார் திருநறையூர் திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது பலராமனின் நிறத்தைப் போற்றுகிறார். ”திருநறையூர் நிறைய சோலைகளை உடையதாகும். அச்சோலைகளில் பல சுளைகளை […]
குணா எனக்குத் தெரியவில்லை. ஆற்றுப் படுகையென்பது ஆனந்தம் மட்டுமில்லை. சில்லென்ற காற்றும், சிலு சிலு ஓடையும். சிறு வயதில் நடை பழக நடை வண்டி கொடுத்தார்கள். எனக்கு ஞாபகமில்லை. சொல்லிக் கேட்டதுண்டு, அடுத்தவர் பழகுவதை பார்த்ததுண்டு. அந்த ஆற்றில் நீந்திய ஞாபகம் நன்றாக இருக்கிறது. பால பருவம். நானாக பழகிய ஆறு. வேண்டிய மட்டும் நீந்தி குலாவி, நீர் குடித்து, கண்ணில் வெளியேற, தெளிவு பெற்று, நாங்கள் நண்பர்கள் என்று சொல்லித் திரிந்த நாட்கள். ஆற்றங்கரை ஊரை […]
சுரேஷ்மணியன் கடைகள் நிறைந்த சந்தை களைந்து வீதியொன்றின் முடுக்கில் ஊளையிடும் நாயின் ஓசையின் துணையோடு கழியும் இரவின் நிசப்தம் போல மாணவரின்றி வெறுமையாய் காட்சிதரும் வகுப்பறைகள் எழுத ஆளின்றி வெறுமையாய்,கருமையாய் காத்திருக்கும் கரும்பலகைகள் தன்மீது கிறுக்கும் சினேகிதனின்றி ஏங்கித்தவிக்கும்கொள்ளையழகு தரும் வெள்ளைச்சுவர்கள் தன் கரம் பற்ற துணையின்றி புலம்பித் தலும்பும் ஜன்னல் கம்பிகள் இராவணத் தம்பிகளின் கால்துகள் கதுவக் காத்திருக்கும் அகலிகை பெஞ்சுகள் சுற்றாமல் தலைகுனிந்து தரைபார்த்திருக்கும் காற்றாடிகள் இவ்வாறே காலம் கழிக்கிறது கொரோனாவில் வகுப்பறைகள். _ M
கே.எஸ்.சுதாகர் “நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் தவராசா. புளியம்பழங்கள் ஒன்றும் உதிர்ந்து விழவில்லை. மாறாக வெறித்த பார்வையுடன் தவராசாவை உற்று நோக்கினான் நிர்மலன். “நிர்மலன்… குளிச்சுப்போட்டு சாப்பிட வாரும். வெளிக்கிட்ட நேரத்திலையிருந்து நல்ல சாப்பாடும் சாப்பிட்டிருக்கமாட்டீர்” என்றார் தவராசாவின் மனைவி ஈஸ்வரி. நிர்மலன் இலங்கையிலிருந்து ஒன்பது மணி நேரம் வான் பறப்பை மேற்கொண்டு, தனது திருமணத்திற்காக […]