மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23

This entry is part 19 of 28 in the series 29 ஏப்ரல் 2012

“மனிதர்கள் என்றால் கவலைகள் இல்லாமலா? கேள்விகள் இல்லாமலா? ஏராளமாக இருந்தன. கூண்டுவண்டியிலும், கட்டைவண்டியிலும் வைக்கோலை தெளித்து ஜமுக்காளத்தை விரித்து, பெண்கள் கால்களை துறட்டுகோல்போல மடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க ஆண்கள் வண்டிக்குப்பின்புறம் அமர்ந்து வார்த்தைகளைக் கோர்த்து கேள்விச் சரடை தயார்செய்துகொண்டுவருவார்கள்.” 25.     ‘கிருஷ்ணபுரத்தை காக்கவே மானுடவடிவில் வந்திருக்கிறேன்’ என்ற கமலக்கண்ணியின் வார்த்தைகளைகேட்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மெய்யுருக கைகூப்பி தண்டமிட்டவர்களில் கிருஷ்ணப்ப நாயக்கரும் ஒருவர்.  கமலக்கண்ணியின் பேச்சு அவரைக் கட்டிபோட்டது. தம்மை தெய்வமென்று அவள் அறிவித்துக்கொள்ளாதிருக்கும் பட்சத்தில் கல்யாணமகாலில் அவளுக்கென்று […]

பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்

This entry is part 18 of 28 in the series 29 ஏப்ரல் 2012

இங்கே, காக்கைகளும், ஆந்தைகளும் என்ற மூன்றாவது தந்திரம் ஆரம்பமாகிறது. அது போரும், சமாதானமும் பற்றியது. அதன் முதற் செய்யுள் பின்வருமாறு: ஏற்கனவே பகைவர்களாயிருந்து பின்னால் நேசம் பாராட்டுகிறவர்களை நம்பவேண்டாம்! ஆந்தைகள் கூடிவாழ்ந்த குகைக்குக் காக்கைகள் நெருப்பு வைத்து எரித்துவிட்டன. ‘’அது எப்படி?’’ என்று அரசகுமாரர்கள் கேட்க, விஷ்ணு சர்மன் சொல்லத் தொடங்கினார்: தென்னாட்டில் பிருதிவிப்பிரதிஷ்டானம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையிலே பல கிளைகளுள்ள பெரிய ஆலமரம் ஒன்றிருக்கிறது. அதில் மேகவர்ணன் என்ற காக்கையரசன் இருந்து வந்தது. […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 21

This entry is part 10 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நான் சல்வேசன் அணியில் சந்தோசமாக இருந்தேன் சில மாதங்கள் !  அதைக் கெடுத்தவர் என் தந்தை !  இப்போது அவருக்கு உடந்தை என் காதலன் அடால்·பஸ் !  ஆன்மீக வாழ்வை விட்டு நான் ஆயுத உலகில் சிக்கிக் கொண்டேன் !  என் ஆன்மீகப் பணியிலிருந்து நான் துரத்தப் பட்டேன் !  இப்போது பியர் கம்பேனியும், பீரங்கித் தொழிற்சாலையும் சல்வேசன் […]

பணம்

This entry is part 8 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  தெலுங்கில் : ரங்கநாயகம்மா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com கோடி! கோடி!! என்ன கோடி? பணம்! சொத்து ! ரூபாய்க்கள் ! கோடி ரூபாய் !! வரதட்சிணை !! பெரியபடிப்பு படித்த அந்த இளைஞன் கேட்டான் வரதட்சிணை ! கோடி ரூபாய் வரதட்சிணை !! வியப்பாக இல்லையா? “வியப்பு எதற்கு? கொடுப்பவர்கள் இருந்தால் கேட்பதற்கு என்ன வந்தது? ஒரு கோடி என்ன, இரண்டு கோடி கேட்கலாம்! நான்கு கோடிகள் கூட கேட்கலாம்! நூறு கோடியும் […]

முள்வெளி அத்தியாயம் -6

This entry is part 6 of 28 in the series 29 ஏப்ரல் 2012

இரண்டு கால் கட்டை விரல்களையும் இணைத்துக் கட்டியிருந்த கயிற்றை அருவாள் வெட்டியது. உடலின் மீது கட்டைகளை அடுக்கிப் பின் வரட்டிகளை அடுக்கினார்கள். நெய்ப் பந்தத்தை ஏந்தியிருந்த சிறுவனால் வரட்டிகள் மீது கற்பூரம் இருந்த இடம் எது என்று காண இயலவில்லை. ஒருவர் அவனைப் பின் புறத்திலிருந்து அணைத்துத் தூக்கிக் கொண்டார். கற்பூரத்தில் பந்தம் பற்றியதும் அது கொழுந்து விட்டு எரிந்தது. திரும்பிப் பார்க்காமல் ஒவ்வொருவராய் கொள்ளிடம் நோக்கி நடந்தார்கள். ராஜேந்திரனும் அவர்கள் பின்னேயே சென்றான். ஒவ்வொரு திக்கில் […]

ரங்கராட்டினம்

This entry is part 1 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  காலையில் ஜம்மென்று வீட்டிலிருந்து கிளம்பிப் போன மணிஅய்யர்  ..வருவதற்குள் மிதுக்க வத்தல் மாதிரி துவண்டு போய் வீட்டுக்குள் நுழைந்தார்.இந்த உடம்புக்குள்ள கடல் போன்ற பரந்த மனசு இருப்பது யாருக்குமே தெரியாது… என்னன்னா…இப்படி வேகாத வெய்யில்ல அலைஞ்சுட்டு வரேளே…..உடம்பு என்னத்துக்காறது….ஒருநாளப்போல இதற்கு வா…இங்க வா…அங்க வா…ன்னு அவா உங்களை இப்படி….அலைக்கழிக்கறாளே..! வயசானவாளாச்சேன்னு  கொஞ்சம் கூட கரிசனம் இல்லாத…அக்ரீமென்ட்டைப்  போட்டோம்மா…. கையெழுத்தப் வாங்கினோமான்னு விடாமல்…வெய்யில் எல்லாம் உங்க  தலைலன்னு எழுதி வெச்சா மாதிரி….! வாங்கோ…. நாழியாறது….வந்து சாப்பிடுங்கோ…பவானி மனைப்பலகை யைப் போட்டு…இலையை […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்

This entry is part 39 of 44 in the series 22 ஏப்ரல் 2012

  1927 மார்ச் 5  அக்ஷய  மாசி 21 சனிக்கிழமை   கப்பலில் தெலூக்குஸ் கேபினில் சுகமாக வந்து இறங்கி தரையில் பல்லக்கு பரிவட்டம், போர்டு கம்பேனியாரின் சொகுசான மோட்டார் கார் சவாரி என்று பவனி வருகிற பெரிய மனுஷனாக இருக்கட்டும். அல்லாத பட்சத்தில் நடுவாந்திரமாக சம்பாதிச்சு பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைத்து ஒப்பேற்றி ஆஹான்னும் இல்லாது, ஓஹோன்னும் இல்லாமல் ஜீவிதத்தை நடத்திப் போகிற குமஸ்தனாக இருக்கட்டும். இல்லையோ, தெருவைப் பெருக்கி, அஞ்சு லாந்தரில் எண்ணெய் […]

கண்ணால் காண்பதும்…

This entry is part 32 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சிவா கிருஷ்ணமூர்த்தி. ஆச்சு, இதோ ஐஆர்டிடி, வாசவி கல்லூரிகளை எல்லாம் தாண்டி டிவிஎஸ்ஸில் பறந்துகொண்டிருந்தேன். இந்த இடங்கள் செழிப்பான பூமிதான்,  ஆனாலும் இப்போது அதீத பச்சையாக இருக்கிறது, என்னவோ தெரியவில்லை. பயங்கரமாக குளிரவும் செய்தது… தூரத்தில் பவானி செக்போஸ்ட் நெருங்க, நெருங்க போர்ட்…என்னது…”செம்ஸ்போர்டிற்கு நல்வரவு, ரேடியோ பிறந்த இடம்”  குழப்பத்துடன் தாண்டினேன். அந்த வளைவில் திரும்பினால் காளிங்கராயன் பாளையம் வந்துவிடும். மறுபடியும் போர்டு “என்பீல்ட் நகரத்திற்கு நல்வரவு”. சட்டென்று கனவுப்புள்ளியாய் கரைந்து வேறு உலகத்தில் இருப்பதை உணர்ந்துகொண்டேன்…எங்கிருக்கிறேன்? […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22

This entry is part 29 of 44 in the series 22 ஏப்ரல் 2012

“வருகின்றவனையெல்லாம் தம்பி அண்ணன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் உருபட்ட மாதிரிதான். எல்லாவற்றையும் விற்றாகிவிட்டது. இனி விற்பதற்கு என்ன இருக்கிறது. போதாக்குறைக்கு திண்ணையில் ஒரு பைத்தியத்தை சேர்த்துவைத்திருக்கிறாய். அதை என்றைக்கு துரத்துகிறாயோ அன்றைக்குத்தான் உனக்கு விமோசனம்” 24. கிணற்றுநீர் பாசிபோல அரையிருட்டு மிதக்கிறது. துரிஞ்சலொன்று ஒவ்வொரு அறையாய் நுழைவதும், யாரோ துரத்தி அடித்ததுபோல பின்னர் வெளியேறுவதுமாய் இருக்கிறது. தெருக்கோடியில் மேளசத்தமும் தொடர்ந்து நாதஸ்வர சத்தமும் கேட்கிறது. மேளச்சத்தத்தின் அதிர்வினைத் தாங்கிகொள்ள இயலாமல் வீட்டின் சுவரிலிருந்து பெயர்ந்து விழுந்த காரை வீட்டின் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20

This entry is part 28 of 44 in the series 22 ஏப்ரல் 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பார்பரா கண்மணி !  உன் தந்தை அளிக்கும் இந்தப் பதவியை நான் ஏற்றுக் கொள்ளப் போகிறேன்.  அதற்கு உன் சம்மதம் தேவை.  நமது திருமணம் அதனால் பாதிக்கப் படக் கூடாது !  நாம் இருவரும் தம்பதிகளாய் சல்வேசன் அணியில் மீண்டும் ஆன்மீகப் பணியில் ஈடுபட வேண்டும். மீண்டும் நீ மேஜர் பார்பராவாக நிமிர்ந்து பணி செய்ய வேண்டும். உன்னை நம்பி […]