This entry is part 9 of 9 in the series 2 ஆகஸ்ட் 2026

ச.சிவபிரகாஷ்

ஒரு

போட்டி

தேர்வுக்கு

மையமாக

கட்டளையானது

எனது

மகளுக்கு

நீ! படித்த

பள்ளியில்.

எப்படியோ

தேர்வறை

தேடி

அமர்ந்து

எழுத

தொடங்கியும்

விட்டாள்

மகள்.

நான்

இப்போது

கண்ணாலே

தேடிக்கொண்டிருக்கிறேன்

நீ!

படித்த

வகுப்பறையை…

அதுவாக,

அல்லது

இதுவாக,

இருக்குமோ

என்று.

உன்

வருகைக்காக

பள்ளியின்

வாசல்

எதிரே

காத்திருந்த

அந்த

நாட்கள்

நினைவு மீட்பாக

வந்த போதிலும்,

உனது

பிள்ளைகளுக்காக

இங்கு

வந்து

திரும்பவும்

நீ!

என்

பார்வையில்

பட்டு விடமாட்டாயா

என

ஏங்கித்தவிப்பதில்

தான்

எவ்வகை

நியாயம்

இருந்து விடப் போகிறது?

எனக்கு.

Series Navigationமழை புராணம் : 41 குடை பறக்கட்டும்