This entry is part 8 of 9 in the series 2 ஆகஸ்ட் 2026

விழுகின்ற
அத்தனை கோடி மழைத் துளிகளையும் ஏந்திட
விழைகிற குழந்தை விரல்கள் தொலைந்து
இன்று ஒரு சிறு குடும்பக் குடைவாசியாகி
ஓரம் ஒழுகும் சொட்டுகளுக்கு
குனிந்து வாழும் அன்றாடத்தான்
என்ற பெயர் வேண்டாம்
தூக்கிப்போடு மானிடா உன் குடையை.

– பா.சத்தியமோகன்

Series Navigationடோனால்ட் ட்ரம்பின் காலங்களில் ஆடம் ஸ்மித்தின் மகத்துவம்பள்ளியும், நீயும்…