நாவல்  தினை              அத்தியாயம் பதினான்கு     CE 300 பொது யுகம் 300

This entry is part 12 of 12 in the series 14 மே 2023

  நாவல்  தினை              அத்தியாயம் பதினான்கு     CE 300                                                                                                பொது யுகம் 300 வழி மறந்த கடைசிப் பறவை வீடு திரும்பும் பின் அந்திப் பொழுதில் இந்தப் பெண்கள் திரும்பினார்கள்.   இலுப்பெண்ணெய் தாராளமாக ஊற்றிப் பெரிய பருத்திப் பஞ்சுத் திரிகள் எண்ணெய் நனைத்துக் கொளுத்திய சுடர்கள் தெருவெங்கும் வீட்டு மாடப்புரைகளில் இருந்து ஒளி வீச இன்னும் சிறிது நேரத்தில் இரவு நிலம் போர்த்தும்.  குயிலிக்கு வியப்பாக இருந்தது. […]

பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்

This entry is part 11 of 12 in the series 14 மே 2023

முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா (சிறுகதைத் திறனாய்வுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கட்டுரை) குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய படைப்புக்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் என்பதோடு பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இவர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டிருப்பினும் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். ‘அணையா தீபம்’ என்ற சிறுகதையுடன் ஈழநாடு வார மலரில் எழுத்துலகில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், […]

இடைவெளி 

This entry is part 10 of 12 in the series 14 மே 2023

ஸிந்துஜா  எதிராஜ் பரீட்சை முடிந்து ஒரு வார லீவில் ஊருக்கு வந்திருந்தான். வந்தது முதல் வீட்டில் கால் தரிக்கவில்லை என்று  கனகவல்லி   கணவனிடம் புகார் செய்தாள். முதல் நாள் ‘பிரென்ட்சோட ஓட்டல்ல சாப்பிட்டு விட்டு வந்தேன்’ என்று அவனது அம்மாவின் வயிற்றெ ரிச்சலைக் கொட்டிக் கொண்டான். அதனால் அவன் ஊருக்குத் திரும்பிப் போகும் வரை எல்லா வேளையும் வீட்டில்தான் சாப்பிட வேண்டும் என்று அவனது அப்பா சிவகுரு உத்திரவு போட்டு விட்டார். காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு […]

காற்றுவெளி வைகாசி இதழ்

This entry is part 9 of 12 in the series 14 மே 2023

வணக்கம்,காற்றுவெளி வைகாசி இதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.அனைத்துப்படைப்பாளர்களுக்கும் எமது நன்றி.இதழின் படைப்பாளர்கள்:        கவிதைகள்:        பிரான்சிஸ் திமோதிஸ்        பாரியன்பன் நாகராஜன்        கவிஞர் சாய்சக்தி சர்வி பொள்ளாச்சி        அ. செல்வராஜ்,        துறையூரான் ( சின்னையா  சிவநேசன்)        வேலணையூர் ரஜிந்தன்.          ஈழபாரதி        […]

நிழலின் இரசிகை

This entry is part 8 of 12 in the series 14 மே 2023

செ.புனிதஜோதி அண்டைவீட்டுக்காரியின் பால்கனியை என் சாளரத்தின் வழியே இறக்கிப்போட்டு விளையாடுகிறது நிழல் தொட்டிச்செடியில் அசைந்தாடும் மலர்கள் கொடிகயிற்றோடு உறவாடும் உடைகள் கூண்டுகிளியென என் வரவேற்பறையில். நிஜத்தை நிழற்படம் எடுத்து ஒட்டிக்கொண்டிருக்கிறது ஒளிப்படக்காரனாய் அவர்கள் என் வீட்டிற்குள்ளிருந்துதான்  அவர்கள்  வீட்டிற்குள் செல்கிறார்கள்  அன்னியர்கள் வந்துசெல்வது  அச்சமாகத்தான் இருக்கின்றன.  என் வீட்டிலுள்ள எந்த அறையை யார் வீட்டிற்குள் கிடத்தி விளையாடுகிறதோ ?  யாரிடமும் அனுமதி  பெறாமல்   பொம்மையைக் கண்டவுடன்  விளையாடும் குழந்தையாய்.  நிழல் நிஜத்தின் முகத்தை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது அவரவருக்கு […]

திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

This entry is part 7 of 12 in the series 14 மே 2023

22.04.2023 அன்று கடலூரில் நடைபெற்ற திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதிய அயல்வெளிப் பயணங்கள் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் இப்புத்தகம் திறனாய்வு செய்யப்பட்டது. அரங்க.அருள்ஒளி மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். இது உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளை தந்த ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு. ஆனால், புத்தகங்கள் ஒரு வாசகனுக்கு உள்ளே கண்டெடுக்கக் கூடியவைகள் ஏராளம். தனிமனிதன் வாழ்க்கையை, சமூகத்தின் வாழ்வியலை மாற்றி புரட்சியை மறுமலர்ச்சியை உருவாக்கி வரலாற்றை வடிவமைக்கும் நுட்பங்களை நூல்கள் தான் செய்கின்றன. கார்ல் மார்க்ஸ், லியோ டால்ஸ்டாய், […]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 6 of 12 in the series 14 மே 2023

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும் ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை. காரணங்கேட்டவரிடம் கூறினார்: கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும் குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும் சிறுமதியாளர்களும் செத்த உயிர் தாங்கியோரும் சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக சாதிப்போரும் சக உயிரைப் பகடையாக்கும் சூதாடிகளும் அபத்தப்பேச்சே அறிவுசாலித்தனமாய்க்கொள்வோரும் அடிவாரத்தில் நின்றுகொண்டு மலைமுகடைப் பகடி செய்வோரும் பட்டுப்பூச்சிக்கு மனிதனைப்போல் பாடவருமா என்று  முட்டாள்தனமாய் மார்தட்டிக்கொள்வோரும் கட்டாயம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவேன் என்று துண்டுபோட்டுத் தாண்டுகிறவர்களும் உன்னதங்களை அடையாளங்கண்டு அங்கீகரிக்க மாட்டேன்  என்ற […]

வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்

This entry is part 5 of 12 in the series 14 மே 2023

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை. உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்  சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்  காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய மாடமாளிகைகளும்  கூடகோபுரங்களும் அதிகரித்துக்கொண்டேபோகின்றன. அதனாலென்ன ? ஒருதரப்பு அன்னாடங்காய்ச்சிகளை இன்னொரு தரப்பு அன்னாடங்காய்ச்சிகளுக்கெதிராகத் திருப்பிவிட்டால் பின் பரபரப்பாய்த் தங்களுக்குள் அடித்துக்கொள்வார்களேயல்லாது பதுக்கியிருக்கும் கருப்புப்பணத்தின் பக்கம் கவனம் திரும்பாது. அடிப்பதற்கு ஆக்ரோஷமாக முழங்குவதற்கு அசிங்கசிங்கமாகத் திட்டுவதற்கு […]

அடையாளம்

This entry is part 4 of 12 in the series 14 மே 2023

ஆர். வத்ஸலா இயற்பியலில் முதுநிலைப் பட்டதாரி மென்பொறியாளர் பெண்ணியவாதி பெரியாரின்  அம்பேத்கரின் மார்க்ஸின்  சிந்தனைகள் அத்துப்படி தனித்து நின்று  தாய் தந்தையரை பேணி  மக்களை வளர்த்தவள் ஆனால் என் மக்களின் மனதில் நான் ஒரு அம்மா அம்மா அம்மா

அம்மாவின் செல்லம்

This entry is part 3 of 12 in the series 14 மே 2023

அம்மாவின் செல்லம் ஆர். வத்ஸலா அம்மாவுக்கு என்னைத் தான் மிகவும் பிடிக்கும் எனக்கு  சீட்டித் துணியில் பாவடை தானே தைத்து போடுவாள் தீபாவளிக்கு – அழகாக தைக்க வராவிட்டாலும் – அது குட்டை பாவடையாகியும் ஒரு வருடம் போடுவேன் பள்ளித்தோழிகள் அதனை பார்த்து சிரித்தால் கோபம் வரும் எனக்கு அண்ணனுக்கு உண்டு  ரெடிமேட் கடையில்  நீள கால் சராயும் சட்டையும்  தீபாவளிக்கும் பொங்கலுக்கும்  அவனுக்கு உண்டு வாரம் ஒரு முறை இரண்டு  சாக்லெட் எனக்கு ஒன்று என் […]