பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று

This entry is part 14 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு போன வருடம் டிஸம்பர் மாதத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை அவற்றின் தொடர்ச்சியில் சொல்லாம் தான். ஆனால் இவற்றின் தொடக்கம் எங்கு எப்போதிலிருந்து என்பதெல்லாம் எனக்கு தெரியாத காரணத்தால் சொல்வது கடினம். ஒருவாறாக யூகிக்கலாம். அது தவறாகவும் இருக்கலாம். சரி இப்படித்தான் தொடங்குகிறது. அம்ருத வர்ஷினி என்ற பங்களூரிலிருந்து செயல்படும் ஒரு ஸ்தாபனத்திலிருந்து கே.எஸ்.எல் ஸ்வாமி என்பவர் கையெழுத்திட்டு 5.12.2012 தேதியிட்ட கடிதம் […]

அயோத்தியின் பெருமை

This entry is part 10 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

  சிலப்பதிகாரத்தின்  கதைத்தலைவன்  கோவலன்  புகார்  நகரை  விட்டுப்  பிரிந்து  செல்கிறான்.  அதனால்  அந்நகர  மக்கள் வருந்துகின்றனர்.  இதற்கு  உவமை கூற வந்த இளங்கோ அடிகள் இராமபிரான்  அயோத்தியை  விட்டுப் பிரியும்  போது  மக்கள் எவ்வாறு துன்பம் அடைந்தனரோ அதேபோல மக்கள் பெருந்துயருற்றனர் என்கிறார்.            “அருந்திறல் பிரிந்த அயோத்தி போல                         பெரும் பெயர்  மூதூர்  பெரும் பேதுற்றதும்” என்பன இளங்கோ எழுதிய பாடல் அடிகளாகும். பகவான் நாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியெனும் பாகத்தை […]

சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக

This entry is part 19 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

  பிஸ்ட் ஆப் புயூரி படத்தின் அனுபவம் சானுக்கு தான் யார் என்பதை உணர வைத்தது.  யாரையும் வீணே புகழ்ந்து துதி பாடி வாழ விரும்பாத குணம் தனக்கு இருந்ததைத் தெரிந்து கொண்டான்.   எத்தனை தான் நல்ல முறையில் ஸ்டண்ட் செய்தாலும், சான் நிச்சயம் இயக்குநர், தயாரிப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளரின் கீழ் அவர்களது ஏவலுக்கு பணிந்தே வேலை செய்ய வேண்டி இருந்தது.   அடிதடி சண்டைக் காட்சிகள் எடுக்கும் போது ஒருங்கிணைப்பாளரின் கை மிகவும் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 21

This entry is part 8 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                           E. Mail: Malar.sethu@gmail.com 21.உலகிலே​யே அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புக​ளைக் கண்டுபிடித்த ஏ​​ழை………….. என்ன…? நம்ம நண்பர் இன்னும் வராம இருக்காரு….ஒரு​வே​ளை அவருக்கு ஒடம்புக்கு எதுவும் முடியாமப் ​போச்​சோ..​சே..​சே…அப்படி​யெல்லாம் இருக்காது…எதுக்கும் அவரு வர​லைன்னா நாம​போய்ப் பாத்துட்டு வரு​வோம்…அட என்னங்க இப்படி ஒக்காந்திருக்கீங்க… என்ன ஒடம்புக்கு சுகமில்​லையா?..அப்படி​யெல்லாம் ஒண்ணுமில்​லையா? ஓ….ஓ….ஓ..​​​​​ஹோ..​யோசிச்சிக்கிட்டு இருந்ததுல ​நேரம்​ போன​தே ​தெரிய​லைங்களா? […]

நீங்காத நினைவுகள் 15

This entry is part 4 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

                1959 அல்லது 1960 ஆக இருக்கலாம்.  என்னைப் பார்க்க ஒருவர் வந்துள்ளதாக வரவேற்பறையிலிருந்து தொலைபேசித் தகவல் வந்தது. அப்போது அலுவலரிடம் சென்று வாய்மொழிக் கடிதம் வாங்கி எழுதுவது என் முறையாக இல்லாததால் எனது இருக்கையில் இருந்தாக வேண்டிய அவசியமின்றி நான் சற்றே ஓய்வாக இருந்தேன் எனவே, கீழ்த்தளத்தில் இருந்த வரவேற்பறைக்குப் போனேன்.  நான் மாடிப்படிகளில் இறங்கிக்கொண்டிருந்த போது, வரவேற்ப்றைக்கு மேற்கூரை இல்லாததால், அங்கிருந்தவாறே தலை உயர்த்தி என்னைப் பார்த்துவிட்ட ஓர் இளைஞர் புன்சிரிப்புடன் எழுந்து நின்று […]

மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்

This entry is part 2 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

                                  டாக்டர் ஜி . ஜான்சன்   மன உளைச்சல் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உண்டாகலாம்.            முன்பு இது வெளியிலிருந்து உண்டாவதாக கருதப்பட்டது. ஆனால் இப்போது மன உளைச்சல் நம் உடலிலும் மனத்திலும் உண்டாவது என்பது நிச்சயமாகியுள்ளது நமது உடலில் இயற்கையாகவே இரண்டு விதமான தற்காப்பு தன்மைகள் உள்ளன. இவை எதிர்த்து சண்டை போடு அல்லது தப்பி ஓடு ( fight or flee ) என்பவை. இதை எல்லா சூழலிலும் நாம் […]

எங்கள் தோட்டக்காடு

This entry is part 25 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

ரமணி பிரபா தேவி   கைக்கெட்டா நினைவுகளாகப் போய்விட்ட என் சிறுபிராயத்து, கிராமத்து மணம் வீசும் ஞாபகப்பெட்டகங்கள் இவை..   நினைவு தெரிந்தபின், ஊரினுள் வசிக்காததாலோ என்னவொ எனக்கு உறவினர்களை விடவும்,  இயற்கையின்  மேல்  ஒரு  விதமான அன்பும் நேசமுமுண்டு . தொலைக்காட்சியிலேயே இளம்பருவத்தைத் தொலைத்திராக் காலகட்டமது. பெரும்பான்மையான பொழுதுகள் தோட்டத்திலே கழியும். முழுக்க முழுக்க நீர்ப்பாசனத்தாலான  காலகட்டமாகையால் நெல் பாசனமுண்டு எங்கள் வயலில்.  சாலையிலிருந்து  காணும்போதே  கண்ணுக்கு குளிர்ச்சியளித்த  பசுமையான  நெல்  நாற்றுகள்  மனதினில்  படமாய் […]

மங்கோலியன் – II

This entry is part 27 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

நரேந்திரன் உலக வரலாறு பெரும்பாலான நாடு பிடிக்கும் பேராசையுள்ள சர்வாதிகாரிகளை மிக மோசமான மற்றும் துயரமான முறையில் மரணத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. உலகைப் பிடிக்கப் புறப்பட்ட அலெக்ஸாண்டர் பாபிலோனில் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது விசுவான படைவீரர்களே அலெக்ஸாண்டரின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டு, அவர் கைப்பற்றிய நாடுகளை பங்கு போட்டுக் கொண்டனர். ஜூலியஸ் சீசரின் நண்பர்களான அவரது செனட்டைச் சேர்ந்த பிரமுகர்கள் அவரை ரோமானிய செனட்டில் வைத்தே குத்திக் கொலை செய்தார்கள். தனது போரின் மோசமான தோல்விகள் […]

பூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1

This entry is part 18 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     பூகோளம் மின்வலை யுகத்தில் பொரி உருண்டை ஆனது ! ஓகோ வென்றிருந்த உலக மின்று உருமாறிப் போனது ! பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை பூச்சரித்துக் கந்தை ஆனது ! மூச்சடைத்து விழி பிதுக்க சூட்டு யுகப்போர் மூளுது ! நோய் தொத்தும் பூமியைக் குணமாக்க மருத்துவம் தேவை ! காலநிலை மாறுத லுக்குக் காரணிகள் வேறு வேறு ! கரங் கோத்து பூமி […]

ஆகஸ்ட் 15

This entry is part 9 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

  ஆகஸ்ட் 15 என்று ஒரு புத்தகம். குமரி எஸ். நீலகண்டன் எழுதியது. இந்த மாதிரி தலைப்புகள் கொண்ட நாவல்கள் புதிதல்ல. வெகு அபூர்வம் என்று சொல்லவேண்டும். 1984 என்று அறுபது வருடங்களுக்கு முன் ஜியார்ஜ் ஆர்வெல் எழுதியது ஸ்டாலினின் கொடூர யதேச்சாதிகாரமும் கம்யூனிஸ சித்தாந்தமும் உலகை, மனித சமுதாயத்தை எங்கு இட்டுச் செல்கின்றன என்று அவர் 1949- ல் எழுதியது. அது ஒரு anti-utopia என்று வகைப்படுத்தி னாலும், அது நம் மனித துயரைத் துடைக்க […]