ஊரிலிருந்து என் சகோதரி தொலைபேசியில் பேசினார். கொரோனாவைப் பற்றி யாரிடமும் பேசக் கூடாது என நினைத்தாலும் அதை தவிர்க்க இயலவில்லை. ஆனாலும் கொரோனா செய்யும் நன்மைகளையும் நாம் பகிர்ந்துதானே ஆக வேண்டும். அவள் இருப்பது இந்தியாவின் தென்முனையில் இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு கிராமத்தில். ஊரடங்கு நாட்களில் ஊர் அமைதியாகவே இருக்கிறதாம். ஊரடங்கு விதிகளை அங்கிருக்கும் மக்கள் நன்றாகவே கடை பிடிக்கிறார்களாம். ஊரடங்குக்கு பின் அந்தத் தெருவில் மிகச் சிறிய வீட்டில் வசிக்கிற கூலி வேலை செய்து […]
குமரி எஸ். நீலகண்டன் ஒரு நெருங்கிய நண்பனின் அம்மாவை முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன். சில வருடங்களாக என் நட்பு வட்டத்தில் வந்தவன் அவன். அம்மாவின் பொலிவான முகத்தில் வயதான நண்பனின் ஆளுமை வழிந்தோடியது. பால்ய காலத்தில் நான்றியாத நண்பனின் அந்த பால் வடியும் முகம் எனது கற்பனையில் வியாபித்து திரிந்தது. அம்மா பால்ய நண்பனுக்கு பாலூட்டினாள். சிரித்தாள். கோபத்துடன் கண்டித்தாள். வாழைத் தண்டின் நார் பட்டையால் மகனை வலிக்காமல் அடித்தாள். மகனைக் காணாமல் மகனின் பெருமை கூறி […]
குமரி எஸ். நீலகண்டன் கொரோனா என்ற கண் தெரியா நுண் கிருமியால் உலகமே முடங்கி இருக்கிறது. பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் சுற்றித் திரிய மனிதர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள். பல குழந்தைகளும் இளைஞர்களும் வீட்டிலிருக்கும் அந்தப் பொழுதை மிகவும் பயனுள்ள விதமாக கலை, இலக்கியம், இசை, நடனமென பல்வேறு தங்களது ஆர்வமுள்ள துறைகளில் அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் தனித் தனியாக நடித்து வெளிவந்த கொரோனா குறித்த […]
குமரி எஸ். நீலகண்டன் ஒருவன் நடக்க முடியாமல் தடுமாறுகிறான். இன்னொருவன் கைத்தாங்கலாய் அனுசரணையுடன் உதவுகிறான். நோயுற்று இருக்கும் அம்மாவின் துயரத்தைச் சொல்லி ஒருவன் கதறி கதறி அழ சுற்றி இருக்கும் பலரின் கண்களில் நெருப்பு எரிய தீ அணைக்கும் வண்டி போல் கன்னத்திலெல்லாம் நீர் பாய்ந்து வழிகிறது. ஒருவன் செருமி செருமி இரும பக்கத்திலொருவன் கோப்பையில் தண்ணீர் விட்டு உதவுகிறான். ஆடையே இல்லாமல் ஒருவன் அழுது புலம்ப இன்னொருவன் தன் ஆடையை அவிழ்த்து அவன் மானம் காக்கிறான். […]
குமரி எஸ். நீலகண்டன் இப்பொதெல்லாம் பறவைகளின் சப்தம் எப்போதும் தெளிவாய் கேட்கின்றது. சூரிய ஒளிகள் தடையின்றி பூமியில் விழுகின்றன.. காற்று சுதந்திரமாய் உலாவிற்று. மலைப்பாம்பாய் நெளிந்த நெடுஞ்சாலைகள் நிம்மதியாய் சப்தமின்றி தூங்கின. தெரு நாய்கள் வாலாட்ட மனிதர்களின்றி அலைந்தன. பூனைகள் கைக்குழந்தைகளாய் அலறின. ஊரே அடங்கிற்று. அஞ்சி நடுங்கினர் மனிதர்கள் தன்னையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் கண்டு… எல்லாவற்றிற்கும் அஞ்சினர் காண்பவற்றையும் காணாதவற்றையும் மனதில் கண்டு… ஓடி ஒளிந்து கொண்டனர் மனிதர்கள் உள்ளே உள்ளே… அகமும் தெரியவில்லை […]
தமிழில் – குமரி எஸ். நீலகண்டன் லீலாக் என்ற புனைப் பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவரும் உபாசனா சிறந்த ஓவியரும் கூட. தனது ஒவியங்களையும் கவிதைகளையும் இரண்டு சிறகுகளாய் கொண்டு இலக்கிய உலகில் பயணிப்பவர். கலை ஆசிரியரும் கூட. கவிஞரின் வாழ்த்துக்கள் என் கவிதைகளுக்கு எந்த விதிகளுமில்லை. எழுதுவதற்கு எந்த காரணங்களுமில்லை. ஒவ்வொரு வரியும் சமமானது. மென்மையானது. ஒவ்வொரு வார்த்தையும் ரகசியம் இழந்தது. என் கவிதைகள் செய்யுளாய் இருக்கும். திணறும். என் கவிதைகள் ஆடும். தடுமாறும் மீன்களும் […]
குமரி எஸ்.நீலகண்டன் மகாகவி பாரதியின் பேத்தி டாக்டர் விஜயபாரதி தனது 81 வது வயதில் கனடாவில் காலமானார். பாரதியின் மூத்த மகள் தங்கம்மா பாரதியின் புதல்வி. செல்லம்மா பாரதியின் வாய்வழி பாரதியின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நான் சென்னை வந்த புதிது. விஜயபாரதி குடும்பம் கனடாவிலிருந்து விடுமுறையில் பாரதியின் கவிதைகளின் செம்பதிப்பை வெளியிடும் முயற்சியில் சென்னை வந்திருந்தனர். அப்போது அவர்கள் பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அங்கே அவர்கள் சென்ற […]
குமரி எஸ். நீலகண்டன் இந்திய ஜன நாயகமானது வலுவானது. உலகிற்கு வழி காட்டக் கூடியது. ஆனால் பொதுநலப் போர்வையை போர்த்திக் கொண்டு அலைகிற சுயநலவாதிகளால் ஜனநாயகமானது தனது ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருப்பது எதார்த்தம். இன்றைய இந்திய சமூகத்தில் படித்தவர்களில் பத்து பேரிடம் இந்திய ஜனாதிபதி யாரென்று கேட்டால் எத்தனை பேர் சரியாக பதில் சொல்வார்கள்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தனது ஜனாதிபதியின் பெயரைக் கூட தெரியாத அளவில் படித்த சாதாரண ஜனங்களை நமது பாரம்பரியமிக்க பாரத […]
குமரி எஸ். நீலகண்டன். உலகம் மிகவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அழகான உலகம் ஆபத்தின் விளிம்பில் நிற்கிறது. வானம், பூமி, காற்று, கடல், நெருப்பு, பனி, தாவரங்கள், விலங்குகள்,பறவைகள், நுண்ணுயிரிகள், மனிதர்கள் எல்லாம் உள்ளடக்கிய உலகத்தை ஒருவன் அழித்து கொண்டிருக்கிறான். அவன்தான் மனிதன். மனிதனின் ஆசை என்ற புயலில் வானம் கிழிந்து போய் கிடக்கிறது. காற்று விஷத்தில் தோய்ந்து கிடக்கிறது. கடலானது பிளாஸ்டிக், குப்பைகள், வேதிப் பொருட்கள் உட்பட்ட நச்சுக் கழிவுகளால் கருப்புக் கடலாகிக் கொண்டிருக்கிறது. […]
நடிகர் சிவகுமார் அவர்கள் ஈரோட்டில் பேசிய இரண்டு மணி நேர மகாபாரத சொற்பொழிவின் காட்சிப் பதிவினை சமீபத்தில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை எந்தக் குறிப்புமில்லாமல் மகாபாரதக் கதையை சொல்வதென்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கடலில் நீந்திக் கடப்பதற்கு ஒப்பானது. இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம். திசை தெரியாத அடர்ந்த வனத்திற்குள் நூறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தன்னந்தனியனாய் வெளியே வருவதற்கு ஒப்பானதாகும். மகாபாரதக் கதையை கையாளுவதென்பது மிகவும் கடினமானது. நிறைய குட்டிக் […]