காந்திய மண்ணில் வளர்ந்து, காந்தீய சிந்தனையை உள்வாங்கிக்கொண்டு, அகிம்சா வழியில், போராடி, வீட்டுச் சிறையில் பல்லாண்டுக் காலமாக, ராணுவ அடுக்கு முறையால்,அடைக்கப்பட்ட, ஒரு பெண் பறவை,இன்று அரசியல் வானில் சுதந்திரமாக பறக்க ஆரம்பித்துள்ளது- அனுங் சான் சூ குயீ. ( AUNG SAN SUU KYI) சமீபத்தில் மாயான்மாரில் நடந்த தேர்தலில், குயீ, ஜனநாயாக கட்சியிலிருந்து, பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று, ராணுவ அடக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் மயான்மாரிலும் காந்தியம் மலர்ந்துள்ளது. மாயான்மார், பல்லாண்டுக் […]
புதுமை பித்தன்,தமிழ் எழுத்தாளர், வறுமையில் இறந்தார். மகாகவி பாரதி , வறுமையில் இறந்தார். இன்றும், பல தமிழ் எழுத்தாளர்கள் , வறுமையில் வாடி வதங்கினாலும், எழுத்துடந்தான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், சில பிழைக்க தெரிந்த, எழுத்தாளர்கள், அரசியலையும் கலந்து ஒரு, கலப்படமான, வாழ்க்கை வாழ்ந்து, பணமூட்டையுடனும், புகழுடனும் வாழ்கின்றனர். மற்றும் சில எழுத்தாளர்கள், சினிமாவை நோக்கி நகர்ந்தும், பணத்தை தேடுகின்றனர். ஆனால், இவர்கள் யாரும், தன், இறப்பிற்கு பிறகு, சமூகத்திற்கு அவர்களது படைப்புக்களைத்தான் விட்டு செல்வார்கள். […]
சிந்தானாவாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் சமீப காலமாக அடிக்கடி தாக்கப்படுவதும், அவர்களது சுந்தரத்தில் தலையிடுவதும் ஒரு சுதந்திரம் அடைந்த நாட்டில் நடை பெருவது மிகுந்த வேதனையைத்தருகின்றது. அதற்காக அரசங்கம் எந்தவித , சட்டரீதியான நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. நீதிபதி கட்சுதான் இது குறித்து அறிக்கை தயாரித்து எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளதாக அறிய வந்தோம். ரூஷ்டிக்கும், தஸ்லீமாவுக்கும் ஏற்ப்பட்ட அவமானங்களும், தலைக்குனிவும், ஒரு கும்பலால் ஏற்ப்பட்டது. அவர்களது புத்தகங்களும் வெளியிட தடை செய்வதும், விற்க முடியமால் மிரட்டல் விடுவதும், […]
இந்தியாவின் கல்விக்கொள்கை பல மாறுதல்களுக்கு உட்பட்டது. நாம், இன்றும் மெக்கலெ ராஜாபாட்டையில் செல்கின்றோம். இந்த பாடத்திட்டத்தில்,நல்ல கண்க்கு பிள்ளைகளை, தெளிவற்ற வாத்யார்களை,கேள்விக்கேட்காத அலுவலர்களை உருவாக்கமுடியும். இதையெல்லாம் மீறி, சில நேரங்களில், சிந்தானாவாதிகள், விஞ்ஞானிகள்,எழுத்தாளர்கள் தோன்றிவிடுகின்றனர். இவர்கள்தான், நமது கலாச்சார – இலக்கைய சுவடுகளை காப்பாற்றி வருபவர்கள். இதையும் காசாக்க பலர் முற்ப்பட்டு, அதுவும் பாழாகிபோனகதை பல இன்று ச்மூகத்தில் உலவிவருகின்றது. இந்த நூற்றாண்டில் தோன்றிய ஒரு கணித மேதையை ( ராமானுஜம்), கும்பகோணத்து வாத்தியார்கள் கண்டுக்கொள்ளவில்லை. அவர் […]
. இந்திய அரசியல் வரலாற்றில், சுப்ரமணிய சுவாமியைபோல், மனோ தைரியமும்,முறை தவறிய, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலையும், சட்டத்தின் உதவியூடன், குற்றவாளிக்கூண்டில், ஏற்றி, உயர்நீதி மன்றம் முதல்-உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடும், ஒரே அரசியல்வாதியாக , இவர்தான் தெரிகின்றார். அவரது அரசியல் கொள்கைகள் கோமளித்தனமாக இருக்கலாம்.அவர்,அரசியலுக்கு ஆற்றிய பங்கு, குறைவாக இருக்கலாம். அவர் தொகுதிக்கு செயத பணிகள் நிறைவேறாமல் இருக்கலாம்.இதைவிட , இன்றைய தேவை, நமது வரிப்பணத்தை ஏப்பம்விடாமல் பார்த்துக் கொள்ள நமக்கு ஒரு துணைவேண்டும். அவரது, […]
துக்ளக் ஆண்டு விழாவில், சோ பேசிய போது, தான் ஒரு தூரத்து பார்வையாளன் என்று கூறிக்கொண்டார். அவரது பார்வையில், திமுக வை அடியோடு அழித்துவிட வேண்டும் எனவும், ஜெயலலிதா தான், இந்தியாவின் பிரதமருக்கு ,தகுதியானவர்.அவரது ஆட்சி, மோடி ஆட்சியை விட , சாலச்சிறந்ததாக் விளங்கும் என்ற அவரது தீர்க்கதரிசனத்தை வைததார். அவரது பார்வையில் ஒரு வன்மம் காணப்பட்டது. தான், எந்த கட்சியையும் சாராதவன் என்றும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டு, பிஜெபியை தூக்கிக் கொண்டாடினார். மம்தா பனார்ஜி அவரது கண்ணில் […]
இரவின் முடிவில் புறாக்கள் பறந்தன. நாகங்கள் புற்றுக்குள் இரையோடு பதுங்கின. இரவின் சோம்பலை விரட்ட சூரிய கிரணங்கள் பாய்ந்தன. நதியெங்கும் புனிதங்கள் வாய் மூடிக் கிடந்தன. நிர்வாண சடலங்கள் சிதைகுள் வெந்தன. மழைத்துளி பட்டு பூமிக்குள் நடனம். நதியின் உதிரத்தில் பயிர்களின் ராகம். மௌனமாய் யோகிகள் தவத்தில் மூழ்கினர். வீதியெங்கும் சம்சாரிகள் வீங்கிப்போய் அலைந்தனர். ஆதாம் ஏவாள் மவுனமாய் சிரித்தனர். மீண்டும் சாத்தான் பழத்தோடு அலைந்தன. புழக்கடை கதவை பதிவிரதை சாத்தினாள். இரவின் முடிவில் மீண்டும் தூவினர் […]
அசாரே என்ற இயக்கத்தின் ஊற்றுக்கண்ணாக இருப்பது லட்சக்கணக்கான மத்யத்தர வர்க்கத்தின் அரசியல்வாதிகளின் மீதான கோபமும், வேதனையும், கீழ்த்தட்டு மக்களின் கடுமையான அரசு ஊழியர்களின் மீதான கோபமும்தான் , இந்த இயக்கத்தின் வெற்றியின் சின்னமாக தெரிகின்றது. காந்தியின் சிந்தனையும், ஜெயப்பிரகாஷ் நாரயண் போராட்டமும் வெவ்வேறு இலக்கைநோக்கி சென்றது. இன்றைய தேவை, நாணயமான, ஒழுக்கமுள்ள, சமூக சிந்தனைகூடிய தலைமை பொறுப்பை ஏற்று, மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடக்கூடிய மனிதர்களும். அதனால் ஏற்படும் சட்டமன்றங்களும், நாடாளு மன்றங்களும் துவங்கவேண்டும். இன்றைய மந்திரிகள், […]