எத்தனை காலடிகள்? “டீச்சர், டீச்சர்” என்று இறைக்க இறைக்க ஒடிவந்தாள் தர்ஷணிக் குட்டி! மூன்றாம் வகுப்பில் முன்னுக்கு உட்காரும் சுட்டிப் பெண். நிற்காத பேச்சு. கேசம் தடவிப் பாசத்துடன் பேசும் நான், “டீச்சர்.” அவள் வீட்டில் கிடைக்காது. கிடைப்பது அலட்சியமும் அடியும். குடிகாரத் தகப்பன். அறியாமைத் தாய். எப்படி முளைத்தது இந்த செந்தாமரை? “என்ன தர்ஷணிக் குட்டி?” “இன்னைக்கு ஒண்ணு கண்டு பிடிச்சேன்!” “என்ன?” […]
இங்குதான் இருந்தது கடல். கடல் தண்ணீரில் கரைந்த நம் நிர்வாண பிம்பங்களை உண்ட கடல் மீன்களுக்குப் பித்தேறின. அலைகள் கரையைத் தொட்டு விலகும்போது நமது உடல்களின் உவர்ப்பில் கொஞ்சம் உப்பு கூடிவிடுகிறது. அதே கடலருகில் சூரியனின் ஆயிரம் ஆயிரம் கரங்கள் நம் வேட்கையின் சுவர்களில் நிறங்களைப் பூசியதைக் கண்டோம். கடற்கரையின் தீராத மணல் வெளி நமது தீராத விருப்பங்களை எவ்வளவு குடித்த பிறகும் சுவடற்று இருந்தது. கடலின் அவ்வளவு […]
இடம் ஆனந்தராவின் வீடு. காலம்: முற்பகல் பதினோரு மணி. பாத்திரங்கள்: ஆனந்தராவின் மனைவி கங்காபாய் (வயது 45 ராஜாமணி, சிறுமி ஒருத்தி. (சூழ்நிலை: சீடைக்காகப் பிசைந்து வைத்திருந்த மாவை, சிறு சிறு அளவில் உருண்டையாக உருட்டிக் கொண்டிருக்கிறாள். கங்காபாய் ராஜாமணி வருகிற ஷூ ஓசை கேட்டு நிமிர்ந்து பார்க்கிறாள்) ராஜாமணி: என்னம்மா சீடைக்கு மாவா? அடிசக்கை, எப்போ சுடப் போறே? கங்காபாய்: என்னடாது, சீடை சாப்பிட்டு […]
சிலர் தை மாதம் தமிழ்ப் புத்தாண்டு இல்லை என்றும் சித்திரைதான் புத்தாண்டு என்றும் கூறுவதுண்டு. இவர்கள் இனத்திற்கும் மதத்திற்கும் வேற்றுமை தெரியாதவர்கள். சித்திரை இந்து மதத்தினரின் புத்தாண்டு. ஆனால் எல்லா தமிழர்களும் இந்துக்கள் இல்லை. தமிழர்களில் இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்த்துவர், புத்த மதத்தினர், மதங்களை நம்பாத நாத்திகர்கள் கூட உள்ளனர். மதச் சடங்குகள் கொண்ட சித்திரைப் புத்தாண்டை எப்படி இந்துக்கள் அல்லாத […]
பிரான்சில் என்ன நடக்கிறது? அ. வொல்த்தேருக்கு நேர்ந்த கதி: நமக்கு நகைச்சுவை என்ற பெயரில் குறளை விருப்பம்போல திருத்திச் சொல்வதைத் திரைப்படங்களில் கேட்டுப் பழகிவிட்டது. அதையே சகித்துக்கொள்ளலாம் என்பதுபோல வேடிக்கையொன்று பிரான்சு நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. Ferney- Voltaire என்பது பிரான்சு நாட்டில் உள்ள ஒரு கொம்யூன், அதாவது பேரூராட்சி. பிரான்சு -சுவிஸ் எல்லையிலிருக்கிற ஊர். சுவிஸ் நாட்டிற்கு குறிப்பாக ஜெனீவாவிற்கு வெகு அருகிலிருந்ததாலும் அப்போதைய அரசியல் சூழலாலும் இவ்வூரை வசிப்பதற்கென வொல்த்தேர் […]
கோயமுத்தூரைச் சேதுரத்தினம் அடைந்து நாகவல்லியின் வீட்டுக் கதவைத் தட்டிய போது, பணிப்பெண் கதவைத் திறந்து அன்று சொன்னது போன்றே தன் எசமானியம்மாள் ஊர்மிளாவுடன் அதே மருத்துவமனைக்குச் சென்றிருப்பதைத் தெரிவித்தாள். அவன் ஒரு டாக்சி பிடித்து விழுந்தடித்துக்கொண்டு அங்கே சென்றான். அவனை உள்ளெ விட மறுத்தார்கள். நாகவல்லியே வெளி வராந்தாவில் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். கலங்கி யிருந்த அவள் விழிகளைப் பார்த்து அவனுக்குப் பதற்றமாக இருந்தது. ஏதோ சிக்கல் என்று புரிந்தது. அவனது உடம்பு தலையிலிருந்து கால் வரை அதிர்ந்தது. […]
நானும் பக்கத்துவீட்டு சாமா மாமாவும் கடைத்தெருவுக்குப்போய் ஒரு நர்சரியை த்தேடிக்கண்டுபிடித்தோம். நர்சரி என்றால் அந்த மரஞ்ச் செடி கொடி க்கன்றுகள் முளைக்கவைத்து தொட்டிகளில் விற்பார்களே அந்த கடையைத்தான் சொல்ல வருகிறேன்.இரண்டு பேர் வீட்டிலும் சிறிய தோட்டம் உண்டு.ஆனால் இந்த முருங்கை மரம் மட்டுந்தானில்லை. முருங்கை மரம் வீட்டில் இல்லாமல் இருந்தால்தான் தெரியும் அதன் தேவை என்ன என்பதும் புரிய வரும்.முருங்கைக்காயை வீட்டுத்தோட்டத்தில் பறிப்பதும் சாம்பாருக்கு அதனைத்தயார் செய்வதும் அத்தனை சௌகரியம். சாம்பாரில் முருங்கைக்காய் சாம்பார்தான் ராஜா. .அத்தனை […]
’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாடினார் மகாகவி பாரதியார். தெலுங்கு ஓர் அருமையான இனிமையான மொழி. எல்லா மொழிச் சிறுகதைகளுக்கும் உள்ள சிறப்புத் தன்மைகளைத் தெலுங்குச் சிறுகதைகளிலும் காண முடிகிறது. ’தெலுங்குச் சிறுகதை பிறந்து 75 ஆண்டுகள் ஆகின்றன” என்று டி. ராமலிங்கம் குறிப்பிடுகிறார். 1910—இல் ‘திருத்தம்’ எனும் பெயரில் முதல் சிறுகதை வெளியானது. அதை எழுதியவர் குரஜாடா அப்பாராவ் என்பவர் ஆவார். (மு. கு. ஜகன்னாதராஜா) அவரை இன்றைய தெலுங்குச் சிறுகதைகளுக்கு வித்திட்டவர் எனக்கூறலாம். பாலகும்மி […]
இலக்கியச் சோலை——150 கூத்தப்பாக்கம். நாள்: 14–10—2014, ஞாயிறு காலை 10 மணி, இடம் : ஆர்.கே.வி. தட்டச்சகம். இலக்கியங்களில்—150 தலைமை : திரு. வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : திரு. வேங்கடபதி, இணைச் செயலாளர், இலக்கியச்சோலை. உரைகள் : திரு. இரா. தியாகராஜன் ——திருக்குறள் திருமதி. வெற்றிசெல்வி ——பழமொழி நானூறு திரு. க. சீனிவாசன் ——-கண்ணதாசன் திரு. வெ. நீலகண்டன் ——-திவ்யபிரபந்தம் முனைவர் திரு. ந. பாஸ்கரன் ——–சங்க இலக்கியங்கள் நன்றியுரை : […]
நண்பர்களே ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்ற தமிழ் ஸ்டுடியோவின் 2014ஆம் ஆண்டுக்கான லெனின் விருது வழங்கும் விழாவின் காணொளியை இந்த இணைப்பில் கொடுத்துள்ளோம். அவசியம் பாருங்கள். வெளிநாடுகளில் வாழும் பல்வேறு நண்பர்கள், தமிழ் ஸ்டுடியோவின் நிகழ்வுகளை குறைந்தது இணையத்தில் ஏற்றுங்கள் என்று பல முறை சொல்லியும், ஒளிப்பதிவு செய்யும் வசதி இல்லாததால் செய்யமுடியவில்லை. ஆனால் இந்தமுறை லெனின் விருது வழங்கும் விழாவை ஒளிப்பதிவு செய்து, […]