இடைவெளி 

This entry is part 10 of 12 in the series 14 மே 2023

ஸிந்துஜா 

திராஜ் பரீட்சை முடிந்து ஒரு வார லீவில் ஊருக்கு வந்திருந்தான். வந்தது முதல் வீட்டில் கால் தரிக்கவில்லை என்று  கனகவல்லி  

கணவனிடம் புகார் செய்தாள். முதல் நாள் ‘பிரென்ட்சோட ஓட்டல்ல சாப்பிட்டு விட்டு வந்தேன்’ என்று அவனது அம்மாவின் வயிற்றெ

ரிச்சலைக் கொட்டிக் கொண்டான். அதனால் அவன் ஊருக்குத் திரும்பிப் போகும் வரை எல்லா வேளையும் வீட்டில்தான் சாப்பிட வேண்டும் என்று அவனது அப்பா சிவகுரு உத்திரவு போட்டு விட்டார். காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு கிரிக்கெட் பேட்டை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் என்றால் மதியம் இரண்டு அல்லது மூன்று மணிக்குத்தான் வருவான்.

அவன் ஊரிலிருந்து வந்த மறுநாள் காலையில் வெளியே கிளம்பும் போது செல்லத்தாயி வீட்டுக்குள் வந்தாள். அவனுக்கு ஒரு வயசு ஆகும் போது வீட்டு வேலைக்காரியாக வந்தவள். 

“இது என்ன சோளக்காட்டு பொம்மையா ஆயிருச்சு பிள்ளே” என்றுஅவனைப்

பார்த்து விட்டு அம்மாவிடம் சொன்னாள்.

“ஆஸ்டல் சாப்பாடுன்னா வேறே எப்படி இருக்கும்? ஒரு பாலு கிடையாது, வெண்ணெ கிடையாது. சாம்பார்லயே பருப்புக்கு பதிலா  மொளகாயை அரைச்சி  வென்னியையே ஊத்திப் போடுறான், சிவப்பு வென்னிக்குப் பதிலா வெள்ளைப் பச்சத் தண்ணியா இருந்தா அதுக்குப் பேரு மோராம். ஒண்ணும் கேக்காதே” என்றாள் கனகவல்லி.     

“நா படிக்கப் போயிருக்கேனா இல்லே கலியாண விருந்து சாப்பிடறதுக்கா?” என்று அவன் அம்மாவைக் கேட்டான்.

செல்லத்தாயி “நல்லா இருக்கு சாமி. காலேசு படிப்பு எல்லாம் எதுக்குப் 

படிக்கிறது? நல்லா சம்பாரிச்சு நல்லா சாப்பிடத்தான?” என்று அவளுக்குத் தெரிந்த பொருளாதாரத்தைப் போட்டு உடைத்தாள்!”  பிறகுகனகவல்லியைப் 

பார்த்து “அம்மா, நாளக்கி ஊருக்குப்போறேன். எங்க அண்ணாரு எங்க வீட்ட வித்து அண்ணந் தங்கச்சிங்களுக்கு பங்கு பிரிச்சு விடறாங்க. நா போயிட்டு வாரதுக்கு மூணு நாலு நாளு ஆயிரும். வேலைக்கு தேவானய அனுப்புறேன்” என்றாள்.  

மறுநாள் அவன் வழக்கம் போல மதியம் மூணு மணிக்கு வீட்டுக்குத் திரும்பினான். வழக்கம் போலக் கையில் வைத்திருந்த பேட்டை ஹாலில் தூக்கியெறிந்து விட்டு சோபாவில் சாய்ந்தான். பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை உடம்பு வாங்கி வைத்திருந்த வெய்யிலின் சூடு கண்களை  அசத்திற்று. ஐந்து நிமிஷம் கண் அயர்ந்திருப்பான்.

“யாரு இங்கே இப்பிடிப் போட்டது?” என்ற அதட்டலான குரல் கேட்டு விழிப்பு வந்து விட்டது..அவன் கண்களைக் கசக்கியபடி எழுந்து உட்கார்ந்தான். அவள் கையில் வைத்திருந்த விளக்குமாறின் நுனி கிரிக்கெட் பேட்டைத் தொட்டுக் கொண்டிருந்தது. யார் இவள் என்று கேள்வி எழுந்து உடனடியாக செல்லத்தாயின் பெண் என்று முந்தின நாள் கேட்டது நினைவுக்கு வந்தது. அவளுக்குப் பதினெட்டு பத்தொன்பது வயது இருக்கலாம். வேலை செய்து உறுதியாக நின்ற உடல். காந்தலின்

 ருசியை உதவிக்குக்  கூப்பிடும் நிறம். 

“என்னோடதுதாங்க அம்மா” என்று குரலில் பவ்யத்தை ஏற்றி அவன் அவளைப் பார்த்தான்.

அந்தக் கிண்டல் பொறுக்க முடியாமல் அவள் குபுக்கென்று சிரித்தாள். வரிசையான பற்கள். 

“நீங்களே இப்பிடிக் கண்டபடி வீசிப் போட்டா அப்புறம் மத்தவங்களும்  

அதையே செய்வாங்களே” என்றபடி குனிந்து பேட்டை எடுத்து உள்ளே இருந்த அவனது அறையில் வைக்கத்  திரும்பினாள். 

“இந்த வீட்டிலே மத்தவங்கன்னா எங்கப்பாவும் அம்மாவும்தான்” என்றான் அவன். அவள் மறுபடியும் அடக்க மாட்டாது சிரித்தாள். 

“ஐயோ சாமி, தெரியாம சொல்லிட்டேன்” என்றாள். 

“அது சரி, தெரிஞ்சு வேறே எங்கப்பா அம்மாவைத் திட்டுவியா?” என்று அவன் சிரித்தான்.

உள்ளேயிருந்து வந்த கனகவல்லி “என்னடா அதைப் போட்டு இப்பிடி வம்புக்கு இழுக்குறே” என்று செல்லமாக அவனைத் திட்டினாள். “போயி உன் ரூமைப் பாரு. கண்ணாடி மாதிரி எப்பிடிச் சுத்தம் பண்ணி வச்சிருக்குன்னு. செல்லத்தாயி வர வரைக்கும் நீ உன் ரூம்லே சாமானையெல்லாம் கடா முடான்னு வீசிப் போட்ட, தேவானைக்குக் கோவம் வந்திரும்” என்று சிரித்தாள். தேவானை வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டு ஹாலைப் பெருக்க ஆரம்பித்தாள்.

“தெனமும் இந்த வேளைக்கு வந்துதான் பெருக்கி சுத்தம் பண்ணுமா?” என்று அவன் தாயிடம் கேட்டான்.

“இல்லே. இன்னிக்கிக் காலேலே ஏதோ ரேசன் கடைக்குப் போகணும்னு 

மதியத்துக்கு மேலே வந்திருக்கு. இல்லாட்டி காலேலே எட்டு எட்டரைக்கு வந்திரும்” என்றாள் கனகவல்லி. 

மறுநாள் காலையில் அவன் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தேவானை வந்தாள் .அவனைப் பார்த்ததும் “குட் மானிங் சார்” என்றாள்.

அவன் பதிலுக்குக் ” குட் மானிங் மேடம்” என்று அவள் உச்சரிப்பிலேயே

பதிலளித்தான்.

அவனுடன் கூட உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிவகுரு ” ஏண்டா அதைப் போட்டுப் படுத்தி எடுக்குறே?” என்று சிரித்தார். 

“தாவணி பாவாடையெல்லாம் இப்ப யாரு போடறாங்க?” என்றான் எதிராஜ்.. தேவானை அவனை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தாள்.

“ஆனா இது உனக்கு அழகாயிருக்கு” என்றான் அவன். அவள்வெட்கப்பட்டுக் 

கொண்டே உள்ளே விரைந்தாள்.

“என்னடா இப்பிடிச் சொல்லிட்டே?” என்றார் சிவகுரு..

அவன் அவரைப் பார்த்தான். 

“வேறே யாராச்சும்  கேட்டா என்ன சொல்லுவாங்க தெரியுமா?”

“நான் சொன்னதை வேறே யாரு கேட்டாங்க? நீங்கதான் கேட்டீங்க.” 

சிவகுரு திகைத்தார். ‘நீங்க என்ன சொல்றீங்க?’ என்பதை அவன் அவரிடம் நேரடியாகக் கேட்கவில்லை. ஆனால் அந்தக் கேள்வி தொக்கி நின்றது. அவர் சங்கடமாக உணர்ந்தார். நல்ல வேளையாக அவர் அப்போது சாப்பிட்டு முடித்து விட்டதால் தப்பித்தோம் என்று எழுந்து கைகழுவச் சென்றார். தன் மனைவியிடம்  இந்தப் பயலைக் கொஞ்சம் எச்சரிக்கையாக இரு என்று சொல்ல  வைக்க வேண்டும்.

அரை மணி கழித்து அவர் தனது அலுவலகத்துக்குக் கிளம்பினார். ஹால் சோபாவில் உட்கார்ந்து எதிராஜ் போனில் பேசிக் கொண்டிருந்தான். வழக்கமாக இந்த நேரத்துக்கு அவன் பேட்டைத் தூக்கிக் கொண்டுவெளியே

போயிருப்பான். இன்று என்ன ஆயிற்று? என்று அவர் ஆச்சரியப்பட்டார்.

அவர் அவனை நெருங்கிய போது அவன் பேச்சு முடிந்து போனைக் கீழே வைத்துக் கொண்டிருந்தான்.

“என்னடா, இன்னிக்கிக் கிரிக்கெட் ஆடக் கிளம்பலையா?” 

“அதான் போன் வந்திச்சு. மணிவண்ணனுக்கு உடம்பு சரியில்லையாம். நாளைக்குப் பாக்கலாம்னு சொல்லிட்டான்” என்றான் எதிராஜ்.

மணிவண்ணன்தான் கேப்டன்.

“சரி அப்ப இன்னிக்கி வெய்யில்லே வேகறதுக்கு வேறே என்ன புரோகிராம் வச்சிருக்கே?” என்று சிரித்தார்,

“இன்னிக்கி ஃபுல் ரெஸ்ட்” என்று அவனும் சிரித்தான். 

அப்போது வீட்டுக்குள் தேவானை வந்தாள். எதிராஜைப் பார்த்து “நீங்க இன்னிக்கி விளையாடப் போகலியா?” தினமும் போவீங்களாமே? என்று கேட்டாள்.

“ஒனக்கு எப்பிடித் தெரியும்?” என்று சிவகுரு கேட்டார்.

“டி வி லே சொன்னதை நீயும் கேட்டிட்டியா?” என்று எதிராஜ் அவளைச் சீண்டினான்.

“அம்மாதான் சொன்னாங்க?” என்றாள்.

எதிராஜ் தந்தையிடம் “நம்ம வீட்டு டி வி நியூஸ்!” என்றான்.

சிவகுரு  வாசலை நோக்கிச் சென்றார். 

அப்போது “ஒங்களுக்கு ஒடம்பு சரியில்லையா? என்னமோ போல இருக்கீங்களே?” என்று தேவானை எதிராஜை விசாரிக்கும் குரல் கேட்டது.

வாசலில் அலுவலகக் கார் காத்துக் கொண்டிருந்தது. அவர் காரில் ஏறிக் கொண்டதும் கிளம்பிற்று. தேவானை எதிராஜிடம் கேட்டது அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவனுடன் பேச வேண்டும் என்று அவள் கேள்வி கேட்டதாக நினைத்தார். இந்தக் காலத்தில் பையன்களையும் சரி பெண்களையும் சரி, புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கிறது; நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது 

சேஷாத்ரிபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே இருந்த சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிந்ததால் காரோட்டி வண்டியை நிறுத்தினான். அவர் பார்வை வெளியில் நடமாடிய மனிதர்களை நோக்கிச் சென்றது. திடீரென்று அவர் கண்ட காட்சி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவருக்கு முன்னே வலது பக்கத்தில் ஒரு ஸ்கூட்டரின் மேல் மணிவண்ணன் உட்கார்ந்திருந்தான். கைப்பேசியைக் காதருகில் வைத்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். தலைவலி என்றவன் இப்படி ஊர் சுற்றுகிறானே என்று நினைத்தார். திடீரென்று அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. மணிவண்ணனுக்குத் தலைவலி என்று எதிராஜ்தானே சொன்னான்? நண்பர்களுக்குள் எதற்குப் பொய்யும் புரட்டும்? மணிவண்ணன் எதற்காகப் பொய் சொல்ல வேண்டும்? தனக்கு வேறு வேலை இருப்பதால் ஆட்டத்தை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று நேரடியாகச் சொல்லி யிருக்கலாமே! அவருக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. சட்டென்று அவர் சந்தேகம் பிள்ளையின் மேல் பாய்ந்தது. எதிராஜ்தான் பொய் சொன்னானா? எதற்காக? ஒரு வேளை , ஒரு வேளை… அவர்  தன் சிந்தனை செல்லும் வழியில் செல்ல விரும்பாமல் தனக்குப் பக்கத்திலிருந்த எகனாமிக் டைம்ஸை எடுத்தார். ஆனால் பார்வை வரிகளின் மேல் பதிந்ததே தவிர மனம் நிலை கொள்ளாமல் ஆட்டம் போட்டது.

அன்று மாலை அவர் வீட்டுக்கு வந்த போது எதிராஜ் அப்போதுதான் வெளியே சென்றிருப்பதாக அவர் மனைவி கூறினாள்.

“பாவம். பகல் பூரா படுத்துக் கெடந்தான். இப்பதான் கொஞ்சம் வெளியே காத்தாடப் போயிட்டு வரேன்னு போனான்.”

“எதுக்குப் படுக்கை? என்ன ஆச்சு அவனுக்கு?” என்று அவர் பதறினார்.

“சரியாத்தான் உங்களைப் படிச்சு வச்சிருக்கான் உங்க மகன்!” என்று கனகவல்லி சிரித்தாள். “ராத்திரியே அவனுக்குத் தலைவலியாம். அதை உங்க கிட்டே சொன்னா இதே மாதிரி பதறியடிச்சு ‘வா இப்பவே ஆஸ்பத்திரிக்குப் போக்லாம்பீங்க, நா வேலைக்கு இன்னிக்குப் போகலேம்பீங்கன்னுதான்உங்க கிட்டே சொல்லலே’ன்னான். நீங்க ‘ஏண்டா விளையாடப் போகலேன்னு கேட்டப்போ பிரெண்டு மேலே பழியைப் போட்டேன்’னான்.” 

சிவகுருவுக்கு ஒரு கணம் வெட்கமாக இருந்தது. இருந்தாலும் அவர் கனகவல்லியிடம் “இந்த செல்லத்தாயி எப்ப வேலைக்கு வருதாம்?” என்று கேட்டார்.

“இது என்ன புதுக் கவலை ஒங்களுக்கு?” என்றாள் கனகவல்லி.

“அவ மக சின்னப் பொண்ணுதானே? இவனும் வாலிபப் பய. எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருந்தா நல்லதுதானே?”

அவள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“தப்பா ஒண்ணும் நடந்திடலே. நடக்கவும் நடக்காதுன்னு நம்ம பிள்ளை மேலே நமக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா காலம் கெடக்கிற கெடப்பிலே நாம கொஞ்சம் சாக்கிரதையா இருந்தா நல்லதுதானே?”

பிள்ளை மீது இருக்கும் நம்பிக்கையால் அவளுக்கு அவர் சொல்வது சரியென்று படவில்லை. ஆனால் அவரது அனுபவமும் வெளியுலகப் பழக்கமும் அவர் சொல்வதை அவள் மதிப்பது நல்லது என்று அவளுக்குத் தோன்றியது.

“நாமளா அவன் கிட்டே  போய் ஒண்ணும் சொல்ல வேண்டாம். நானும் இவன் வயசிலே இருக்குறப்போ நாங்க குடியிருந்த வீட்டுக்கு எதிர் வீட்டிலே என்  கூடப் படிச்ச பொண்ணு இருந்திச்சு. ஜெயலச்சுமின்னு. பணக்கார வீட்டுப் பொண்ணு. ஊட்டமா வளந்து அழகா இருக்கும். நல்லாப்  படிக்கும்.அவங்க வீட்டு வேலையெல்லாம் செய்யிற பையனோட ஒரு நாள் ஓடிப் போயிருச்சு.  ராமதாசுன்னு அவன் பேரு. அன்னிக்கு 

எங்கப்பா என்கிட்டே சொன்னாரு. ஒலகம் கெட்டுப் போச்சுன்னு கதறி என்னா பிரயோஜனம். நாம படிக்கிறது, பாக்கறது, கேக்குறது எல்லாத்திலையும் ஒட்டிக்கிட்டு இருக்குற செத்தைய தட்டி விட்டுக் கிட்டேதான் எல்லாத்தையும் கத்துக்கணும் . அப்பா அம்மா பிள்ளைங்

களைக் கவனிக்கிறதுங்கிறது இந்த செத்தைய தட்டுன்னு கத்துக் குடுக்கறதுதான்னாரு. ஆனா இப்பதான் ஒரு தலைமொறைக்கு அப்புறம் 

எப்படியெல்லாமோ ஒலகமே மாறிப் போயிருச்சே. கொழந்தைங்க ஒண்ணு ரொம்பக் கெட்டிக்காரங்களா இருக்காங்க. இல்லேன்னா செத்தைய தட்டிவிட முடியாம அதோட போய்  ஒட்டிக்கிறாங்க” என்று பெருமூச்சு விட்டார்.   

                                            ^ * *

றுநாள் அவன் காலையில் விளையாட்டுப் போய்விட்டு மதியம் திரும்பிய போது தேவானை சமையலறையில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். அவன் சாப்பிட்டு விட்டு ஹாலில் உட்கார்ந்து டி.வி.யைப் போட்டான். முதல் நாள் நடந்த ஐ பி எல் மேட்ச் ஹைலைட்ஸ் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். தோனி ஒரு சிக்ஸர் அடித்ததைப் பார்த்து அவன் “வாவ்!” என்ற போது தேவானை “இங்க கூட்டிரட்டுமா?” என்று கேட்டபடி வந்தாள்.

அவன் டி வியின் சத்தத்தைக் குறைத்து விட்டு அவளைப் பார்த்தான். 

“ஓ தோனியா?”என்றாள் கண்களை அகல விரித்தபடி.

“அட, என்னமோ உனக்கு ரொம்பத் தெரிஞ்சவரு மாதிரி கேக்கிறே?”

“அவரு எங்க ஊருக்காரருதானே?” என்றாள் அவள்.

“என்னது? உன்னோட ஊரு பீகாரா?” என்றான் அவன் ஆச்சரியத்துடன் .

“எங்க ஊரு தமிள்நாடுதான? தமிள்நாட்டுக்காகத்தான வெளையாடறாரு” என்றாள்.

அவன் ஒரு கணம் திகைத்து விட்டான். அவள் மிகவும் சாதாரணமாகச் சொன்னதின் உள்ளே இருந்த பரந்து விரிந்த ஒரு மனதின் வியத்தகு 

நேர்த்தி அவனை அயர அடித்து விட்டது. 

“தேவானை, யூ ஆர் கிரேட்” என்றான் அவன்.

“சும்மா எதுனாச்சும் இங்கிலீசுலே என்னையப் போட்டுத் திட்டாதீங்க” என்று சிரித்தாள்.          

“கிரிக்கெட்டு எல்லாம் பாக்குறே. கெட்டிக்காரியா பேசுறே  நீ ஏன் படிக்கலே?” என்று எதிராஜ் அவளிடம் கேட்டான்.

“போறும்னுட்டாங்க. ‘கலியாணம் பண்ணப் போறோம். மேலே எதுக்குப் படிப்பு’ன்னாங்க.”

“என்னது? பதினெட்டு வயசிலேயேவா?”

“ஆமா. எம்  மாமன் மிலிட்டிரிலே இருக்காரு. அவுரு லீவுலே வரப்போ கலியாணத்தை முடிச்சிரலாம்னு எங்கம்மாவும் மாமாவும் சொல்றாங்க. சின்னவங்களா இருக்கறச்சேயே கட்டி வச்சிட்டா சந்தோசமா இருக்குங்களேன்னு எங்கம்மா அவங்க அண்ணாரு  கிட்டே ஒரு நா சொல்லிக்கிட்டு இருந்தாங்க”.

அவள் பேசியபடியே விளக்குமாறைத் தலை கீழாகப் பிடித்துத் தரையில் ஐந்தாறு முறை குத்தினாள்.

“எதுக்கு அப்படிப் பண்ணுறே?”

“அப்பப்ப இறுக்கி வச்சிரணும். இல்லாட்டி கட்டு விட்டுப் போயி தனித் தனியா கீள விள ஆரமிச்சிரும்னு எங்கம்மா சொல்லும்>”

அவன் சில வினாடிகள் யோசித்து விட்டு “உங்கம்மா சொல்லுறதும் கரெக்டுதான்” என்றான்

பிறகு அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே “மாப்பிளே எப்படி இருப்பாரு?” என்று கேட்டான்.

“எப்படீன்னா?”

“என்னைய மாதிரி அழகா இருப்பாரா?”

அவள் ஒரு முறை அவனைப் பார்த்து விட்டுச் சிரித்தாள், 

“நா நிச்சயமா உன் கலியாணத்துக்கு வருவேன்”.

அவள் அதைக் கேட்டுச் சிரித்தாள்.

“எதுக்குச் சிரிக்கிறே?”

“நீங்க படிப்ப முடிச்சிட்டு வரதுக்குள்ள எனக்குக் கலியாணம் ஆயிரும்.”

தொடர்ந்து “நீங்க ஊருக்குப் போனதுக்கப்பாலே என் நியாபகந்தா உங்களுக்கு  இருக்கப் போகுதாக்கும்? அங்க உங்க கிளாசுலே இருக்குற பொம்பளைப் பிள்ளைங்களைப் பாத்துப் பேசுறதிலேயே உங்களுக்குப் பொளுது போயிரும்.”

“யார் சொன்னாங்க உனக்கு அப்பிடி?”

“பெரியம்மாதான்.”

அவனுடைய அம்மா சொன்னாள் என்கிறாள். அம்மாவின் உளவாளி யார்  என்று அவனுக்குத் திகைப்பு ஏற்பட்டது.

“நிச்சயம் நான் உன் கலியாணத்துக்கு வரேன்” என்றான் அவன் மறுபடியும்.

அவள் சிரித்தபடி “வாங்க, வாங்க. நிச்சயமா வாங்க. நீங்க எவ்வளவு பெரிய படிப்பு படிக்கிறீங்க? நீங்க வந்தா எங்களுக்கு எல்லாம் பெருமை

தான். நாங்க எல்லோரும் சந்தோசப்படுவோம்.”

அவள் குரலில் ஒலித்த உண்மையான அன்பு அவனை நெகிழ வைத்தது.

“முக்கியமா நான் வர்றது மாப்பிள்ளையைப் பாக்கத்தான்” என்றான் எதிராஜ்.

அவள் வாய் விட்டுச் சிரித்தாள்.

பரிபூரண மலர்ச்சியின் பிரவாகம் அந்த ஹாலில் துள்ளிக் குதித்து ஆடிற்று. 

Series Navigationகாற்றுவெளி வைகாசி இதழ்பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *