மார்கழி கோலம்

This entry is part 15 of 33 in the series 3 மார்ச் 2013

***********   முகத்தை வருடிய தென்றல் வண்ண வண்ண இளநிறங்கள் ஏற்று சின்னஞ்சிறு இருதய வடிவங்களில் அமர்ந்தது மேசையில் கிடந்த குறிப்பேட்டின் அட்டையில் ..   கைபேசி,கணினி,மடிகணினியின் மின்னூட்ட கயிறுகள் நெரிக்கும் மேசைக்கு – உயிர் தெளித்து மார்கழி கோலம் …   – சித்ரா (k_chithra@yahoo.com)

இருள் தின்னும் வெளவால்கள்

This entry is part 12 of 33 in the series 3 மார்ச் 2013

  காலத்தின் கண்ணியில் இன்னொரு இரவு கூடியிருக்கும்.   மழையின் இடைவிடா மோகத்தில் மையிருள் இன்னும் குழைந்திருக்கும்.   மின்னல் வெட்டி மழை கொளுவி நிலம் எரிவதாய்த் தோன்றும்.   சரமென இடி இடித்து கடித்துக் குதறும்   குகையை யார் புரட்டிப் போடுவது? வெளவால்கள் கதறும்.   தெரிந்த முடிவிலிருந்து தெரியாத கேள்விக்கு தயாராகாது பழகிய இருளில் பரபரக்கும்.   இருள் கூடி இனி இடி மின்னல் கேள்வி இல்லையென்று தளர்த்திக் கொண்டு தளர் மேனி […]

சமாதானத்திற்க்கான பரிசு

This entry is part 8 of 33 in the series 3 மார்ச் 2013

 கோசின்ரா      பார்வையாளர்களே கண்களை மூடாதீர்கள் அவைகள் திறந்தே இருக்கட்டும் பதற்றமான மனம் ஆறுதல் கொள்ளட்டும் மன்னிப்புகளை வீட்டில் விட்டு வந்திருப்பீர்கள் என நம்புகிறோம் யாரவது தவறுதலாக கொண்டு வந்திருந்தால் இலவசமாக மன்னிப்புகள் வைக்குமிடம் வெளியே இருக்கிறது அங்கே வைத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொள்ளுங்கள் போகும் போது ஞாபகமாக எடுத்துச் செல்லுங்கள் ஏனெனில் உங்கள் மன்னிப்புகள் நீங்கள் யாரென்பதை காட்டிக்கொடுத்து விடும் அப்புறம் இதே இடத்தில் நீங்களும் இருக்க நேரலாம் மேலும் யாரிடமாவது இரக்கம் கருணை அன்பு […]

பிரதிநிதி

This entry is part 7 of 33 in the series 3 மார்ச் 2013

—————– குழப்பங்கள் கருக்கொண்டு பிரசவித்த சூன்யத்தினுள் கரைந்தபடி காலம் தொப்புள்கொடி அறுபடும் முன்னரே தாயையிழந்த பிஞ்சாய் பற்றிக் கொள்வதற்கோரு விரல் தேடி வீறிடுகிறது வறண்ட மனம் பலநூறு பகலவனாய் சுட்டெரிக்கின்றன இயலாமைகள் என் ஆகாயத்தை ஏங்கித் தவிக்கின்றன என் பாலைவன ஏக்கங்கள் நிசியிலுறங்கா ஓநாயின் ஓலத்தோடு கரைகிறதென் கதறல் அருகிலிருக்கும் அரவத்தின் கிசுகிசுப்பில் பயந்து ஒடுங்குகிறதென் சுயம் என்னுடைய வாழ்வை என் பயங்கள் வாழ்கின்றன.

தாகூரின் கீதப் பாமாலை – 53 ஆத்மாவில் நுழையும் புன்னகை !

This entry is part 24 of 26 in the series 24 பிப்ரவரி 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   நிரம்பப் பேசி விட்டாய் நீ இங்கு வந்து ஒரு வார்த்தை சொல்லாது ! உன்வாய் மொழியைப் புரிந்து கொள்ளும் நம்பிக்கை இழந்து விட்டேன் ! புன்னகை அம்பை என்மேல் ஏவி புகுந்து கொண்டாய் நீ என் ஆத்மாவில் ஆழ்ந்திருக்கும் ஏதோ ஒன்றில் ! உடனே ஆர்வமோடு உற்று நோக்குவாய் என் முகத்தினை ! ஆகவே உன்னைத் தவிர்க்க முனைகிறேன் என் புற […]

தீப்பற்றிக் கொள்ளும் வார்த்தை

This entry is part 22 of 26 in the series 24 பிப்ரவரி 2013

– இவள் பாரதி எப்போதும் தீப்பற்றிக் கொள்ளும் வார்த்தைகள்தான் வீசப்படுகின்றன எதிர்கொள்கிற என்னிடமிருக்கும் பஞ்சுபோன்ற வார்த்தைகள் பற்றி எரிகிறது பலத்த சத்தத்துடன்.. அந்த நெருப்புப் பொறியில் எல்லோரையும் பற்றும் தீ கடைசியில் சாம்பலாகிறது கொஞ்சம் சமாதானத்துடனும் நிறைய சச்சரவுகளுடனும்

வால்ட் விட்மன் வசன கவிதை -12 என்னைப் பற்றிய பாடல் – 5

This entry is part 17 of 26 in the series 24 பிப்ரவரி 2013

​ ​வால்ட் விட்மன் வசன கவிதை -12 என்னைப் பற்றிய பாடல் – 5 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++   புவியில் பிறந்தது எத்தகை அதிர்ஷ்ட மென எவராவது நினைத்த துண்டா ? எனக்குத் தெரியும், அப்படிச் சொல்வோரிடம் விரைவில் நான் சொல்வேன் இறப்பதும் ஓர் அதிர்ஷ்டம் என்று ! புறக்கணிப்பேன் மரணத்தை நான் இறப்பிலும், பிறப்பிலும் […]

பல

This entry is part 16 of 26 in the series 24 பிப்ரவரி 2013

உதய சூரியன்   சொத்துக்கள் பல குவித்த நல்ல மனிதர் இறந்தார் மனைவிக்கு புத்திசுவாதினம் மகள்கள் இருப்பிடம் தெரியவில்லை இழவு வீட்டையே வெறித்து நோக்கும் தெருவாசிகள் !!! —————- ———————————– —————— ஒன்றோடு ஒன்றான கால்கள் சில மணித்துளிகளில் தளர்ந்தன, நகரவில்லை இந்த சாதாரண கனவுகளை நான் ரசிப்பது இல்லை பிறிதொரு நாளில் என் கால்கள் தளர்தன வலிக்கு நிவாரணமில்லை இன்று அந்த சாதாரண கனவை அன்றைய பொழுதில் ரசிக்க விழைகிறேன் ரசித்த பின் காலம் முடியட்டும் […]

கவிதை

This entry is part 28 of 30 in the series 17 பிப்ரவரி 2013

கோசின்ரா வேலிக்குப்பால் நின்றிருந்த மனிதன் மேற்கு திரிபுராவிலிருக்கும் கமலா சாகரின் மா காளி கோவில் முன்னால் பெரிய சதுர  குளம் குளத்தின் இரண்டு பக்கத்தில் இரண்டு ஆள் உயர இரும்பு வேலிகள் போகின்றன வேலிக்கு அந்தப்பக்கம் வயலில் வேலை செய்கிறார்கள் அழைத்து சென்றவன் சொன்னான் அவர்கள் பங்களாதேசத்தவர்கள் வேலிக்குப்பால் நின்றிருந்த மனிதன் என்னை வேடிக்கை பார்க்கின்றான் நான் அவனை பார்ப்பதைப் போல பார்க்குமளவுக்கு எதுவுமில்லை இருவரிடமும் வேடிக்கை பார்த்தவனின் தாத்தா வாழும் பொது அவன் நிலத்திற்கு பெயர் […]

தாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !

This entry is part 22 of 30 in the series 17 பிப்ரவரி 2013

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா புன்னகை ஆரத்தைக் கையில் ஏந்தி நின்றாள் அவள் பன்னிற வண்ணப் பூக்கள் போல் ! கண்ணீர்ச் சுவைத் துளிகள் சொட்டும் மனச் சோர்வுக் கனிகளின் கனத்த பாரத்தை மனத்தில் நான் சுமக்கிறேன் !   அந்த அழகி திடீரென வந்து “அருகில் வா ! நாம் மாற்றிக் கொள்வோம் !” என்பாள் அவள் முகத்தை உற்று நோக்கி அதிர்வடைந்தேன் ! அவள் […]