பட்டிமன்றப் பயணம்

This entry is part 3 of 22 in the series 16 நவம்பர் 2014

வளவ. துரையன் திருக்கனூருக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தப் போயிருந்தோம். 1970 முதல் 1980 முடிய வாராவாரம் ஞாயிறு மாலைகளில் பட்டி மன்றம்தான் பேசுவோம். பேசுபவர்கள் ஏழு பேர் என்றால் எங்களுடனேயே கேட்பதற்கும் நான்கைந்து பேர் வருவார்கள். வளவனூர் கடைத்தெருவில் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு எங்கள் கூட்டத்தைப் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே “ஜமா இன்னிக்கு எந்த ஊரு போவுது?” என்று கேட்பார்கள். அப்பொழுது இலக்கிய வெறி பிடித்து அலைந்த காலம்; எல்லாரும் பேச்சுப் பயிற்சி பெற்ற காலம். […]

உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

  தில்லியின் அனலடிக்கும் கனல் கத்திரி வெய்யிலில் நடந்தால் நாமே கத்திரி வற்றலாகிவிடுவோம். அங்கே சாலைகளில் விற்கும் ஜல்ஜீரா, குல்ஃபி, சேமியா கலந்த பலூடா, கலர் குச்சி ஐஸ் , பானி பூரி இதெல்லாம் சாப்பிட்டா கோடையைச் சமாளிக்கலாம். தில்லியின் கரோல்பாக் சப்ஜி மண்டியருகில் நாங்கள் இருந்தோம். தினம் பகலில் இந்த ஜல்ஜீரா வண்டி வரும் . ஒரு க்ளாஸ் 2 ரூபாய் இருக்கும். கொத்துமல்லி புதினா மிளகாய் போட்டு அரைத்த தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து இந்துப்பு […]

code பொம்மனின் குமுறல்

This entry is part 16 of 19 in the series 6 ஜூலை 2014

ரவிசந்திரன் உனக்கு எதற்குடா நாங்கள் கட்ட வேண்டும்.??? இன்கம் டாக்ஸ், வாட், சர்வீஸ் டாக்ஸ் கோடு எழுதினாயா, டெஸ்டிங் பண்ணினாயா? ஸ்கீரீன் டிசைன் செய்தாயா? சம்பளமில்லாமல் ஆபிஸில் தூங்கினாயா? பென்ஞ் துடைத்தாயா? டீமுக்கு பிட்சா, சீகரெட்டாவாது ! வாங்கினாயா? இல்லை தூங்கும் எங்கள் ப்ராஜெக்ட் மேனேஜருக்கு சொரிந்தாவது விட்டாயா? உனக்கு எதற்காட வரி , வட்டி, சர் சார்ஜ் நெஞ்சு துடிக்கிறது. கால் துரத்துக்கிறது வெளிநாட்டுக்கு ஒடு ஒடு என தடுக்கிறது அன்னையின் முனகல். ரவிசந்திரன்

அத்தைமடி மெத்தையடி

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி ஒரு பைத்தியம் இந்தப் பாட்டின் மீதும் கே ஆர் விஜயாமீதும். எனக்கு மூன்று அத்தைகள் உண்டு. அதில் இரண்டாம் அத்தைக்கு கே ஆர் விஜயா சாயல் அதிகம் இல்லாவிட்டாலும் அந்த சுருட்டை முடி உண்டு. […]

டைரியிலிருந்து

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

அந்த இரவின் தென்றல் இனிமை. நிலவில்லாத வான் இனிமை. என்னைப் போலைந்த இருட்டும் தனிமை. ஏன் என்று கேட்க ஆளில்லாத அமுதத் தனிமை. கையில் ப்ளாஸ்க் இல்லாவிட்டால் ஜோராய்த்தான் இருந்திருக்கும். அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று எத்தனையோ வேண்டுதல்கள். வியாபாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவள் ப்ரேயர் செய்யப் போவதே சாப்பிட்டதும் சிறிது தூரம் சுதந்திரக் காற்றில் நடக்க வேண்டுமென்றுதான். ஜீரணமாக வேண்டுமல்லவா. அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் வந்தாயிற்று. அதுவரையில் அவளைக் காணாமல் புருபுருத்துக் […]

நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்! (நகைச்சுவைப் பயணக் கட்டுரை) ஒரு அரிசோனன்   அரிசோனாவில் கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டப் பழகிக்கொண்ட எனக்கு – அதாவது, கிழக்கு-மேற்காகவோ, அல்லது தெற்கு-வடக்காகவோ நூல் பிடித்தால் போல் செல்லும் பல தடங்கள் கொண்ட நேர் பாதைகளிலும், பிரீவேக்களிலுமே கார் ஓட்டிப் பழகிக்கொண்ட எனக்கு – என் மகன் வேலை பார்க்கும் நியூ ஜெர்சிக்குச் சென்றதும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு காரோட்டி, திண்டாடித் தெருப் பொறுக்கிய என் நகைச்சுவை அனுபவங்களை உங்களுடன் பகிர்த்து […]

கால் பக்க கப்சா, ஒரு பக்க உடான்ஸ்

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

தேர்தல் ஜுரம் ஏறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், (துர)அதிருஷ்ட வசமாக நாம் எதிர்பார்க்காத  சில அரசியல் ‘ தல ‘ கள், தமிழகத்தின் அரியணையை அலங்கரித்தால் என்னாவாகும் என்று ஒரு ஏடாகூடாமான கற்பனை. இது சிரிப்பு பக்கம்.. நத்திங்  சீரியஸ்! பசுமாடும் தீவனமும் போல், இணைபிரியாமல் வாழும் லல்லுவும் ராபரியும் ( இந்திப் பெயர்.. ஆங்கிலம் என நினைத்து அதிக கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் அன்பு வாசகர்களே!), தமிழ்நாட்டின் இணை முதல்வர்களாக பங்கேற்கும் கோலாகல திருவிழா, புளியம்பட்டியில், மாடு […]

தவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

  வில்லவன் கோதை இயல்பாகவே  தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். உண்பதிலும் உறங்குவதிலும்  மட்டுமல்ல ! பேசுவதிலும் எழுதுவதிலும் கூட. பெரும்பாலும் ரசனை உள்ளவர்கள்   கற்பனை வளமும் மிகுந்தவர் களாகவே இருந்திருக்கவேண்டும். நம்மிடையே தலைமுறை தலைமுறையாக நிறைந்து கிடக்கிற நீதி நூல்களும் இலக்கிய குவியல்களுமே இதற்கு சான்றென கருதுகிறேன். ரசனை மிகுந்தவராக இருப்பதால்தான் ஒரு காரியத்தை ஆஹ..ஓஹோ என்று பாராட்டுவதும் இன்னொரு காரியத்தை த்தூ..து என்று நிராகரிப்பதும்  எப்போதுமே இந்த சமூகத்தில் நிகழ்கிறது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்…! தலையாலங்கானத்து […]

வாக்காளரும் சாம்பாரும்

This entry is part 4 of 32 in the series 15 டிசம்பர் 2013

-நீச்சல்காரன் காந்தாமணி இராகத்தில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பர் தோசைமணியின் செல்பேசியில் கவுண்டமணி குரலில் “அரசியலில் இதெல்லாம் சாதாரணம்பா” என்று அழைப்பு மணி சிணுங்கத் தொடங்கியது. அவசர அவசரமாக செல்பேசியை எடுத்து “இன்னைக்கு எலெக்சனு அதனால நாளைக்கு வாரேன் அண்ணாச்சி” என்று பைவ்யமாகத் தனது தோசைக் கடை முதலாளியிடம் சொன்னார். “தம்பி ஒரு ஓட்டு இல்லாட்டி எலெக்சன் கேட்டுப்போகாது, தோசை மாஸ்டர் இல்லாமல் வியாபாரம் ஓடாது” என்றார் முதலாளி. “அண்ணாச்சி, எலெக்சனே என்னை நம்பித்தான் நடக்குது” […]

நெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

காட்சி  : 1   ஹலோ.. ஹலோ. ஹலோ.. ஏனுங்க .. கேக்கலீங்களா..   ஹலோ..  என்னம்மா.. நான் டிராஃபிக்ல இருக்கேன்.. ஒன்னும் கேக்கலை   ஹலோ.. ஏனுங்க பக்கத்துல யாரோ பேசுறது கேக்குது.. நீங்க என்னமோ வண்டீல போற மாதிரி சொல்றீங்க..   அதுவா.. வேற ஒன்னுமில்லம்மா. நானு சிக்னல்ல நிக்கிறேனா.. அங்க பக்கத்துல ஒருத்தர் போனில பேசிட்டிருக்கார்..   ஓ அப்படியா.. அப்ப சரி. வந்து, நான் எதுக்கு போன் பண்ணேன்னா.. ஏனுங்க… ஏனுங்க.. […]