பிறை நிலா

This entry is part 27 of 37 in the series 22 ஜூலை 2012

(நிலாவண்ணன்) செல்வியைக் காணப் போகும் அந்த மகிழ்ச்சியான நினைவோடு பேருந்தை விட்டு நான் இறங்கும்போது உச்சியைத் தொட்டுவிட்டது பொழுது. இருபது ஆண்டு காலத்தில் எவ்வளவோ மாற்றம் அடைந்து விட்டிருந்தது தோட்டமும் சுற்றுப் புறங்களும். காலத்தின் கோலத்தைப் பாத்தியாப்பா…? எப்படி இருந்த இடம். இப்படி மாறிப் போய்க் கெடக்கு. இங்கன ஒரு பெரிய்ய மைதானம் இருந்திச்சு. நாம பந்து வெளையாடுவம். குளிக்க வர்ர வயசுக்கு வந்த பொம்பள புள்ளைங்க நாம வெளையாடறத பாக்கறதே நமக்கு ஒரு தெம்ப கொடுக்குமில்ல. […]

நகர்வு

This entry is part 26 of 37 in the series 22 ஜூலை 2012

சாந்தாதத்     அடுத்து என்ன செய்வது எனும் குழப்பத்துடன் பால்கனியில் நின்று கொண்டிருந்தான் கணேசன். எதிரில் சற்றே முயன்றால் தொட்டுவிடலாம் என்றளவு அருகாமையில் கம்பீரமாகத் தென்பட்டது புதிதாய் எழுந்து கொண்டிருந்தது அக்கட்டடம். அன்றுதான் ஜந்தாம் தளத்திற்குக் கூரை போடப்பட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு குளுமை கலந்த புத்தம் புது சிமெண்ட் வாசனையைக் காற்றில் அனுப்பிக் கொண்டு சலனமற்ற ஞானி போல் நின்று கொண்டிருந்தது. ஊர்..உத்தியோகம்..பயணம்… போக்குவரத்து.. இப்படி எக்கவலையுமில்லாமல் இது … சிறு பிள்ளைத்தனமாய் ஒரு எண்ணம். […]

ஓரு கடிதத்தின் விலை!

This entry is part 21 of 37 in the series 22 ஜூலை 2012

“உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு ‘கேர்ள்’ போட்டிருக்கின்றாள்” தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை அந்தக் கடிதம் திசை திருப்பியது. வழமைக்கு மாறான ஒரு கடிதம். கடிதத்தின் ‘கவரில்’ இருந்த பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் அது ஒரு இளம்பெண்ணின் கடிதமாகத்தான் இருக்க வேண்டும். ஊகம் சரியானதுதான். வாசித்த நேரத்திலிருந்து மனம் கிளுகிளுப்பாக இருந்தது. உணர்வுகள் ‘வயக்கிரா’வினால் வாரி விடப்பட்டது போன்று தாளமிட்டன. இற்றைவரைக்கும் எனக்கு ஒரு காதல் கடிதம் […]

உய்குர் இனக்கதைகள் (3)

This entry is part 19 of 37 in the series 22 ஜூலை 2012

5. செல்வமும் நீதியும் ஒரு நாள் அரசரும் மதியாளர் நசிர்தினும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மதியாளரிடம், “நசிர்தின்.. உன்னிடம் செல்வம், நீதி இதில் ஒன்றை தேர்வு செய்யச் சொன்னால், எதைத் தேர்வு செய்யவாய்?” என்று கேட்டார் அரசர். சற்றும் யோசியாமல், “ பணம்..” என்ற பதில் சொன்னார் மதியாளர். “என்ன?” என்று ஆச்சரியப்பட்ட அரசர், “நான் நீதியைத் தான் தேர்வு செய்வேன்.  பணம் எல்லா இடத்திலும் இருக்கிறது.  நீதியைக் காண்பது தான் மிகவும் அரிதானது” என்றார் மிகுந்த கவனத்துடன். […]

குற்றம்

This entry is part 16 of 37 in the series 22 ஜூலை 2012

ஜாசின் ஏ.தேவராஜன் செக்கன்டரி ஸ்கூலுக்குப் போய்ட்டாலே நாங்க கெட்டுக் குட்டிச்சுவராகிப்போய்ட்டோம்னு பண்றதெல்லாம் பண்ணிட்டு ஆளாளுக்கு எங்களைப் புடிச்சி நொங்குறாங்க. உண்மைதான் கெட்டுத்தான் போறோம். நாங்க சின்னப் பசங்கதான். ஆனா, மூக்குக்குக்கீழ அரும்பு மீசை கறுங்கோடு கிழிச்ச மாரி மொளைக்குதே. அங்க மட்டுமா மொளைக்குதுங்கிறீங்க ?அது மொளைச்சா என்னன்னா பண்ணும்… யேன் பண்ணுது… எதுக்குப் பண்ணுது தெரியுங்களா? இதெத் தெரியாம சும்மா பேசக்கூடாது. இது மொத குத்தம். தொண்டைக்குழிக்குப் பக்கத்தில் முண்டுபோல் கண்டம் முட்டிக்கிட்டு நிக்கிது. நாங்களே கண்ணாடியில […]

முள்வெளி அத்தியாயம் -18

This entry is part 15 of 37 in the series 22 ஜூலை 2012

இன்று “பாயி த்வஜ்”. அதனால் இப்போதே (மதியம் மணி மூன்று) கிளம்புகிறேன்”. சதானா கிளம்பி விட்டாள். காலை முதல் அவள் எதையும் செய்து கிழித்திருக்க வாய்ப்பில்லை. கை நிறைய மருதாணியும் ‘மேக் அப்’பும் உயர்ந்த ரக பருத்திப் புடவையும் அதை விட விலையுயர்ந்த பூ வேலை செய்த ‘ஷால்’ என அவளும் அவள் தோழிகளும் ஒருவரை ஒருவர் சந்தித்து சமூக உறவுப் பகட்டை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தார்கள். சங்கரன்னுக்கு ‘பாயி த்வஜ்’ என்றால் என்ன என்று விளக்கினார் […]

குடத்துக்குள் புயல்..!

This entry is part 13 of 37 in the series 22 ஜூலை 2012

பாலகுமாரானின்   ” இதற்குத்தான் ஆசைப்பட்டாயா  ? ”  படைப்பைப் ரகசியமாகப் மறைத்தபடியே  அடுப்பில் பாலை வைத்துவிட்டு, பால் காயும்வரையில் கதையைப் படிக்கலாமே…என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பிக்க , மனது கதையோடு ஒன்றிப் போய் படித்துக் கொண்டிருந்தவளை  தனது பின்னாலிருந்து  திடீரென ஒரு கை இடது கையில் இருந்த புத்தகத்தை வெடுக்கெனப் பிடுங்கி வீசி எறிய தூக்கிவாரிப் போட்டுத் திரும்பியவள் அத்தை நின்றிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டு விழித்தாள்  தீபா. பால் பொங்கி வழியறது கூடத் தெரியாமல் அப்படி […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4

This entry is part 12 of 37 in the series 22 ஜூலை 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா […]

பூமிதி…..

This entry is part 11 of 37 in the series 22 ஜூலை 2012

தேவையில்லாத எதிர்பார்ப்புகளே ஒருவரை வாழ்க்கையின் அடிமையாக்குகிறது.. இரவு படித்து முடித்து வைத்த புத்தகத்தின் சில வரிகள் பளிச்சென்று நினைவிற்கு வந்தது தூங்கி முழித்தவுடன்…. அழகாக குளித்து முடித்து நார்மலான காலை வழிபாடு முடித்து மதிய உணவிற்கு இரண்டு சப்பாத்தியும் கொஞ்சம் சன்னாவும் ஒரு சிறிய ஆப்பிளும் எடுத்து பேக் செய்து வைத்துவிட்டு காலையில் கார்ன் ஃபிளேக்ஸ் ஒரு பவுல் அதிவேகமாக விழுங்கிவிட்டு உடை மாற்றி லேசான ஒப்பனையுடன், ஏதோ ஒரு டாப்ஸ் ஒரு ஜீன்ஸ் என்று மாட்டிக் […]

‘பினிஸ் பண்ணனும்’

This entry is part 10 of 37 in the series 22 ஜூலை 2012

கார்த்திக் வழக்கமாகச் செல்கிற அதே வழியில் தான் அன்றைக்கும் சென்று கொண்டிருந்தான். இன்னும் ஒரு மாதத்திற்குத்தான். அதன் பிறகு அவன் வேலை எங்கே எப்படி விதிக்கப்பட்டிருக்கிறதோ? அவன் வேலை செய்கிற ஸ்டார் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை அடைய இன்னும் இரண்டு புளோக்குகளுக்குள் புகுந்து பேருந்து நிறுத்தத்தில் சற்று நின்று திரும்பிப் பார்த்துவிட்டுச் சாலையைக் கடக்க வேண்டும். ‘புளோக்’குகளுக்கிடையே இருந்த முதியோர் உடற்பயிற்சி செய்கிற இடத்தில் பெரிசுகள் சிலர் கைகளைக் கால்களை நீட்டி மடக்கித் தங்கள் வாழ்நாளைக் கூட்டிக்கொண்டிருந்தார்கள். அங்கே […]