நம்பிக்கை ஒளி! (6)

This entry is part 10 of 33 in the series 11 நவம்பர் 2012

  காலம் ஏதோ ஒரு கணக்கு போட்டுக் கொண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. எந்த் கணினி கொண்டு இந்த அளவீடூகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று தெரிந்தால் கூட ஏதேனும் தப்பிக்கும் வழியைக் காணலாம். நல்லது நடக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்குத் தகுந்தாற்போல் தாம் சந்திக்ககூடிய அத்துனை பேரும் நல்லிதயம் கொண்டவர்களாக ய்தார்த்தமாக அமைந்து விடுகிறார்கள். அதுவே தம் கோரத் தாண்டவத்தை ஆடிப்பார்க்க முடிவு செய்துவிட்டால் திரும்பிய புறமெல்லாம் அடிமேல் அடி விழத்தான் செய்கிறது. தப்பிக்கும் […]

நைலான் கயிறு…!…?

This entry is part 9 of 33 in the series 11 நவம்பர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி பெங்களூரு விஜயமஹாலில் இன்று ரவியின் திருமண ரிசப்ஷன். போன ஞாயிற்றுக்கிழமை மதுரையில் விமரிசையாக திருமணம் நடந்து முடிந்து விட்டாலும், தன்னுடன் ஆபீஸில் வேலை பார்ப்பவர்களுக்காக பெங்களுரில் இன்று ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தான் ரவி. ஊரிலிருந்து ரவியின் அப்பா, அம்மாவும், மதுரையிலிருந்து ரமாவின் அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் வந்திருந்தார்கள். ரவி சென்னை ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் முடித்தவன். படிப்பு முடிந்தவுடன் பெங்களூருவில் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்து கைநிறைய சம்பாதிக்கிறான். ரமா, மதுரையில் […]

வீடு

This entry is part 8 of 33 in the series 11 நவம்பர் 2012

            – சுகந்தி சுப்ரமணியன்       எப்படி இது நேர்ந்தது? எல்லோருடனும் அன்புடன் பழகிய பின்  ஏன் இந்த  விரிசல்? நினைக்க நினைக்க  எனக்குள் வேதனை பொங்கியது. நேற்றுவரை பேசிவந்த மணியக்கா கூட இன்று மெளனமாய் முகத்தைத் திருப்பியபடி போகிறாள். எனக்குள் குழப்பமாக இருந்தது. நான் எதுவும் தவ்று செய்யவில்லையே எல்லோரைப் போலவும்தான் நான் இருக்கிறேன். நினைத்து நினைத்து முடிவே கிடைக்கவில்லை.       ராணி வந்தாள். அவசரமாக வந்து ‘இன்னிக்கு உங்க […]

கண்காணிப்பு

This entry is part 5 of 33 in the series 11 நவம்பர் 2012

நான் கடிகாரம் கட்டுவதில்லை. அதனால் ‘டீம் லீடர்’ அறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக என் ‘மொபைலில்’ நேரத்தைப் பார்த்தேன். மணிஏழடித்திருந்தது.அவன் நாளை காலை பார்க்கலாம் விவாதிக்கலாம் என்று குறிப்பிட்ட வேலைகளை நான் முடித்துவிட்டுக் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரமேனும் ஆகும் வேலை நான் எதிர்பார்க்கிற வேகத்தில் முன்னேறுகிற பட்சத்தில். எங்கள் வேலை ஒரு நிதி நிறுவனத்துக்குத் தேவையான மென்பொருளைத் தயார் செய்வது. அரசு வங்கிகளின் வேலையை ஒப்பந்த அடிப்படையில் செய்யும் வாய்ப்பு அவர்களுக்குக் […]

பூனை மகாத்மியம்

This entry is part 3 of 33 in the series 11 நவம்பர் 2012

ஒரு மழை நாள் ராத்திரில , என்னோட கம்ப்யூட்டர் ரூமுக்குப்பின்னாலருந்த பால்கனிலருந்து பழைய பாத்திரங்கள்லாம் போட்டு வெக்கிறதுக்காக சும்மா கிடந்த அலமாரில ஏதோ விழற மாதிரி சத்தம் கேட்டது .ராத்திரி மழைல மேல் வீட்லருந்து எதாவது பூந்தொட்டி ,இல்ல செடி கிடி விழுந்துருக்கும்னு நினைச்சு சும்மா இருந்துட்டேன் எழுந்து பாக்காம. காலைல எழுந்து பாத்தா ஒரு பெரிய பூனை கொஞ்சம் வயிறு உப்பலா , கதவத்திறந்த என்னையே கொஞ்சம் பாவமா பாத்துது.சரி ஏதோ மழைக்கி ஒதுங்கிருக்கும் இருந்துட்டுப்போகட்டும்னு […]

அக்னிப்பிரவேசம் -9

This entry is part 33 of 33 in the series 11 நவம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “அம்மா! யாரோ வந்திருக்காங்க.” சொன்னான் சிம்மாசலம். படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து நிமிர்ந்து பார்த்தாள் நிர்மலா. நேரம் இரவு ஒன்பது மணி அடிக்கவிருந்தது. “இப்பொழுதா? அய்யா இல்லை என்று சொல்லு.” “சொன்னேன் அம்மா. உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார்” என்றான். நிர்மலா சலிப்புடன் எழுந்து வெளியே வந்தாள். சோபாவில் உட்கார்ந்திருந்த அவனை எங்கேயோ பார்த்த நினைவு. “நான்தான் பரமஹம்சா. என்னைத் தெயரியவில்லையா?” கேட்டான் அவன் […]

வாழ நினைத்தால்… வீழலாம்…!

This entry is part 26 of 31 in the series 4 நவம்பர் 2012

  (இது ஓர் உண்மைச் சம்பவம்)   காலேஜ் படிப்புக்காக ஊரைவிட்டு  விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்கும் வைரவன் தனது பரிச்சை ரிசல்டைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தான். தூரத்தில் டீக்கடையிலிருந்து “வாழ நினைத்தால் வாழலாம்…வழியா இல்லை பூமியில் ” என்ற பாட்டுக்  கேட்கிறது…இவனும் அந்தப் பாடலை  முணுமுணுத்தபடியே மகிழ்ச்சியோடு நடக்கிறான். மனதுக்குள் கண்டிப்பா “பாஸ் ஆயிடுவேன்…”என்றும் ஒருதரம் சொல்லிக் கொண்டான். பல்கலைக்கழகத்தின்  டீன் அலுவலகம் முன்பு என்றுமில்லாமல் ஏகப்பட்ட மாணவர்கள் கூட்டம். இன்னும் சற்று நேரத்தில் ஆறாவது செமெஸ்டர் […]

“சபாஷ், பூக்குட்டி…!”

This entry is part 23 of 31 in the series 4 நவம்பர் 2012

      கதை சொல்லு…கதை சொல்லு…என்று அரித்தெடுத்த பேத்தி அஸ்வினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ராமகிருஷ்ணன்.     அன்று ஞாயிற்றுக் கிழமை. அவரைப் பொறுத்தவரை அன்று மட்டும்தான் பேத்தியோடு பேச முடியும், விளையாட முடியும். சனிக்கிழமை விடுமுறை நாளில் கூட ஆபீஸ் சென்று விடுவார் அவர். அதென்னவோ அப்படிப் போனால்தான் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது அவருக்கு.     வாரா வாரம் ஏதேனும் கதைகளைத் தயார் செய்து விடுவார்தான். அல்லது நூலகத்திலிருந்து எடுத்து வரும் புத்தகத்திலிருந்து ஒன்றிரண்டு […]

நம்பிக்கை ஒளி! (5)

This entry is part 21 of 31 in the series 4 நவம்பர் 2012

  பணிக்குச் செல்லும் பரபரப்பு காலை நேரத்தில் வாடிக்கையான காட்சிதான் என்றாலும், வீட்டிலுள்ள அனைவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் டென்சன் தான். அதுவும் ஒரு குளியலறை, ஒரு கழிவறை என்று இருக்கும் வீடுகளில் கேட்கவே வேண்டாம். நீ முந்தி, நான் முந்தி என்று ஒரே கூத்துதான்.   சாவதானமாக உட்கார்ந்து துண்டு முடிந்துகொண்டு, காலையில் எப்.எம் ரேடியோவில் ஆரம்பித்து பின்பு டீவி சீரியல் ஒன்று பாக்கியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த பரமுவா […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -1

This entry is part 13 of 31 in the series 4 நவம்பர் 2012

    ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் […]