தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நள்ளிரவு நேரம். இரண்டு மணி ஆகி விட்டது போல் கடியாரத்தில் மணி அடித்தது. படுக்கையறையில் அபிஜித் ஒருக்களித்து படுத்தபடி ஆழமான உறக்கத்தில் இருந்தான். அவன் இடது கை மைதிலியின் தலையைச் சுற்றிலும் வளைத்தது போல் அவள் தலையணையின் மீது இருந்தது. ஆனால் அவன் பக்கத்தில் மைதிலி இருக்கவில்லை. பக்கத்து அறையில் மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மைதிலி நாற்காலியில் உட்கார்ந்து மேஜை விளக்கு அருகில் குனிந்து இந்த […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நல்ல வேளையாக அரவிந்தின் பாட்டி ஊரில் இல்லை. உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தாள். மறுநாள் காலையில் அந்த ஊர் அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். “மைதிலி! பூனாவில் எங்க உறவினர் ரமாகாந்த் இருக்கிறார். அங்கே போய் விடுவோம். அவர் நமக்கு ஆதரவு தருவார்” என்றான். இருவரும் அன்றே கிளம்பிப் போனார்கள். இரண்டு மாதங்கள் கண்மூடித் திறப்பதற்குள் பறந்து விட்டன, மைதிலிக்கு வாழ்க்கை […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் முழுவதும் அபிஜித்துக்கு மூச்சுவிட முடியாத அளவுக்கு வேலைகள் இருந்தன. ஜப்பான்லிருந்து ஒரு குழு விசிட் பண்ணுவதற்கு வருகிறது. அவர்களை அழைத்துச் சென்று தன்னுடைய பேக்டரியைச் சுற்றிக் காண்பித்து, பிறகு லஞ்ச் கொடுத்து, மீட்டிங் முடிந்த பிறகு மாலையில் அவர்களை கலாச்சார விழாவுக்கு அழைத்துச்சென்று ….. இப்படி ஏகப்பட்ட வேலைகள். முதல் நாள் இரவும் சரியானபடி தூக்கம் இல்லை. காலை முதல் ஓயாத வேலைகள். தலை பாரமாக […]
மிதிலாவிலாஸ்-28 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு ஆகி விட்டது. அன்னம்மா கிழவி கொசுவை, எறும்பை வாய்க்கு வந்தபடி ஏசிவிட்டு தூங்கி விட்டாள். மைதிலியின் மனம் வேறு எங்கேயோ இருந்தது. சித்தார்த்தா அருகில் வந்தான். “மம்மி!” என்று அழைத்தான். மைதிலி தலையைத் திருப்பிப் பார்த்தாள். அவன் முழங்காலில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த காகிதத்தை அவளிடம் காண்பித்தான். “இன்றுடன் நம் பணக் கஷ்டம் தீர்ந்து விட்டது. ரோஷான்லாலுடன் ஒப்பந்தம் ஆகிவிட்டது. சம்பளமும் அதிகம். […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com காலையில் சித்தூ விழித்து பார்க்கும் போதே ஊரிலிருந்து அன்னம்மா வந்து விட்டிருந்தாள். பையை உள்ளே கொண்டு போட்டவள், “ரமாகாந்த் திரும்பவும் துபாய்க்கு போய் விட்டான். அவன் மாமியார் வீட்டில் என்னை இருக்கச் சொன்னான். அவன் அந்தப் பக்கம் போனானோ இல்லையோ, அவன் மாமியார் இது என்ன சத்திரமா சாவடியா என்று அடிக்க வந்து விட்டாள். ஒரு வாய் காபி கூட கொடுக்கவில்லை. இருந்தாலும் வளர்த்து ஆளாக்கியவள் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி தொழிலாளர் கோ ஆபரேடிவ் சொசைட்டிக்கு வந்தாள். மெம்பர்களை அழைக்கச் செய்தாள். அந்த மீட்டிங்கில் தான் கமிட்டியின் டைரக்டர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைக் கொடுத்தாள். “என்ன மேடம் இது?” வைஸ் பிரசிடென்ட், மற்ற மெம்பர்கள் திகைத்து விட்டார்கள். “சொந்த வேலைகளை கவனிக்க வேண்டி இருக்கிறது. மாலதி நன்றாக பயிற்சி பெற்றுவிட்டாள். இருந்தாலும் நான் எத்தனை வருடங்களுக்கு இந்த பொறுப்பில் இருப்பது? இனிமேல் இதை நீங்களாகவே நடத்திக்கொள்ள […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பலவானாக இருந்த தான் எதிர்பாராமல் வலையில் சிக்கிக்கொண்டு விட்டது போல் தவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கே வெட்கமாக இருந்தது. பதினெட்டு வயது நிரம்பிய சித்தூ விரலை அசைக்காமல், வாய் வார்த்தை எதுவும் பேசாமல் தன்னை முழுவதுமாக தோற்கடித்து விட்டான். அந்தச் சிறுவன் மீதா தனக்கு பொறாமை! சீ…சீ.. அவனுள் இருந்த மன வலிமை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பவும் எழும்பியது. இவற்றையெல்லாம் ஜெயிக்கும் சக்தி இந்த உலகத்தில் ஒன்றுக்குத்தான் இருக்கிறது. […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ரமாகாந்த் சித்தார்தாவுக்காக தேடிவிட்டு அலைந்து திரிந்து வந்தார். “அவன் எங்கேயும் தென்படவில்லை. நீ வீட்டுக்கு போம்மா. அவனே வந்து விடுவான்” என்றார். மைதிலி தலையை குறுக்காக அசைத்தாள். “ஊஹும். அவனை ஒருமுறை பார்க்காமல், ஒருவார்த்தை பேசாமல் என்னால் போக முடியாது. நானும் வந்து தேடுகிறேன்” என்றாள் மைதிலி. “வேண்டாம் வேண்டாம்” என்றார் ரமாகாந்த். அரைமணி முன்னால் வீட்டுக்காரம்மாள் வந்து, “இந்த ரகளை எல்லாம் எங்களுக்கு வேண்டாம். வீட்டை […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள்.. மைதிலி விழித்துக் கொண்டதும் பழகிவிட்டச் செயல் போல் அபிஜித்தின் தலை மீது கையை வைப்பதற்காக கையை நீட்டினாள். அவன் தலையோ, முகமோ கையில் தட்டுப்படவில்லை. மைதிலி தலையை திருப்பிப் பார்த்தாள். அபிஜித் படுக்கையில் இல்லை. தலையணையில் ஒரு காகிதத்தில் குறிப்பு இருந்தது. மைதிலி அதை எடுத்துப் பார்த்தாள். அதில் இப்படி இருந்தது. “சாரி டியர், நான் ஊருக்கு போகாமல் முடியாது. இரவுக்குள் திரும்பி விடுவேன். ஜுரம் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் மாலை, மைதிலி சோபாவில் உட்கார்ந்து முதல் நாள் இரவு டின்னரில் போட்டோகிராபர் எடுத்த போட்டோக்களை வரிசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். கம்பெனி சார்பில் மீட்டிங்கோ, டின்னரோ, வேறு ஏதாவது விழாவோ நடந்தால் அபிஜித் பைலில் வைப்பதற்காக ஸ்டாப் போட்டோகிராபரைக் கொண்டு போட்டோ எடுக்க வைப்பான். சற்று முன்தான் கவரைக் கொடுத்துவிட்டு போனான் போட்டோகிராபர். மைதிலியின் கண்கள் சித்தார்த்தாவுக்காக தேடிக் கொண்டிருந்தன. ஒரு போட்டோவில் அபிஜித் அவன் தோளில் […]