This entry is part 5 of 8 in the series 21 டிசம்பர் 2025

தன் மழை

தாத்தா தோளிலிருந்து
பிஞ்சு விரல் மொக்கால்
உள்ளங்கையில் மழை கவ்வி ஏந்தும் குழந்தை
சளி புடிச்சிடும்  என்பார் தாத்தா
அவருக்குள் இருக்கும்
பழைய மழை நினைவில் கொண்டு
தாத்தா தலை திரும்பியதும்
மறுபடி மழை பிடிக்கும் குழந்தை விரல் நீட்டும்
புதுப் புது மழை தேடி
உடையெல்லாம் நனைந்து
மழைக்குள் நனைந்து
தன் மழை என்ற ஒன்றை அடையாளம் காணும்!

Series Navigationவாழ்க்கைவைபவம்