author

தினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !

This entry is part 22 of 28 in the series 22 மார்ச் 2015

  சற்று நேரம் அமைதியாய் இருந்த என் உடல் செல்கள் வலியினால் அலரத் துவங்கிக்கொண்டிருந்தது. என்னைக் கொண்டு போய் க்ளினிக் கட்டிலில் படுக்க வைத்தார்கள். அங்கு வந்த சங்கர் அண்ணாவிடம், என் அம்மா, கால்ல சுடுதண்ணி கொட்டிக்கிட்டாப்பா என்று கூற, என்னைப் பார்த்து, உனக்கேம்மா இந்த வேலை என்றார். நானே வேண்டும் என்று சுடுதண்ணீரை எடுத்து என் மேல் கொட்டிக்கொண்டதைப் போல.   அவ கொட்டிக்கலப்பா அவ பொண்ணு தவறிக் கொட்டிட்டா என்றாள் அம்மா.   அச்சோ […]

தினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. !

This entry is part 18 of 25 in the series 15 மார்ச் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி சில்லென்ற காற்று உடல் தழுவும் உணர்வைப் போல மனம் ரம்மியமாய் இருந்தது அன்றைய பொழுது. திரு.வையவன் அவர்கள், “தமிழ்ச்செல்வி உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தப் போகிறோம். அன்னை நிர்மலா தொழிற்பயிற்சி மையத்தில்,” என்ற பொழுது, எனக்குள் உதயமான கேள்வி, நான் என்ன சாதித்து விட்டேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துகிறார்கள் என்பதுதான். இந்த பாராட்டு விழாவில் எல்லாம் எனக்கு நாட்டமில்லை. வேண்டாம் என்றேன். அவரோ “உன் சாதனை களைப் பற்றி உனக்கு தெரியா திருந்தாலும், உன்னைப் […]

தினம் என் பயணங்கள் – 41 எரிவாயுக்கு மான்யம் .. !

This entry is part 9 of 22 in the series 8 மார்ச் 2015

  வாழ்க்கை சில நேரம் புதிய கதா பாத்திரங்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. முன்பே அவர்கள் வேறு கதா பாத்திரங்களையும் முகத்தில் அணிந்திருப்பார். அம்மா, அக்கா, தங்கை, மனைவி, சிநேகிதி, விரோதி என்று ஒரே நபருக்குள் எத்தனை முகமூடிகள் ? அப்படியான ஒருத்தியை நான் சமீபத்தில் சந்தித்தேன். அவள் ஒரு புத்த பிக்குவைப் போலிருந்தாள். ஆனால் அவளை எனக்கு முன்பே தெரியும், இந்த புத்த பிக்கு வேடம் தரிப்பதற்கு முன்பே!. சமூகத்தில் திறமையான வழக்குரைஞர் ஒருத்தின் தாயார் […]

துணிந்து தோற்கலாம் வா

This entry is part 9 of 33 in the series 4 ஜனவரி 2015

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி       வாடா நண்பா ! வாழ்ந்து பார்க்கலாம் வா ! உலகை அளந்து நமக்காய்  வளைக்கலாம் வா ! வாழ்க்கைக் கடலாய் பரந்து கிடக்கு. அள்ளி பருக துணிவு மிருக்கு. எண்ணச் சிறகை மெல்ல விரித்து பிரபஞ்ச வெளியைக் கையில் நிறுத்து வாடா ராஜா ! வாழ்ந்து பார்க்கலாம் வா ! வாழ்க்கை நமக்கே, துணிந்து  தோற்கலாம் வா ! தோல்வியா சோகம் எதற்கு ? அனுபவ பாடமிருக்கு. புதிய […]

தினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !

This entry is part 29 of 33 in the series 4 ஜனவரி 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அன்று சனிக்கிழமை காலை. புதிய வருடத்தில் புதிய உறவைத் தேடிய பயணம் இது. நேற்றே துணை வட்டாட்சியர் திருமதி. மலர்க்கொடி அவர்கள், பாதி நேரம் வந்துட்டு போய்டும்மா என்று பணித்திருக்க, அலுவலகம் செல்லும் எண்ணத்தோடு எழுந்த எனக்கு காத்திருந்தது இறுக்க உணர்வு. துவைக்கப்படாத துணிக்காக அலுத்து, பழைய உடைகளை மாற்றி மாற்றி போட்டு எதுவும் சரிப்படாததால் இப்படி முடியாமைக்கு அலுத்துக் கொண்டேன். இந்த உலகத்தில் வாழ்வதை விட சாவதே மேல், கொஞ்சம் துணியை துவச்சிருக்கக் […]

தினம் என் பயணங்கள் -39 கடலும் நானும் -3

This entry is part 14 of 23 in the series 21 டிசம்பர் 2014

    திரு.வையவன் அவர்களின் வீட்டிலிருந்து லிஃப்டில் கீழ் வரும் போது, பல நாள் பழகிய உறவுகளை விட்டு விலகுவதைப் போன்றதோர் உணர்வு. செங்கை. சொர்ப்பனந்தலிலும் ஒரு இயக்கத்தை துவங்க வேண்டும் என்ற ஜானகி அம்மாவின் விருப்பத்தை நினைவுகூர்ந்தேன். அங்கிருந்து திரு.வையவன் அவர்கள் அன்றாடம் செல்லும் பார்த்த சாரதி கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு எங்கள் தாயாரின் குலத் தெய்வமான பத்மநாப சுவாமிகள் கோவில். எப்பொழுதேனும் அவர் கோவிலில் இருக்கும் போது கைப்பேசியில் பேச நேரும் […]

தினம் என் பயணங்கள் : 38 கடலும் நானும் -2

This entry is part 22 of 23 in the series 7 டிசம்பர் 2014

  சென்னையில் மழை! மேம்பாலத்தின் வழியே வழிந்து தரை எங்கும் பொட்டு பொட்டுகளாக தெரிந்து கொண்டிருந்த மழைத் துளிகள் கண்களுக்கு ரம்மியக் காட்சியை ஏற்படுத்தினாலும், மனதிற்குள் ஒரு திகில் உணர்வு. சென்னையிலிருந்து எடுத்து வரப் புறப்பாடு செய்தது புத்தகமும் கம்பியூட்டரும் பெற்றுக் கொள்ள. இரண்டிற்கும் மழை என்றால் அலர்ஜி அல்லவா ? கார் ஜன்னலின் வழியே காட்சியாக்கப்பட்டது மாற்றுத்திறனாளி ஒருவரின் மூன்றுச் சக்கர மோட்டார் வாகன பயணம். அது போன்றதொரு வாகனத்தை நானும் வாங்க வேண்டும் என்ற […]

தினம் என் பயணங்கள் : 37 கடலும் நானும் -1

This entry is part 17 of 23 in the series 30 நவம்பர் 2014

    ஒரு சின்ன சிலிர்ப்பு, அந்த எண்ணம் வந்து இதயத்தில் உதித்த போது. நான் கடலைப் பார்க்கப் போகிறேன்! எப்படியும் அந்த கடலையும் அதன் ஆர்ப்பரிப்பையும், உப்புச் சுவையின் பிசு பிசுப்பையும் அனுபவிக்கும் ஆவல். அதற்கு ஒரு வாய்ப்பும் வந்தது. நண்பர் வையவன் அவர்கள் ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து சென்னை வாங்க தமழ்ச்செல்வி, தாரிணி பதிப்பகம்  வெளியிட்ட லட்ச ரூபாய் பெறுமானமுள்ள புத்தகங்களை கொண்டு போங்கள் அப்படியே உங்க டிரஸ்ட்க்காக ஒரு கம்யுட்டரும் தருகிறேன், […]

அந்திமப் பொழுது

This entry is part 6 of 22 in the series 16 நவம்பர் 2014

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி ​ அந்திமப் பொழுதென்கிறாய் உன் முகம் கண்டு விடியும் என் வாழ்வினைப் பார்த்து. ​​. அன்பினால் வருடி உயிரினால் பிரசவித்தாய் காதல் பொழுதுகளை. ​​. பார்க்காதிருந்தும் பேசாதிருந்தும் கூடாதிருந்தும் நேசத்தின் வேர் ​வாடி யிருக்க வில்லை. ​.​ ஒரு வார்த்தையில் துளிர்விட்ட கண்ணீரும் நம் நேசத்தின் சாரலையே உலகில் தூவிச் செல்கிறது ​.​ இப்பொழுது பேசு காதலின் உயிரூட்டத்தை ஊடலின் உயிரோட்டத்தை அந்திம எண்ணத்தை தள்ளி வை. உன்னோடு ஒருகால் என் வாழ்வும் அத்தமிக்கக் […]

பட்டுப் போன வேர் !

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி உன் எண்ணங்களால் ஏன் தீண்டுகிறாய் நீ யாரோ வென ஆன பிறகும். தூயதான அன்பை திருப்பினாய் வேண்டாம் போவென அழிச்சாட்டியமாக. கண்ணீரும் தவிப்பும் கூக்குரலும் அழுகையும் உன் ஜீவனைத் தீண்ட வில்லை ! அதன் மெய்த்தன்மையை சோதித்து வலிகளால் பதியவிட்டாய் நாட்களை. உனக்கான தோர் இடமென்று கிழிசலை முன் எறிந்தாய் அது எனக்கான தாகக் கொள்வ தெப்படி ? மீண்டும் வந்து நில் நட்பினால் சிருங்காரிப்பேன் என்பாயோ – அது காதலில் கரைந்த பிறகு. […]