பாவண்ணன் கவிதைகள்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

    1.தீராத புத்தகம்   எழுத்தையே உச்சரிக்கத் தெரியாதவன் தன் கனவில் ஒரு புத்தகத்தைப் படிப்பதாகச் சொல்கிறான் நினைவிலிருந்து அதன் வரிகளை மீட்டி உருக்கமான குரலில் கதைசொல்கிறான்   அந்தப் புத்தகத்தின் பெயர் யாருமே கேட்டிராததாக இருக்கிறது அதன் கதை யாருக்குமே அறிமுகமற்றதாகவும் இருக்கிறது ஆனாலும் அவனைப் பொருட்படுத்துகிறவர்கள் யாருமற்றதாக இருக்கிறது அந்த ஊர்   அவர்களது புறக்கணிப்பைப்பற்றி அவனுக்குத் துளியும் வருத்தமில்லை அவர்களுக்குச் சொல்ல நினைத்ததை குருவிகளிடமும் அணில்களிடமும் கூச்சமில்லாமல் சொல்லத் தொடங்குகிறான் சில […]

ஆசியாவின் முதற் சாதனையாகச் செந்நிறக் கோளைச் சுற்றிவரும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

    ​[India’s First Successful Mars Orbiter Mission] September 24, 2014​ 1.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BEFMHOS2Em0 2.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6H48xhbuGW0 3.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BEFMHOS2Em0 4.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pZqPNNOvHAA 5.  http://www.bbc.co.uk/news/world-24826253 [Video of Launching India’s Mars Mission] 6.  http://www.isro.org/mars/updates.aspx  [Mars Orbiter Status Update]  7.  http://isro.gov.in/pslv-c25/c25-status.aspx  [Pre-Launch Updates] [NASA’s Future Manned Missions to Mars] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   செந்நிறக் கோள் சுற்றும் ஆசியப் பந்தயத்தில் […]

வாழ்க்கை ஒரு வானவில் – 22

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  முதன்முறை அவனும் ராமரத்தினமும் கடற்கரையில் சந்தித்ததற்குப் பிறகு, அவன் மீண்டும் ஒரு முறை தற்செயலாய் ராமரத்தினத்தைச் சந்திக்க வாய்த்த போது, தன் அப்பா முறுக்கிக்கொண்டிருப்பது பற்றி அவனுக்குச் சிரித்துக்கொண்டே தெரிவித்தான். அவன் அது பற்றிக் கவலையே கொள்ள வேண்டியதில்லை என்றும், எப்படியாவது தன் விருப்பத்துக்கு அவரைச் செவிசாய்க்க வைக்க வேண்டியது தன் பொறுப்பு என்றும் அவன் ராமரத்தினத்துக்கு வாக்களித்தான். அவர் மனம் மாறுவதற்குத் தான் காத்துக்கொண்டிருப்பது தவிர வேறு வழியே இல்லை என்றும் அவன் தெரிவித்தான். […]

இரண்டாவது திருமணம்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

ஜானவாச ஊர்வலம் கிளம்பிவிட்டது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சின்ன கார். சுற்றிலும் கேஸ் லைட்டுகள். அடுத்துப் பெண்களும் அடுத்து ஆண்களும் தெருவை அடைத்துக் கொண்டு சென்றது ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்களுக்குப் பெருந்தொல்லையாக இருந்தது. மாப்பிள்ளை சந்திரன் முகமலர்ச்சியுடன் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் கார் நிறையக் குழந்தைகள். அக்குழந்தைகளின் நடுவில் சந்திரனின் ஐந்து வயது மகன் குமாரும் உட்கார்ந்திருந்தான். ”ஏன் சார், இது இரண்டாவது கல்யாணம் தானே?” “ஆமாம், அதுக்கு என்ன இப்போ?” ”இல்ல, ஜான்வாசம்லாம் எதுக்குன்னு கேட்டேன்.” என்று […]

சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  முனைவர்சி.சேதுராமன், தமிழய்வுத் து​றைத்த​லைவர்,  மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Mail: Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்கள் உலக இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்க செவ்வியல் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கும் காலப்பெட்டகங்களாக மிளிர்கின்றன. பழந்தமிழகத்தில் மகளிர் கல்வியறிவில் சிறந்து விளங்கினர். கவிபாடும் வல்லமை பெற்றுத் திகழ்ந்தனர். தங்களின் புலமையாற்றலால் பல புதுமைகளைப் படைத்த பூவையராகப் பல பெண்கள் திகழ்ந்திருக்கின்றனர். இவ்வாறு திகழ்ந்த மகளிரின் வாழ்க்கையை சங்க இலக்கியங்கள் காலக் கண்ணாடி போன்று […]

தந்தையானவள் – அத்தியாயம் -2

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  “ நீ தடிச்சுப் போயிட்ட ராஜி” என்றாள் அம்மா. குரலில் ஒரு அதட்டல்.அம்மாவால் மட்டும்தான் அவளிடம் ஓங்கி பேச முடியும்.மற்ற இரண்டு சகோதரிகளுக்கும் ராஜி ஒரு கண்கண்ட தெய்வம். “ பதினஞ்சு வருஷமா ரெயின்போ டைலர் கிட்டதான் ஜாக்கட் தச்சுக்கிறேன். ஒரே அளவுதான் கொடுத்துட்டு வர்ரேன். தடிச்சா மாதிரி தெரியலியே” என சோபாவில் வாங்கிப் போட்டிருந்த தீபாவளி சேலைகளைப் பார்த்தபடி சொன்னாள். அவளுடைய நக்கல் மொழியில் அம்மா சற்று கோபமானாள். “ தடிக்கறதுன்னா உடம்பு மட்டும்தானா? […]

ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது: இன்குலாப் நேர்காணல்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

சமீபத்தில் கனடா இணைய தளத்துக்காரர் , கிரிகெரி டியன், என்பவr அவரின் இணைய தளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுவரைச் சந்தித்திராத 100 பேருடன் தேனீர் அருந்தியபடிச் சந்திக்க விரும்பினார் ” இந்த உலகம் தனிமைப்பட்டு விட்டது. நாமெல்லாம் சமூக மனிதர்கள், சமூக விலங்குகள். ஆனால் ஏன் இப்படித் தனிமைப் பட்டுப் போனோம். பேச, பரிமாறிக் கொள்ள, கதைகள் சொல்ல, சிரிக்க, சந்தோசிக்க, கற்றுக் கொள்ள சந்திப்பு அவசியம் “ என்றார். aaஅவருக்கு 100 கோப்பைத் தேனீருடன், […]

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 23 முடிவுக் காட்சி

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்      

ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-7

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

    இடம்: ரங்கையர் வீடு.   நேரம்: மாலை ஆறரை மணி.   பாத்திரங்கள்: ஜமுனா, ஆனந்த லட்சுமி, மோகன்.   சூழ்நிலை: (ஜமுனா பரப்பி வைத்திருக்கும் ஒரு வாழை இலையில் ஒரு தேங்காய்த் துருவியால் தேங்காய் மூடி ஒன்றைத் துருவி கொண்டிருக்கிறாள். லேஸ் லேஸாக தேங்காய்த் துருவல் உதிர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சின்னக் கூடத்தின் ஓரமாக காலை மடக்கியவாறு உட்கார்ந்து ஆனந்த லட்சுமி வெங்கடேச புராணம் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாள்)     […]