This entry is part 6 of 8 in the series 29 மார்ச் 2026

காலடிவிஷம்

இந்த இடம் இன்னும்
கொஞ்சநேரம் அமைதியுடனிருக்கும்
ஆம்
இரவை நனைத்து காற்றைத் தடவி
குருடனாய் நடந்த நேற்றிரவு மழையின்
மிக விசித்திரமுள்ள மண் கையெழுத்தை
மணல் வரிகளை எவரும்
கலைக்க வராத கால்களால்
இப்பிரதேசம் இன்னும் மெளனம் சூழ்ந்துள்ளது
அதோ பேச்சு சப்தம் கேட்கிறது
கால் புதைய புதைய அவை மணல் நோக்கி நடந்து வருகின்றன
இனி வேலையில்லை
இரசனை கொண்ட மணல் வரிகள் எழுதிய இரவு மழைக்கும்
அது கண்டு கவி வரிகள் எழுதிய எனக்கும் என நினைக்கின்றேன்
ஒரு வேளை தப்பவும் வாய்ப்புண்டு.

– பா.சத்திய மோகன்

Series Navigationகதைப்போமா நண்பர்கள் குழுமம் – லாவண்யா சுந்தரராஜன் எழுதிய “முத்துமாலை” சிறுகதைகதைப்போமா நண்பர்கள் குழுமம் – ஏப்ரல் 2026 மாத நாவல் திறனாய்வு