Sand And Foam – Khalil Gibran
பவள சங்கரி
மேதையென்பவன், ராபினின் மிதமானதொரு வசந்தகால துவக்கத்தின் கீதமானவன்.
மோசமான இறகு படைத்ததோர் ஆன்மாவாயினும், அதுவும்கூட உடற்தேவையினின்று தப்பிக்க இயலாது.
பித்தன் என்பதாலேயே அவன் உம்மையும், எம்மையும் விடக் குறைந்த தகுதியுடனான இசைக்கலைஞன் அல்லன்; ஒருகால் அவன் வாசிக்கிற அந்த இசைக்கருவி மட்டும் சிறிது ராகம் தப்பியதாக இருக்கலாம்.
இருதயத்தின் அமைதியினூடே உறைந்திருக்கும், தம் குழவியின் இதழ்களின்மீது இசைக்கும், ஒரு தாயின் பாடல் அது.
நிறைவேறாத ஆசைகளென்பதே இல்லை.
எம்முடைய மற்றொரு சுயத்துடன் முழுமையாக இசைந்ததேயில்லை யான். அப்பருப்பொருளின் மெய்ம்மை நமமிடையே இருப்பதாகத் தோன்றுகிறது.
உமது மற்றைய சுயம் எஞ்ஞான்றும்
உமக்காக வருந்தக்கூடியது. ஆயினும்
உம்முடைய மற்றொரு சுயம் சோகத்தின் மீதே வளர்கிறது.
அதனால் அனைத்தும் நலமே.
எவருடைய ஆன்மாக்கள் உறங்கிக் கொண்டிருக்கிறதோ மற்றும் எவருடைய உடல் நாதமற்றுப் போகிறதோ அவர்தம் மனதில் பொத்திவைக்கப்படும் ஆன்மாக்களுக்கும், உடலுக்கும் போராட்டம் என்பதே இல்லை.
சௌந்தர்யத்திற்குக் குருடான கண்களைக் கொண்டவராயினும், வாழ்வதனின் இருதயத்தினை நீவிர் அடையுங்கால், அனைத்துப் பொருட்களிலும் சோபனத்தையேக் காண முடியும் உம்மால்.
தகைமையைத் தழுவவே உயிர் சுமக்கிறோம் நாம். மற்றவையனைத்துமோர் காத்திருப்பின் வடிவமே.
விதையை விதைத்தால் அம்புவி
உமக்கோர் மலரைக் கொடுக்கும்.
உமது சொப்பனத்தின் எல்லை,
வானமாக இருப்பின் அது
உம்முடைய அன்புக்குரியவரை
உம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.
உம் பிறப்பின் அதே தினத்திலேயே அந்த தேவதா மரணமடைந்தது.
தற்போது ஓர் தேவதையைச் சந்திப்பதற்காக வேண்டி நரகத்தினூடே செல்ல வேண்டிய தேவையில்லை உமக்கு.
நிதத்துருவின் இதயம் கவர்ந்த புனையிழைகள் பலருண்டு; வெகு சிலரே அதனைச் சொந்தமாக்கிக் கொள்ள இயலும்.நீவிர் உடமையாக்கிக் கொள்ள நேர்ந்தால், அதனைக் கோருதல் கூடாது.
ஓர் ஆடவரின் கரம் ஓர் மங்கையவளின் கரமதைத் தீண்டும் அதேநேரம் அவர்களிருவரும் நித்தியத்தின் இதயத்தையேத் தீண்டுமின்பம் பெறுகின்றனர்.
காதலர்களுக்கிடையேயான திரைதான் காதல் என்பது.
ஒவ்வொரு மனிசனும் இருவிதமான மகளிரைக் காதலிக்கிறான்; முதலாமது, தமது கற்பனையில் உருவான ஒன்று; அடுத்தொன்று இன்னும் உருவாகவில்லை.
பெண்டிரை, அவர்தம் சிறிய தவறுகளுக்காக மன்னிக்காத ஆடவர் ஒருபோதும் தம்முடைய நற்பண்புகளை அனுபவிக்க இயலாது.
தம்மையே அனுதினமும் புதுப்பித்துக் கொள்ளாத காதல் அதையே வழமையாக்கி, அடிமைத் தளையில் சிக்குண்டுவிடுகிறது.
காதலர்கள் தம்மை ஒருவரையொருவர் அணைத்துக் கொள்வதைக் காட்டிலும் தம்மிடையே உள்ள அந்த ஒன்றையே அணைத்துக் கொள்கின்றனர்.
காதலும், ஐயமும் என்றுமே பேச்சு வார்த்தைகளுக்குகந்ததாக இருப்பதில்லை.
ஒளியின் பக்கத்தின் மீது,
ஒளிக்கரங்களால் வரையப்பட்ட
ஒளியின் வார்த்தையே, தகுளம் என்பது.
தோழமை என்பது எஞ்ஞான்றும் இனியதொரு பொறுப்பேயன்றி, வாய்ப்பன்று.
அனைத்துச் சூழநிலைகளிலும் உம்முடைய நண்பனை நீவிர் புரிந்து கொள்ளாவிடில் நீவிர் ஒருபோதும் அவரைப் புரிந்து கொள்ளப்போவதில்லை.
உம்முடைய மிக உன்னதமான கதிரியக்க ஆடையே, அடுத்தவரின் நெய்தலின் மூலம் பெற்றதேயன்றோ;உம்முடைய இன்சுவை உணவு என்பதும், இன்னொருவரின் மேசையின் மீது நீவிர் உண்ணக்கூடியதேயன்றோ;
உம்முடைய மிக சுகமானதோர் பஞ்சணையும் அடுத்தொருவரின் இல்லத்தில்தானே உள்ளது.
இப்போது சொல்லுங்கள், அடுத்தவரிடமிருந்து உம்மை நீவிர் எங்கனம் பிரித்தெடுக்கப்போகிறீர்?
உம்முடைய மனம் எண்களினுள்ளேயும் மற்றும் எம் இதயமோ பனிமூட்டத்தினுள்ளேயும் வாழ்வைச் சந்திக்கும்வரை உம்முடைய மனமும், எம்முடைய இருதயமும் ஒருபோதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.
ஏழு வார்த்தைகளாக அம்மொழியைக் குறைத்தாழொழிய நாம்
ஒருவரையொருவர் ஒருபோதும் புரிந்து கொள்ளப்போவதில்லை.
எம் இதயமதை பிளந்தாழொழிய, எங்கனம் அது திறக்கப்படப்போகிறது?
பெருந்துன்பமோ அன்றி பேரின்பமோ மட்டுமே உமது உண்மையின் உரைகல்லாக இருக்க இயலும்.
கதிரொளியில் நிர்வாண நடனம் ஆடியோ அல்லது உம் சிலுவையைச்
சுமப்பதால் மட்டுமே நீவிர் உண்மை விளம்பியாகக்கூடும்.
தொடரும்
SAND AND FOAM (6)
Genius is but a robin’s song at the beginning of a slow spring.
Even the most winged spirit cannot escape physical necessity.
A madman is not less a musician than you or myself; only the instrument on which he plays is a little out of tune.
The song that lies silent in the heart of a mother sings upon the lips of her child.
No longing remains unfulfilled.
I have never agreed with my other self wholly. The truth of the matter seems to lie between us.
Your other self is always sorry for you. But your other self grows on sorrow; so all is well.
There is no struggle of soul and body save in the minds of those whose souls are asleep and whose bodies are out of tune.
When you reach the heart of life you shall find beauty in all things, even in the eyes that are blind to beauty.
We live only to discover beauty. All else is a form of waiting.
Sow a seed and the earth will yield you a flower. Dream your dream to the sky and it will bring you your beloved.
The devil died the very day you were born.
Now you do not have to go through hell to meet an angel.
Many a woman borrows a man’s heart; very few could possess it.
If you would possess you must not claim.
When a man’s hand touches the hand of a woman they both touch the heart of eternity.
Love is the veil between lover and lover.
Every man loves two women; the one is the creation of his imagination, and the other is not yet born.
Men who do not forgive women their little faults will never enjoy their great virtues.
Love that does not renew itself every day becomes a habit and in turn a slavery.
Lovers embrace that which is between them rather than each other.
Love and doubt have never been on speaking terms.
Love is a word of light, written by a hand of light, upon a page of light.
Friendship is always a sweet responsibility, never an opportunity.
If you do not understand your friend under all conditions you will never understand him.
Your most radiant garment is of the other person’s weaving;
You most savory meal is that which you eat at the other person’s table;
Your most comfortable bed is in the other person’s house.
Now tell me, how can you separate yourself from the other person?
Your mind and my heart will never agree until your mind ceases to live in numbers and my heart in the mist.
We shall never understand one another until we reduce the language to seven words.
HOW SHALL MY heart be unsealed unless it be broken?
Only great sorrow or great joy can reveal your truth.
If you would be revealed you must either dance naked in the sun, or carry your cross.
.To Be Contd………
- கட்டாயக் காதலும் கற்பழிப்பும்!
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -4 பாகம் -10 [முடிவுக் காட்சி]
- என் பார்வையில் தமிழ் சினிமா
- STOMA presented by Agni Koothu (Theatre of Fire) & The Substation
- சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
- அனில் கிருஷ்ணனின் “ கடந்த காலத்தின் அழைப்பு “ ( a call from the past )
- வால்ட்விட்மன்வசனகவிதை -5 என் பாடத் துவக்கம்
- மனத்தில் அடையாத ஒரு காகம்
- இரவு விழித்திருக்கும் வீடு
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….. 11. கல்கி – விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’
- வெளி ரங்கராஜனின் ” ஊழிக் கூத்து “
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 2
- நதி வெள்ளத்தின் துளி!
- வலி
- இலங்கையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 47 இனிமைத் திருவடிவம்
- அக்னிப்பிரவேசம்-17
- ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை – 4
- தவம்
- “தாயைக்காக்க தனயன்களே புறப்படுங்கள் ,தமிழைக்காக்க தமிழர்களே புறப்படுங்கள்………!”
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வ காலத்துப் பூமத்திய ரேகை ஒரு சமயம் வடதுருவத்துக்கு அருகில் இருந்ததைக் காட்ட பூர்வப் படிவுகள் [Fossils] ஆதாரம்
- அம்முவின் தூக்கம்
- மகாலட்சுமி சுவாமிநாதன்
- தமிழ் ஆவண மாநாடு 2013
- அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீட்டு விழா
- எரிதழல் கொண்டு வா!
- பெண்ணே !
- இரு கவரிமான்கள் –
- திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு
- மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)
- பத்து நாட்கள்
- காரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு
- அற்புதங்கள் உடைப்பு: ஏன் புனித நீரை சாக்கடையிலிருந்து கண்டுபிடித்தேன்?