This entry is part 2 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024


அமீதம்மாள்

வெட்டுக்கிளிக் கூட்டம்
சிட்டுக்குருவியைத்
தின்றுவிட்டன
நெகிழி ஆப்பிள்கள்
அசல் ஆப்பிளை
அழித்துவிட்டது
கற்பூரத்தில்
கருவாட்டின் வாசம்
பாலையும் இரத்தத்தையும்
மென்பொருள்
செய்கிறது
செயற்கை நுண்ணறிவு
நெய்த ஆடை
நிர்வானம் மூடவில்லை
புணர்தலின்றி
பிள்ளை குட்டிகள்
ஊடகங்களில்
பொய்களுக்கே
பூமாலை
கடல்களுக்கு
மேய்ச்சல் நிலமாய்
பூமி
மண்ணை வெல்ல
மனிதக் கொலைகள்
விவசாய நிலங்களில்
வெடிகுண்டு விதைகள்
பற்றி எரிகிறது
மொத்தக்காடும்
உதிக்கிறது சாம்பலில்
புதிய காடு
அமீதாம்மாள்

Series Navigationநின்றாடும் சிதிலங்கள்.ஆய்ச்சியர் குரவை – பாகம் ஒன்று