ரவி அல்லது.

சட்டெனத் தூங்கப் பண்ண
புறத்தின் அனுசரனைகள்
தேவையற்ற பொழுதில்
எப்பொழுதாவது ஊர்கிறது
கம்பளிப் பூச்சி.
அதன் அசௌகரியம் தூக்கத்தை
மென்றபடி இருக்கிறது.
துப்பி விட மன்றாடிய அலுப்பில்
தொண்டைக்குள் சிக்கியத் துவர்ப்பு
துயரைக் கூட்டுகிறது.
வஞ்சிக்கப்பட்ட ரணமகற்றி
வாழ்வைச் சீராக்க எத்தனை
தூரமென்பதை அறிய
முடியவில்லை.
காற்றுடன் கலந்து வரும்
நினைவூட்டி கவனத்தை திருப்பி
அவ்வப்பொழுது நிலை
தடுமாறவிட்டு படபடக்கவிடுகிறது.
நிதானித்த இனிப்பில்
வாழ்க்கையொன்றும்
கசப்பில்லைதான் பொங்கி வழியும்
மன்னிப்பில் பூரித்துப்பழகியதால்.