சொல்லத்தான் நினைக்கிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 3 of 15 in the series 18 மார்ச் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

சொல்லத்தான் நினைக்கிறேன்

மண்டைக் குள்ளே நிரம்பி யுள்ளதை !

ஆயினும் என்னருகில்

நீயிங்கு உள்ள போது, சொல்ல வரும்

வார்த்தைகள் எல்லாம் எந்தன்

வாய் நழுவிச் செல்லும் !

உன்னை நான் நெருங்கும் போது,

என்னைத் தாழ்ச்சி செய்துன் ,

திருவிளை யாடல் துவங்கும் !

பொறுத்துக் கொள்வேன்.

அடுத்த முறை வரும் போது,

கொடுப்பேன் உனக்கோர் பரிசு !

உன்மேல் பரிவின்றி நான்

நடமாடி வந்தால் ,

நான் தான் அதற்கு காரணம்

என் மனமில்லை !

குழப்பம் உண்டாக்குது அது !

சொல்லத்தான் நினைக்கிறேன் !

என்னை நீ தவிர்க்கிறாய்

என்றெண்ணித் தவிக்கிறேன் !

ஏனென அறிந்திலேன் !

கவலை இல்லை எனக்கதற்கு !

காத்தி ருப்பேன் நான் உனக்கு

நாளை முதல் நிரந்தரமாய் !

நேரம் உண்டு ! சில சமயம்

நினைத்துக் கொள்வேன் உனை நன்றாய்

அடுத்த முறை என் மனது

விடுக்க வேண்டும் தன் கருத்தை !

புரியும் உனக்கு அத்தருணம் !

சொல்லத்தான் நினைக்கிறேன் !

என்னை நீ தவிர்க்கிறா யென

எண்ணிக் கொண்டு தவிக்கிறேன் !

ஏனென அறிந்திலேன் !

கவலை இல்லை எனக் கதற்கு !

காத்தி ருப்பேன் நான் உனக்கு !

நேரம் உள்ளது ! இனி எனக்கு

நேரம் உள்ளது !

+++++++++++

Series Navigationமனிதன் என்பவன் தெய்வமாகலாம்….சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் :
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *