This entry is part 8 of 9 in the series 12 ஏப்ரல் 2026

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்

பரனே திருக்கடைக்கண் பாராயோ? என்றன்

பாவத்துயர் அனைத்தும் தீராயோ?

 திறம் இலாத எனை முனியாமல் – யான்

செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் – பரனே

திருக்கடைக்கண் பாராயோ?

மாய வலையில் பட்டுச் சிக்காமல் லோக

வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் — பரனே

திருக்கடைக்கண் பாராயோ?

அடியேனுக் கருள் செய் இப்போது  உன

தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? — பரனே

திருக்கடைக்கண் பாராயோ?

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் – கீர்த்தனை 

வில்லாளன், சிம்பாரி மலை, பாபுவா நியூ கினியா

“மகனே.. இப்போது, உனக்கு, பத்து வயது முடியப்போகிறது. இனி, நீ முழு சிம்பாரி ஆண் ஆகப் போகிறாய். அதற்காய், நீ, என்னையும், உன் அம்மாவையும், ஐந்து வருடங்கள், பிரியப் போகிறாய் மகனே..” என்று, எனது அப்பா, உற்சாகம் ஆகச் சொன்னபோது, எனக்கு அது கவலையாக இருந்தது.

ஆனால், அதே நேரத்தில், நான், இந்த ஐந்து வருட வனாந்திர வாசம் போய், மூங்கேன்யு என்ற முழு சிம்பாரி ஆண் ஆகி விட்டால், எனது அன்புப் பூவரசி எனக்கு உடனேகிடைப்பாள். அதன் பிறகு, அவளோடு நான் நிரந்தரமாக, இணை பிரியாமல் வாழலாம் என்ற எனது நினைப்பு, என் அம்மா, அப்பாவைப் பிரிந்து போகும், எனது கவலையை, முற்றிலும் மறக்கடிக்கச் செய்தது.

நான் பிரிந்து போக, உற்சாகமாகத் தயார் ஆனேன்.

அப்பா நடந்து போய், எங்கள் சிம்பாரி இன நாட்டாமையை, எங்கள் வீட்டிற்கு, கூட்டி வந்தார். நாட்டாமை, அவர் கூடவே, ஒரு சிம்பாரி இன ஆண்கள் கூட்டத்தையும்கூட்டிக்கொண்டு, எங்கள் வீட்டிற்கு வந்தார்.

வந்த ஆண்கள், பலரின் கைகளில், புல்லாங்குழல் இருந்தது. அவர்கள், அனைவரும் ஒன்று சேர்ந்து, புல்லாங்குழல் ஊத, எங்கள் வீடே, ஒரு திருவிழா வீடு போல மாறிப் போனது.

நாட்டாமை எனது அருகில் வந்தார். என்னை அன்புடன் கட்டிப் பிடித்துக்கொண்ட அவர், “என் க்வலாயூ.. என் க்வலாயூ…” என்று சொன்னபோது, அம்மாவும், அப்பாவும் புன்னகை செய்தார்கள். க்வலாயூ என்றால், பொடிப்பையன் என்று அர்த்தம்.

கொஞ்ச நேரம் கழித்து, என்னைப் பிரியப் போகும் சோகத்தில், அம்மாவின் கண்கள் கலங்கத் தொடங்கியது. அதைப் பார்த்த எனக்கு, கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

தென்னங்கீற்று போன்ற குச்சிகளை சீவி, அவற்றை சிறு சிறு குச்சிகளாக உடைத்துக் கொண்டு வந்து இருந்தார் நாட்டாமை. அவற்றில் ஒரு கூர்மையான குச்சியை எடுத்து, எனது மூக்கில் சொருகினார் நாட்டாமை. நான் “ஆ’ வென்று அலறினேன்.

எனது மூக்கில் ரத்தம் வழிந்தது. என் அலறலைப் பார்த்த அப்பா, “ஒன்றும் இல்லை மகனே.. ஒன்றும் இல்லை மகனே.. உனது மூக்குச் சில்லை மட்டுமே, நாட்டாமை உடைத்து இருக்கிறார். கொஞ்ச நேரத்தில், வலி குறைந்துவிடும்” என்றார் அப்பா.

நாட்டாமை, என்னை, அம்மா முன்னால், இழுத்துக்கொண்டு போய், நிறுத்தினார். எனது அம்மாவைப் பார்த்து, “இதோ இந்த க்வலாயூ பொடிப்பையனின் இரத்தமானது, இதோ இந்தத் தாயின் இரத்தம். இந்த இரத்தம், தாய்மை தந்த இரத்தம். பெண்மை தந்த இரத்தம். அந்த இரத்தம், இந்தப் பையனை விட்டு, இனி அகன்று போகும்.” என நாட்டாமை சத்தமாகச் சொன்னார்.

நாட்டாமையின் குரலைக் கேட்டுக் கொண்டே, எனது அம்மா, எங்கள் சிம்பாரி இன தேவனை, வணங்கிக் கொண்டு இருந்தாள். அவள் கண்கள் மூடி இருந்தன.

“இந்த சிம்பாரி இன க்வலாயூ பையன், வேட்டையாடப் பிறந்தவன். நம் சிம்பாரி இனத்தைப் பெருக்கப் பிறந்தவன். எனவே, அவனுக்கு வீரம் சொல்லித் தரப்பட வேண்டும். ஆண்மை சொல்லித்தரப் பட வேண்டும்.” நாட்டாமை, சத்தமாகப் பேசினார். 

“அதற்காக, இந்த க்வலாயூ பொடிப் பையன், க்வாட்னியூ ஆண் ஆக முதிர்ச்சி அடையவேண்டும். அதற்காக, இவனது தாயிடம் இருந்து, இவனைப் பிரித்து, வனாந்திரம் கூட்டிப் போகப் போகிறோம்” 

நாட்டாமை பேசியதைக் கேட்ட, கூட வந்திருந்த ஆண்களும், எனது அப்பாவும், “ஊ.. ஊ” என்று, உற்சாகமாகக் குரல் எழுப்பினர். எனக்கு இப்போது பயம் வந்தது.

நாட்டாமையும், வந்திருந்த ஆண்கள் கூட்டமும், என்னை அழைத்துக்கொண்டு, எனது வீட்டையும், தாயையும் திரும்பிப் பார்க்காமல், என்னை நடக்கச் சொன்னார்கள். அவர்களும் திரும்பிப் பார்க்காமல், நடந்தார்கள். எனது அப்பா மட்டும், அவர்களைப் பின் தொடர்ந்தார்.

பலிக்குக் கொடுக்கப்படும் ஆடு போல, நான் மிரட்சியுடன், கூட்டத்தைப் பின் தொடர்ந்தேன். ஆனால், வனாந்திரம் போன பிறகு எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. காரணம், அங்கே நிறைய என் வயதுச் சிறுவர்கள், கூட்டமாக, நின்று கொண்டு இருந்தார்கள். நானும், அவர்களுடன் போய் சேர்ந்து கொண்டேன்.

வனாந்திரத்தில், பெரிய, நீளமான, ஒரு மூங்கில் குடில் போடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த பிரமாண்டமான மூங்கில் குடிலுக்கு, தவழந்து செல்லக் கூடிய அளவில் மட்டுமே, ஒரு சிறு வாசல் இருந்தது.

நாங்கள் சிறுவர்கள் யாவரும், முதலில் அந்தக் குடிலுக்குள் செல்ல அனுமதிக்கப் படவில்லை. எனவே நாங்கள், வெளியிலேயே காத்துக்கொண்டு இருந்தோம்.

கூட்டத்தில் இரண்டு திடகாத்திரமான வாலிபர்கள், புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு இருந்தார்கள். ஒருவன் பெரிய புல்லாங்குழலும், இன்னொருவன் சின்னப் புல்லாங்குழலும் வாயில் வைத்து ஊதிக்கொண்டு இருந்தார்கள்.

நாங்கள் சிறுவர்கள் அனைவரும், அந்தப் புல்லாங்குழல் வாசிப்பையே பார்த்துக்கொண்டு இருந்தோம். கொஞ்ச நேரத்தில், குடிலின் உள்ளிருந்து, அந்தச் சின்ன வாயில்வழியே, யாரோ ஒருவர், மந்திரவாதி போன்ற தோற்றத்துடன், கையில் மண்டை ஓடு சகிதமாக, வெளியே வந்தார்.

“இவர்தான், மாந்தரீகவாதி மசளையான் என, கூட்டத்தில் ஒருவர், சத்தமாகச் சொன்னார். 

நான், அந்த மாந்தரீகவாதி மசளையானை கவனித்தேன். அவரது, மார்பகங்கள் பெரிதாக இருந்தன. அவரது பெரிய, முலைகளை நான் கவனித்த போது, எனக்கு, என் அம்மா, நினைவில் வந்தாள்.

மாந்தரீகவாதி மசளையான் பின்னாலேயே, நாட்டாமையும், குடிலில் இருந்து வந்தார். கூடவே, நிறைய சிம்பாரி இன ஆண்களும், அந்த சின்ன குடில் வாயில் வழியாக, வெளியேவந்தார்கள். 

அந்த ஆண்கள் எல்லோரும், வெள்ளைக் கோடுகளை, தங்கள் முகத்திலும், நெஞ்சிலும், பட்டை பட்டையாகத் தீட்டிக்கொண்ட தோற்றத்தில், வந்து இருந்தார்கள். அவர்கள் அனைவரின் மூக்கிலும், காட்டுப்பன்றிகளின் கொம்பால் செய்யப்பட்ட, மூக்கு வளையங்கள் இருந்தன.

அந்த எல்லா ஆண்களும், வண்ண வண்ணக் கச்சைகளை, அவர்தம் இடுப்பில் கட்டி இருந்தார்கள், அவர்தம் இடுப்புக் கச்சைக்குக் கீழே, அவர்தம் பெரிய பெரிய ஆண்குறிகள், மற்றவர் பார்க்கும் அளவிற்கு, வெளியே, தொங்கிக்கொண்டு இருந்தன. 

இது, வழக்கமான காட்சிதான் என்றாலும், விழாவின் போதுமட்டும் அணிந்த, அந்த வண்ண வண்ண இடுப்புக் கச்சைகள், அவர்கள் ஆண்குறிகளுக்கு, ஒரு தனிப்பட்ட, சிறப்பு அழகைக் கொடுத்தது.

திடீரென்று, “ஆ..ஆ” என வானத்தைப் பார்த்து, அந்த மாந்தரீகவாதி, கத்தினார். உடனே, பயத்துடன், நாட்டாமையும், மற்ற சிம்பாரி ஆண்களும், மந்திரவாதி காட்டிய திசையில், வானத்தைப் பார்த்து வணங்கிக் கொண்டார்கள்.

கூட்டத்தில் இருந்த, எல்லாரையும் ஆசிர்வதித்து விட்டு, மாந்தரீகவாதி மசளையான் அங்கிருந்து நகன்றார். நாட்டாமை, விழாவைத் தொடங்கி வைத்தார்.

நாட்டாமை, எங்கள் அனைவர் முன்னால், பெருங்குரலெடுத்துப் பேசினார். “எனது அன்புச் சிறுவர்களே… உங்கள் எல்லோரையும், குடிலுக்குள் அழைக்கிறோம். ஆனால், இந்தப் புனிதமான குடிலுக்குள் வர வேண்டும் என்றால், நீங்கள் சிறுவர்கள் யாவரும்,முதலில், புனிதம் ஆகவேண்டும்.. சரியா?” என நாட்டாமை கேட்டவுடன், பிள்ளைகள் மலங்க மலங்க விழித்தார்கள்.

நாட்டாமை இன்னும் கொஞ்சம் விளக்கினார். “சிறுவர்களே, பெண்பால் மட்டுமே குடித்துக் குடித்து, இன்னும் நீங்கள்,வீட்டுப் பிள்ளைகளாகவே, இருந்துகொண்டு இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் வேட்டையாடப் பிறந்தவர்கள். நம், எதிரிகளை அழிக்கப் பிறந்தவர்கள். எனவே, உங்கள் தாய்ப்பால் வாசம், முதலில், உங்களிடம் இருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு, நாங்கள் பெரியவர்கள், உங்களைத் தயார் செய்யவேண்டும். சம்மதமா?” என்று எங்களைப் பார்த்துக் கேட்டார்.

என்னோடு சேர்த்து, பல சிறுவர்கள், “சரி..” என்று, உற்சாகமாகச் சொன்னார்கள். ஒரு சில சிறுவர்கள், வாயைத் திறக்காமல், மிரள மிரள விழித்தார்கள்.

உடனே, ஒருவர் அருகில் இருந்த மேட்டுக்குப் போய், அங்கிருந்து, பெருங்காஞ்சொறி செடிகளை, இலைகளைக் கிள்ளாமல், அப்படியே கொண்டு வந்தார். 

எங்களைச் சுற்றியிருந்த சிம்பாரி ஆண்கள், எங்கள் நிர்வாண உடம்பை, அந்த பெருங்காஞ்சொறி செடிகளைக் கொண்டு விளாசு விளாசு என்று விளாசினார்கள். சிறுவர்கள் நாங்கள், வலியோடு, ஓடினோம்.

எனது உடம்பெல்லாம், பெருங்காஞ்சொறி செடிகள் தந்த அரிப்பு. நான் சொறியச் சொறிய, எனது உடம்பெல்லாம் புண் ஆனது. எனக்கு மட்டுமல்ல, எல்லாச் சிறுவர்களுக்கும், இதே நிலைதான். 

சில சிறுவர்கள், அரிப்பின் கொடுமை தாளாமல் அழுதார்கள். ஆனாலும், அதையெல்லாம் போருட்படுத்தாது, பெரியவர்கள், சிறியவர்களை, விளாசு விளாசு என்று விளாசிக்கொண்டே இருந்தார்கள். 

அந்தக் கூச்சல் குழப்பத்துக்கிடையே நாட்டாமை, பெருங்குரலில், மறுபடியும் சத்தம் போட்டார். “க்வலாயூ சிறுவர்களே.. நீங்கள் இப்போது புனிதமாகி விட்டீர்கள். அனைவரும், ஒருவர் பின்னால் ஒருவராய், குடிலுக்குள் நுழையலாம்” என்றவுடன், நாங்கள் உடனே குடிலுக்குள், தவழ்ந்து தவழ்ந்து செல்லலானோம்.

அந்த நுழையும் பாதை, மிகக் குறுகலாக மட்டும் இல்லை, நுழையும் வாயிலின் உள்பாகத்திலும், நீண்ட தூரம் நாங்கள் தவழ்ந்து, தவழ்ந்து செல்ல வேண்டி இருந்தது.

அப்படித் தவழ்ந்து தவழ்ந்து உள்ளே செல்லும்போது, மேலே கூரையின் உள்புறம் நீட்டிக்கொண்டு இருந்த கூர்மையான குச்சிகள், எங்கள் முதுகைக் கிழித்து, ரத்தக்காயப் படுத்தின. 

இரத்தம் வழியும் உடம்புடன், நாங்கள் சிறுவர்கள், குடிலின் உள்ளே சென்றோம்.

குடிலின் உள்புறம், பெரிய அளவில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நாங்கள் எல்லோரும் வட்ட வடிவமாக உட்கார்ந்தோம். எங்களுக்கு இடையே இடையே, சிம்பாரி ஆண்களும் உட்கார்ந்தார்கள்.

நாங்கள் வட்டமாக உட்கார்ந்த இடத்தின் ஓரத்தில், விதவிதமான உணவுகள், சிறு மலை போல, குவித்து வைக்கப்பட்டு இருந்தன. சூடான பன்றிக்கறி, நல்ல வாசமான கஞ்சி, பனங்கிழங்கு, மொச்சை போன்ற பயறு வகைகள், இப்படி பல உணவுகள் அங்கே இருந்தன.

எல்லாச் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது. சிலர் மது குடித்தார்கள். குடித்துக்கொண்டே, நிர்வாணமாக, எங்கள் முன்னே நடனமாடினார்கள்.

அப்படி ஆடுகையில், சில ஆண்கள், இருவர் இருவராக, ஒருவரது முகத்தை, இன்னொருவர், தேய்த்துக்கொண்டேஆடினார்கள். அப்படி கன்னத்தோடு கன்னம் உரசி ஆடுகையில், அவர்கள் மகிழ்ச்சியில் சிரித்தார்கள்.

சிலர், தங்கள் ஆண்குறியை, இழுத்து, இழுத்து பெரியதாக்கி விட்டு, அதை ஆட்டி, ஆட்டி ஆடினார்கள். முன்னும், பின்னும் அவர்கள், தங்கள் இடுப்பை ஆட்டி, ஆட்டி ஆடியபோது, பலர்சிரித்தார்கள்.

“சிறுவர்களே.. கற்றுக்கொள்ளுங்கள்.. கற்றுக்கொள்ளுங்கள்” என்று, நடனமாடியவர்களில் ஒருவர் உரக்கக் கத்தினார். மற்றவர்கள் அதை ஆமோதிப்பது போலத் தலையாட்டினார்கள்.

கடைசியில், எங்கள் சிறுவர்கள் அனைவரின் கையிலும்,  மூங்கிலால் செய்த புனிதக்குழல் கொடுக்கப்பட்டது. அதை, வாயில் வைத்து எப்படி வாசிப்பது என்று, எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. நாங்கள் சிறுவர்கள் அப்படியே செய்தோம்.

அப்புறம், நாட்டாமை “மூங்கேன்யு.. மூங்கேன்யு” என்று சொன்னவுடன், அங்கிருந்த பலசாலியான மூங்கேன்யு ஆடவர்கள் யாவரும், ஒவ்வொரு சிறுவர்களுக்கும் முன்னேவந்து நின்று கொண்டார்கள். 

எனக்கு முன்னே, குத்தீட்டி மாமா நின்று கொண்டார். என்னைப் பார்த்து அன்புடன் அவர் சிரித்தபோது, எனது பயம் குறைந்து போனது.

பின்னர், நாட்டாமை, எங்கள் கடவுளை ஏதோ வேண்டினார். அவர் வேண்டி  முடித்தவுடன், ஒவ்வொரு மூங்கேன்யு ஆணும், அவருக்குக் கொடுக்கப்பட்ட சிறுவனின் கையைப் பிடித்துக்கொண்டு, அந்த நீண்ட குடிலின், அந்தப் புறம் சென்றார்கள்.

குத்தீட்டி மாமாவும், என் கையைப் பிடித்து, அழைத்துக்கொண்டு போனார். அங்கே, நிறைய, தனித்தனி அறைகள் இருந்தன.

ஒவ்வொரு மூங்கேன்யு ஆணும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறுவனைக் கூட்டிக்கொண்டு, அந்தத் தனியறைகளில் புகுந்து கொண்டார்கள். நானும், குத்தீட்டி மாமாவும், ஒரு தனியறைக்குப் போனோம்.

உள்ளே போனவுடன், மாமா என்னிடம் கேட்ட முதல் கேள்வி, “வில்லாளன்.. உனக்கு யாராவது பெண் நண்பர்கள் இருக்கிறார்களா?” என்பதுதான்.

நான் மகிழ்ச்சியுடன் சொன்னேன். “இருக்கிறாள் மாமா.. பெயர் பூவரசி..” என்றேன். 

மாமா சொன்னார்.. “நல்லது… அவளோடு நீ, நன்கு பிள்ளைகள் பெற்று, நம் இனத்தை வாழ வைக்க, உனக்கு போதிய ஆண்மை தேவை. அந்த வீரியமான, ஆண்மையை, நான் இப்போது, உனக்குத் தரப் போகிறேன். உனக்கு சம்மதமா?” 

மாமா தொடர்ந்தார். “ஒரு பெண்ணின் பால், எவ்வளவு புனிதமானதோ, அதைப் போல, ஒரு ஆணின் பாலும், புனிதமானது. பெண்ணின் பாலில், மென்மையும் அன்பும் கருணையும் இருக்கிறது. ஆணின் பாலில், வீரமும், வீரியமும், வெற்றியும் இருக்கிறது என்ற, நமது இன நம்பிக்கையை, நீ மதிக்கிறாயா?”

நான், பேசாமல், சரி என்று தலையாட்டினேன்.

“ஒரு ஆசிரியராக நான் உனக்குக் கற்றுத்தரும், இந்த ஆண்மை பகிர்தலை, இனி வருங்காலத்தில், நமது இனச் சிறுவர்களுக்கு, கற்றுத் தருவாயா?” நான், பேசாமல், சரி என்று தலையாட்டினேன்.

“இந்தக் புனிதக்குழல் திருவிழாவைத் தவிர, வேறு எந்த இடத்திலும், வேறு ஒரு ஆணுக்கு, நீ ஆண்பால் புகட்டுதல் கூடாது.. அப்படி புகட்டினால், நீ பின்னர், மூங்கேன்யு என்று அழைக்கப்பட மாட்டாய்.. மாறாக, க்வொலு ஆட்ம்வால், அதாவது மூன்றாம் பாலினம் என்று அழைக்கப்படுவாய்..”என்றார்.

“எனக்கு நீங்கள் இப்போது சொன்னது புரியவில்லை.” என்றேன்.

“ஆணோடு ஆண், விந்துப் பரிமாற்றம் செய்வது என்பது, இந்தத் திருவிழாவில் மட்டுமே அனுமதிக்கப்படும். அது முடிந்தபின், நீ மூங்கேன்யு என்ற முழு ஆண் ஆகிவிடுவாய். அப்படி, நீ ஆனால்தான், நீ வீரன் என்று அழைக்கப்படுவாய். உனக்கு, எல்லா வில் வித்தைகளும், கற்றுத் தரப்படும்.”

“மாறாக, இந்த ஆண்பால் புகட்டும் திருவிழாவில், உனக்கு ஆண்பால் புகட்டும்போது, உனக்கு காம உணர்ச்சி வந்தால், பின்னர் நீ க்வொலு ஆட்ம்வால் அதாவது மூன்றாம் பாலினம் என்று அழைக்கப்படுவாய். உனக்கு, அதன்பின், எந்த வில் வித்தையும் கற்றுத்தரப் பட மாட்டாது. புரிந்ததா?”

“அப்படி, நீ மூன்றாம் பாலினம் ஆக இருந்தால், உனது உணர்வுகள், ஒரு பெண் போல் மதிக்கப்படும். ஆனால், அதே நேரத்தில், நீ இந்த விழாவில், அதன்பிறகு, ஒரு போதும் கலந்து கொள்ள முடியாது. சரியா?”

குத்தீட்டி மாமா, சொன்னது எனக்குப் புரிந்தது. நான், பேசாமல், சரி என்று தலையாட்டினேன்.

இப்போது, மாமா, எனக்கு மிக அருகில் வந்தார். “நம் பட்டியில் மேயும், மாட்டின் பாலை நீ எப்படிக் கறந்து குடிப்பாய்?” என்று மாமா கேட்டபோது, நான், “அதன் காம்புகளை இழுத்து, பாலைப் பீய்ச்சி பின் பருகுவேன்” என்றேன்.

“அதேதான் இப்போது, இங்கேயும் நடக்கப் போகிறது. என சொல்லிக்கொண்டே, குத்தீட்டி மாமா, என்னை மண்டியிடச் செய்து, என் முன்னால், அவரது பெரிய ஆண்குறியுடன் வந்து நின்றார்.

நான், ஆண்பால் குடித்தேன். அப்படிக் குடிக்கையில், எனக்கு காம எண்ணம் ஏதாகிலும் ஏற்படுகிறதா.. என என் ஆண் குறியை கவனித்தார் மாமா. அப்படி எதுவும் நடக்கவில்லை.

எல்லாம் முடிந்தது. குத்தீட்டி மாமா, என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். “இன்றில் இருந்து நீ ஒரு வீரன்… வா.. இனி உனக்கு, ஐந்து வருடங்களுக்கு, எனக்குத் தெரிந்த எல்லா போர் வித்தைகளையும் சொல்லித் தருகிறேன்” என்றார்.

மாமா சொன்ன வார்த்தைகள் கேட்டு, நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இதோ ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. நானும், குத்தீட்டி மாமாவும், நிறைய விஷயங்கள் பேசினோம். சமயம் கிடைக்கும் போதெல்லாம், நான் எனது பூவரசி குறித்தும், மாமாவிடம் பேசினேன்.

மாமா சொன்னார், “இதோ இந்த வனவாசம் முடியப்போகிறது.. இனி, நீ பூவரசியைப் பார்க்கலாம். அவளோடு ஒன்றாகச் சேர்ந்து வாழலாம்”

நான் மகிழ்ச்சியில், ஆகாயத்தில் மிதந்தேன். பூவரசியைப் பார்க்க ஓடினேன். நான் எப்போதும் சந்திக்கும், அதே மந்தாரைப் பூ வனத்தில்தான், பூவரசியை, மறுபடியும் சந்தித்தேன்.

ஆனால்.. ஆனால், அந்த சந்திப்பு, அவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்று, நான் துளிக் கூட நினைத்ததில்லை.

அந்த பயங்கர சம்பவத்தை, நான் பூவரசியை விட்டுப் பிரிந்து ஓடிய காரணத்தை, என்னோடு, இப்போது, மலை ஏறிக்கொண்டு இருக்கும், இந்த வாலிபன் ராபர்ட்டிடம் சொல்லவும் எனக்கு மனதில்லை.

இருப்பினும், நான், எனது பூவரசியை நினைத்து, அதன் பின் அழாமல் இல்லை. எனது அடக்க முடியாத அழுகையை, ஜேம்ஸ்பாதரும், கவனிக்கத் தவறவில்லை.

“நாம் அனைவரும் மலைக்கு மேல் வந்து விட்டோம். மாணவர்களே.. இனி நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம்.. மறந்து விடவேண்டாம். நாளை நடக்க இருக்கும், கிறித்துவப் பயிற்சி வகுப்புக்கு எல்லோரும் வந்து சேருங்கள். உங்கள் உறவினர்களையும் கூட்டிக்கொண்டு வாருங்கள். 

ஜேம்ஸ் பாதர் இப்படிச் சொன்னவுடன், பிள்ளைகள் பிரிந்தார்கள். 

நான் கிராமத்துக்குள் ஓடினேன். பூவரசியைத் தேடினேன். அவளை எங்கு தேடியும் காணவில்லை.

தொடரும்

அழகர்சாமி சக்திவேல்

சிங்கப்பூர்

Series Navigationமழை புராணம்: 27 வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், ராம் தங்கம் எழுதிய “திருகார்த்தியல்”