யாரோ விட்ட பட்டம்
அறுந்து இங்கே பறந்து வந்து
மின்கம்பியில் மாட்டிக் கொண்டு
என் மனத்தைப் போலத்
தத்தளிக்கிறது;
ஒடிந்து விழுவேன் என்று
பயமுறுத்திக் கொண்டே
இன்னும் ஒடியாமல்
முருங்கை ஆடுகிறது;
உச்சிக் கிளைகளில்
கட்டிய தன் கூடு
விழுந்து விடுமோவென்று
காகம் பதைபதைக்கிறது;
இழுக்க முடியாமல்
இழுத்து வரும் காளைகள்
எப்பொழுது தொழுவம்
வருமென ஏங்குகின்றன;
வேண்டுதலுக்காகக்
கோயிலில் ஏற்றி வைத்த
அம்பாளின் அகல்விளக்கு
அணைந்துவிடக் கூடாதென்று
இரு கைகளின் விரல்களாலும்
அணைகட்டிப் பாதுகாக்கிறாள்
முதிர்கன்னி ஒருத்தி.
- மழை புராணம்: 28
- என்றும் இதே நிலைகள்
- உயிர்மையின் நாடி
- நளபாக நாஜிக்கள் !
- மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்: 8
- ‘ரிஷி’ [லதா ராமகிருஷ்ணன்]யின் கவிதைகள்
- வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், அடுத்து ஜெயந்தன் எழுதிய “மனச்சாய்வு”
- க. மோகனரங்கன் படைப்புகளைக் குறித்த ஓர் அரிய களஞ்சியம் – இந்தப் புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்?